தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் Empty 30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள்

Mon Jan 19, 2015 9:20 pm
[size=16]பாக்கர் வாடி[/size]
தேவையானவை: கடலை மாவு – 2 கப், அரிசி மாவு – ஒரு கப், சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன், கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) – ஒரு டீஸ்பூன், புளித் தண்ணீர் – கால் கப், கொப்பரைத் துருவல் – அரை கப், வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன், கசகசா – ஒரு டீஸ்பூன், சர்க்கரை, உப்பு – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 1
செய்முறை: கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து… உப்பு, சர்க்கரை, கறுப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி சேர்த்து, எண்ணெய் சேர்த் துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும். அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும். நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும். இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு…. எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 10, 15 நாட்கள்  வைத்திருந்து பயன்படுத்தலாம்.


[size=16]உருளைக்கிழங்கு முறுக்கு[/size]
தேவையானவை: மைதா – 2 கப், அரிசி மாவு – அரை கப், வேகவைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் தேங்காய் எண்ணெய் –  பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 2
செய்முறை: மைதாவை சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி, இட்லித் தட்டில் வேகவைத்து ஆறவிடவும். இத னுடன் அரிசி மாவு, மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், வெண்ணெய் சேர்த்து, மென்மை யான கெட்டி மாவாக பிசையவும்.  மாவை முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, பிறகு திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும். ஆறியபின் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
இதை ஒரு வாரம் வரை உபயோகப்படுத்தலாம்.


[size=16]நொக்கல்[/size]
தேவையானவை: கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் – தலா ஒரு சிட்டிகை, வெனிலா எசன்ஸ் – 2 துளி, நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 3
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவுடன் உருக்கிய நெய் சேர்த்து, நீர் விட்டு கெட்டியான மாவாக பிசையவும். காராசேவு கரண்டியில் மாவைத் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் நீர் விட்டு முற்றின பாகாக காய்ச்சி… ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். பொரித்த காரா சேவை அதில் கொட்டி நன்றாகக் கிளறி இறக்கவும். அதில் சர்க்கரை படிந்து, பார்ப்பதற்கு அழகான ஐஸ் மாதிரியும், சுவைப்பதற்கு இனிப்பாகவும் இருக்கும்.
இதை 10-15 நாட்கள் வைத்திருந்து சுவைக்கலாம்.


[size=16]ஓமம் பூரி[/size]
தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சர்க்கரை – சிறிதளவு, ஓமம் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 4
செய்முறை: கோதுமை மாவுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) சேர்த்துக் கலந்து, நீர் விட்டுப் பிசையவும். மாவை பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதற்கு சைட் டிஷ் எதுவும் தேவையில்லை.
இதை ஒரு நாள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.


கம்பு மைசூர்பாக்
தேவையானவை: கம்பு – ஒரு கப், துருவிய வெல்லம் – ஒரு கப் , நெய் – 100 கிராம், பிஸ்தா – முந்திரி (துருவியது) – 2 டேபிள்ஸ்பூன்.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 5
செய்முறை:  கடாயில் நெய் விட்டு கம்பு மாவை வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி, வறுத்த கம்புமாவில் ஊற்றி கட்டிதட்டாமல், கைவிடாமல் கிளறவும். நெய் தடவிய தட்டில் கிளறிய கலவையைக் கொட்டி, அதன் மீது துருவிய பிஸ்தா – முந்திரியைத் தூவவும். சற்று ஆறியதும் துண்டுகள் போட்டு வைக்கவும்.
இது புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்தது. 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.


[size=16]மல்லி மசாலா பிஸ்கட்[/size]
தேவையானவை: மைதா – ஒரு கப், கோதுமை மாவு – அரை கப், பச்சை மிளகாய் – 4, ஃபுட் கலர் (பச்சை) – ஒரு சிட்டிகை, கொத்தமல்லித் தழை – சிறிய கட்டு, சீரகம், பெருங்காயத்தூள், இஞ்சி – பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 6
செய்முறை: மைதா, கோதுமை மாவுடன் சிறிதளவு நீர் தெளித்து பிசிறி, இட்லித் தட்டில் ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும். அதோடு விழு தாக அரைத்த பச்சை மிளகாயும், கொத்த மல்லித் தழையின் சாறும் சேர்த்து, மற்ற பொருட்களையும் (எண்ணெய்  நீங்கலாக) போட்டுப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். பிறகு, இதை விருப்பமான வடிவத்தில் வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 4 நாட்கள் வரை பயன் படுத்தலாம்.


[size=16]பாப்கார்ன் மசாலா[/size]
தேவையானவை: காய்ந்த வெள்ளை அல்லது மஞ்சள் சோள முத்துக்கள்  (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) – ஒரு கப், கறிவேப்பிலை – சிறிதளவு, தனியாத்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், எண்ணெய், உப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 7
செய்முறை: வாணலி அல்லது அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடு ஏறியதும்  வெள்ளை சோளம் அல்லது மஞ்சள் சோள முத்துக் களை சேர்த்து, மூடி போடவும். 10 நிமிடத்தில் பூப்போல பொரிந்துவிடும். அதை தனியே எடுத்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந் ததும் கறிவேப்பிலையை தாளித்து, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள் சேர்த்து, பொரிந்த பாப்கார்ன், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பா வில் அடைத்துவிட்டால்… நாள் பட வைத்து சாப்பிடலாம்.


[size=16]ஸ்பெஷல் பகாளாபாத்[/size]
தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், வெண் ணெய் – 50 கிராம், தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், பால் – ஒரு கப், முந்திரிப்பருப்பு – 10, பச்சை திராட்சை – 15, பொடியாக நறுக்கிய பச்சை கொத்தமல்லித் தழை – அரை கப், உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 8
செய்முறை: பச்சரிசியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வெந்த சாதத்தை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போதே பால், தயிர், வெண்ணெய், உப்பு சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை திராட்சை, முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறி வைக்கவும்.
இதனை விடியற்காலை செய்தாலும் இரவு வரை புளிக்காது. எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. புளிப்பு சுவை விரும்புகிறவர்கள் பால் அளவை குறைத்து, தயிரின் அளவை அதிகப் படுத்தலாம்.


மிளகு காராசேவ்
தேவையானவை: கடலை மாவு, சோள மாவு – தலா அரை கப், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், சமையல் சோடா – தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 9
செய்முறை: மாவுகள் அனைத்தையும் ஒன்றாக சலித்துக்கொண்டு, உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். சமையல் சோடா, நெய் இரண்டையும் ஒரு தட்டில் போட்டு குழைத்து நுரை வரும் பதம் செய்து, சலித்த மாவில் சேர்க்கவும். பிறகு பொடித்த சீரகம், பொடித்த மிளகை மாவில் சேர்க்கவும். மேலும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும் (அதிக கெட்டியாகவோ, தளர்வாகவோ இருக்கக் கூடாது. மாவு நடுத்தர கலவையாக இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெயை காயவிட்டு, காராசேவ் கரண்டியில் மாவைப் போட்டு தேய்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இது 10 நாள்வரை நன்றாக இருக்கும்.


[size=16]கார சப்பாத்தி[/size]
தேவையானவை:  கோதுமை மாவு – ஒரு கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை (பொடிக்கவும்) – ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – (மாவு பிசைய) 5 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் – தேவையான அளவு.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 10
செய்முறை: கோதுமை மாவோடு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (நெய் நீங்கலாக) சேர்த்துக் கலந்து, நீர் விட்டு கெட்டியான மாவாக பிசையவும். மாவை உருண்டையாக்கி, சப்பாத்தியாக திரட்டவும். தோசைக்கல்லில் நெய் தடவி காயவிட்டு, திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, அதன்மீது துணியை வைத்து சீராக அழுத்திவிட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும் (ரொட்டி மேக்கரில் வைத்தும் சுட்டு எடுக்கலாம்).
இது ஒரு வாரம் வரை கெடாது. இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது… வெண்ணெய், சாஸ், ஊறுகாய் தொட்டும் சாப்பிடலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் Empty Re: 30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள்

Mon Jan 19, 2015 9:20 pm
[size=16]கோகனட் கலர் பால்ஸ்[/size]
தேவையானவை: முற்றிய தேங்காயின் துருவல், சர்க்கரை – தலா 2 கப், வறுத்துப் பொடித்த ரவை – ஒரு டேபிள்ஸ்பூன், ஃபுட் கலர் (விருப்பமானது) – சிறிதளவு, கிராம்பு – 2 (வறுத்துப் பொடிக்கவும்),  ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, ஜெம்ஸ் மிட்டாய் அல்லது கலர் அரிசி மிட்டாய் – தேவையான அளவு, நெய் – 2 டீஸ்பூன்.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 11
செய்முறை: தேங்காய்த் துரு வலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். சர்க்கரை யைப் பாகு காய்ச்சி, கெட்டி கம்பி பதம் வந்ததும்… வறுத்து பொடித்த ரவை, கிராம்புத்தூள் போட்டுக் கலந்து, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். கடைசியாக ஃபுட் கலர், சிறிதளவு மிட்டாய் சேர்த்து, 2 டீஸ்பூன் நெய் விட்டு இறக்கி உருண்டையாக பிடிக்கவும். உருண்டை யின் நடுவே மிட்டாயை செருகவும்.
4 நாட்கள் வரை இந்த உருண்டை நன்றாக இருக்கும். தேங்காய் துருவலை வறுத்து செய்தால், இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


எண்ணெய் வாழைக்காய்
தேவையானவை: வாழைக்காய் – 2, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,  சோள மாவு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 12
செய்முறை:  அனைத்துப் பொருட்களையும் (வாழைக்காய், எண்ணெய் நீங்கலாக) ஒன்றுசேர்த்து சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசையவும்     (பஜ்ஜி மாவு போல் தளர்வாகவும், பக்கோடா மாவு பிசைவது மாதிரி மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், இரண்டுக்கும் நடுத்தர அளவாக இருக்க வேண்டும்). தோல் சீவி, வட்டமாக, குண்டு குண்டாக நறுக்கிய  வாழைக்காயை மாவில் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, ஊறிய வாழைக்காயை சேர்த்துப் புரட்டவும். கலந்த சாதத் துக்கு சைட் டிஷ்ஷாக வும்… சப்பாத்தி, இட் லிக்கு தொட்டுக் கொள்ள வும் இதைப் பயன்படுத்த லாம்.
இது ஒரு நாள் வரை நன்றாக இருக்கும்.


ரயில் புளியோதரை
தேவையானவை: பாஸ்மதி அரிசி – ஒரு கப், புளி – சிறிதளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, எள், வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் – சிறிதளவு, முந்திரி, வேர்க்கடலை – தலா 10, நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 13
செய்முறை: காய்ந்த மிளகாய், எள், வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்¬றை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அரிசியை வெறும் வாணலியில் வறுத்து சாதமாக வடித்துக்கொள்ளவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரி, வேர்க்கடலையைப் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, வறுத்து பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி, நன்றாக சுண்டவிட்டால்… புளியோதரை பேஸ்ட் ரெடி. இதை வடித்த சாதத்தில் சேர்த்துக் கிளறி, 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி புரட்டி வைக்கவும்.
சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்தப் புளியோதரையை 2 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.


பரோட்டா
தேவையானவை: மைதா – 2 கப், சமையல் சோடா, பேக்கிங் பவுடர் – தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் – கால் கப்,  உப்பு – தேவைக்கேற்ப.
 30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 14
செய்முறை: மாவோடு உப்பு, எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசையவும். 4 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு சமையல் சோடா, பேக்கிங் பவுடரை நெய்யில் குழைத்து ஊறிய மாவோடு சேர்க்கவும். மாவை உருட்டி, சப்பாத்தி மாதிரி இட்டு, புடவை கொசுவம் மாதிரி மடித்து பின் உருண்டையாக்கவும். இதை கனமான பரோட்டாவாக தட்டவும். தோசைக்கல்லை காயவிட்டு, பரோட்டாவைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி சுடவும். சுட்டு எடுத்த பரோட்டாவை சூட்டுடனேயே இருபுறமும் ஓரங்களை இரு கைகளாலும் தட்டவும். வேண்டிய அளவு செய்து அடுக்கிக்கொள்ளவும்.
இது 2 நாட்கள் வரை நன்றாக  இருக்கும்.


[size=16]பீட்ரூட் பச்சடி[/size]
தேவையானவை:  பீட்ரூட் (பெரியது) – ஒன்று, நெய் – சிறிதளவு, சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, முந்திரி – 5, டூட்டி ஃப்ரூட்டி – ஒரு டீஸ்பூன் (பேக்கரியில் கிடைக்கும்).
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 15
செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி துருவி… நெய் ஊற்றி வதக்கவும். அதில் தண்ணீர் சிறிதளவு விட்டு கடாயில் வேகவிடவும். நன்றாக வெந்ததும், சர்க்கரை சேர்க்க வும். ஒன்றாகக் கலந்து சுருண்டு வரும்போது… ஏலக் காய்த்தூள், உடைத்த முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும். இதன் டேஸ்ட் ஜாம் மாதிரி ‘ஜம்’மென்று இருக்கும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.
இதை 2 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


[size=16]ஸ்பெஷல் நட்ஸ் டிலைட்[/size]
தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், உரித்த பூசணி விதை, தர்பூசணி விதை, பரங்கி விதை (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) – தலா  கால் கப், பிஸ்தா பருப்பு – 50 கிராம், முழுபச்சைப் பயறு, காய்ந்த பச்சைப் பட்டாணி – தலா 50 கிராம், தனியாத் தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள் –  தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 16
செய்முறை: கடலைப்பருப்பு, பச்சைப் பயறு, பட்டாணியை தனித் தனியாக குறைந்தது 6-10 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை சுத்த மாக வடித்துவிடவும். பட்டாணியை  அரை வேக்காடு பதத்தில் வேக வைத்து,தண்ணீரை உலரவிட்டு எடுத்துக்கொள்ளவும். விதைகள் மற் றும் கடலைப்பருப்பு, பச்சைப் பயறு, பட்டாணி, பிஸ்தாவை நெய்யில் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வும். அவற்றை ஒன்றாக பெரிய பேஸி னில் கொட்டவும். சூடாக இருக்கும் போதே எலுமிச்சைச் சாறு பிழிந்து, உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா சேர்த்துக் கிளறவும். ஆறவைத்து காற்றுப்புகாத டப்பாவில் போடவும்.
இது ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.


புளிச்சக்கீரை தொக்கு
தேவையானவை: புளிச்சக்கீரை (கோங்கூரா) – 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப் பிலை – சிறிதளவு, தாளிக்கும் வடகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 17
செய்முறை: கடாயில் நெய் விட்டு புளிச்சக்கீரையை வதக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, தனியா, தாளிக்கும் வடகத்தை தனியாக எண்ணெயில் வதக்கி ஆறவிட்டு… புளிச்சக்கீரை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). கடுகு, கறிவேப்பிலை தாளித்து இதனுடன் சேர்த்துக் கிளறி வைக்கவும்.
இது 2 நாட்கள் வரை  நன்றாக இருக்கும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, தோசைக்கும் சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம்.


[size=16]ராகி செக்கோடிலு[/size]
தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு, மைதா – தலா அரை கப், தேங் காய்த் துருவல் – ஒரு கப், மிளகாய்த்   தூள் – ஒரு டீஸ்பூன், ஓமம் – கால் டீஸ்பூன், எள் – ஒரு டீஸ்பூன், ஃபுட்கலர் (ஆரஞ்சு) – ஒரு சிட்டிகை,  உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 18
செய்முறை: அனைத்து மாவுகளுடன் உப்பு, ஓமம், எள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். தேங்காய் துருவலில் பால் எடுத்து அதையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு ஃபுட் கலர் சேர்த்து (தேவைப் பட்டால் நீரும் தெளித்துக் கொள்ளலாம்), கெட்டியான மாவாக பிசையவும். அதை விரல் நீளத்துக்கு உருட்டி, இரண்டு முனையையும் ஒட்டி சிறிய வளையம் மாதிரி செய்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதை நாள்பட வைத்து பயன்படுத்தலாம்.


மல்டி விட்டமின் மிக்ஸர்
தேவையானவை: பொரித்த ஜவ்வரிசி – ஒரு கப், பொட்டுக்கடலை, வேர்க்கடலை – தலா அரை கப், முந்திரிப்பருப்பு – 20, உலர்ந்த திராட்சை – 15,  பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 19
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரியை தனித்தனியாக வறுத்து, பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்க்கவும். சூடாக இருக்கும்போதே உப்பு, உலர்ந்த திராட்சை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, கடைசியாக கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். இதை ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பா அல்லது பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.
இது 15 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
குறிப்பு: ஜவ்வரிசியை சிறிது சிறிதாக எண்ணெய் விட்டு பொரிக்கவும். அல்லது, பொரிகடலை வறுக்கும் கடையில் பொரித்தெடுத்து வாங்கிக்கொள்ளவும்.


காஞ்சிபுரம் நெய் இட்லி
தேவையானவை: இட்லி அரிசி, பச்சரிசி, முழு உளுந்து – தலா ஒரு கப், மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன்,  சமையல் சோடா – ஒரு சிட்டிகை, பொடித்த சுக்கு – ஒரு டீஸ்பூன், கெட்டித்தயிர் (புளிக்காதது) – அரை லிட்டர், வறுத்த முந்திரி, கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 20
செய்முறை: இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்தை தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒன்று சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் (மாவு கெட்டியாக இருக்க வேண்டும்). இதை 6 மணி நேரம் அப்படியே விடவும். பிறகு இதனுடன் பொடித்த சுக்கு, உருக்கிய நெய், மிளகு, சீரகம், சமையல் சோடா, உப்பு, கெட்டித்தயிர், வறுத்த முந்திரி சேர்த்து, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். பெரிய குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் தடவி ஒரு அங்குல உயரத்துக்கு இந்த மாவை அதில் போட்டு, ஆவியில் வேகவிடவும். வெந்ததை நமக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் Empty Re: 30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள்

Mon Jan 19, 2015 9:21 pm
[size=16]மினி ஸ்பைஸி இட்லி[/size]
தேவையானவை: புழுங்கல் அரிசி – 4 கப், வெந்தயம், கல் உப்பு – தலா ஒரு கைப்பிடி அளவு, ஆம ணக்கு விதை (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) – சிறிதளவு. மிளகாய்ப்பொடி செய்ய: காய்ந்த மிளகாய் – 15, பூண்டு – 10 பல், உப்பு – சிறிதளவு, பெருங் காயத்தூள் – ஒரு சிட்டிகை, எண் ணெய் – தேவையான அளவு.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 21
செய்முறை: அரிசியை 2 மணி நேரம் தனியாக ஊறவைக்கவும். வெந்தயம் – ஆமணக்கு விதையை ஒன்றாக 5 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். கிரைண்டரில் சிறிது நீர் விட்டு வெந்தயம், ஆமணக்கு விதையை அரைக்கவும். பிறகு அரிசியைப் போட்டு மையாக அரைக்கவும். இதில் உப்பு போட்டு கரைக்கவும். 10 மணி நேரம் கழித்து உபயோகப்படுத்தலாம். குட்டி இட்லித் தட்டில் இட்லி மாவை ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெயைக் காயவிட்டு மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி பெருங்காயத் தூள், உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த மிளகாய்ப் பொடியுடன், நல்லெண்ணெய் சேர்த்துக் குழைத்து, குட்டி இட்லிகள் மீது தடவி எடுத்து செல்லவும்.
இதை 2 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


ஓலை பக்கோடா
தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா அரை கப்,  வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 22
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவுடன்  உப்பு, நெய், எள், மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துக் கலந்து, நீர் விட்டுப் பிசையவும். முறுக்கு குழாயில் ரிப்பன் பக்கோடா அச்சை போட்டு, மாவை சேர்த்து, சூடான எண் ணெயில் பிழிந்து, பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடித்து, ஆறியபின் காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
இதை 20 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.


மாங்காய் இஞ்சி ஊறுகாய்
தேவையானவை: மாங்காய் இஞ்சி – 50 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் – அரை மூடி, உப்பு – ஒரு சிட்டிகை.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 23
செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி மிகவும் பொடிதாக நறுக்கவும். அதில் எலுமிச்சைச் சாறு  பிழியவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு,  கீறிய பச்சை மிளகாய் தாளித்து… மாங்காய் இஞ்சியுடன் சேர்த்து, உப்பு போட்டு கிளறி வைக்கவும்.
இதை 2 நாட்கள் பயன்படுத்தலாம். தயிர் சாதத்துக்கு இது அருமை யான சைட் டிஷ். சுலப மாக செரிமானம் ஆகக் கூடியது. வயிற்றுக்கு தீங்கு ஏற்படுத்தாத ஊறு காய் இது.


[size=16]கலர்ஃபுல் மிளகு வடை[/size]
தேவையானவை: வெள்ளை அல்லது கறுப்பு முழு உளுந்து – 2 கப், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், ஃபுட் கலர் (ஆரஞ்சு) – சிறிதளவு, கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, ரவை – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 24
செய்முறை:  உளுந்தைக் கழுவி ஊறவைக்கவும். ரவையை யும் ஊறவைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து இவற்றிலிருந்து தண்ணீரை ஒட்ட வடித்து, ஒன்றுசேர்த்து… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கிரைண் டரில் அரைக்கவும். மாவு நன்றாக மசிந்ததும் எள், மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கவும். ஃபுட் கலர் சேர்த்து மாவை எடுத்து சிறிய உருண்டையாக உருட்டி, வடையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இது ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.


[size=16]இன்ஸ்டன்ட் குழிபணியாரம்[/size]
தேவையானவை: தோசை மாவு – ஒரு கப், கடுகு – சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, துருவிய இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன், நெய் – சிறிதளவு, எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 25
செய்முறை: கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் விழுது, இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்து, தோசை மாவுடன் சேர்க்கவும். பொடி யாக நறுக்கிய கொத்தமல்லித்தழை யையும் மாவில் போட்டுக் கலக்கி ஒரு சிட்டிகை மட்டும் உப்பு சேர்க் கவும் (ஏற்கெனவே நாம் தோசை மாவில் உப்பு சேர்த்திருப்போம்).  குழிபணியார சட்டியில் சிறிது நெய் தடவி, மாவை ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.


ரோஸ் குக்கீஸ்
தேவையானவை: அச்சு முறுக்கு மோல்டு – ஒன்று, மைதா – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், தேங்காய் – அரை மூடி (துருவி, மிக்ஸியில் அடித்து பால் எடுத்துக்கொள்ளவும்), பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் – 3 துளி, பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 26
செய்முறை: மைதா மாவு, அரிசி மாவுடன் பேக்கிங் பவுடர் போட்டு சலிக்கவும். அதனுடன் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரையை சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். இதில் எசன்ஸ் சேர்த்து கரண்டி (அ) பீட்டர் (ஙிமீணீtமீக்ஷீ) கொண்டு நன்கு அடிக்கவும்.
கடாயில் எண்ணெயைச் சூடாக்கவும். அச்சு முறுக்கு மோல்டை எண்ணெயில் விட்டு எடுக்கவும். பிறகு கரைத்த மாவில் இந்த ‘மோல்டை’ முக்கி எடுத்து எண்ணெய்க்குள் போட்டு, திருப்பிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:  ஒவ்வொரு முறையும் மோல்டை சூடான எண்ணெயில் விட்டு எடுத்த பிறகே மாவில் தோய்த்து எடுத்து பொரிக்க வேண்டும்.
இதை 20-25 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.


[size=16]மிளகு புளிக்குழம்பு[/size]
தேவையானவை: மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் – ஒன்றரை டம்ளர், பூண்டு – 15 பல், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, வெந்தயம் – ஒரு டீஸ்பூன், சின்ன கத்திரிக்காய் – 5, எண்ணெய் – தாளிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 27
செய்முறை:  மிளகு, தனியாவை தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு, வெந்தயம், நறுக்கிய கத்திரிக்காய், பூண்டு சேர்த்து தாளித்து… புளிக்கரைசல் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். பிறகு, மஞ்சள்தூள் சேர்த்து, மிளகு, தனியா பொடியையும் சேர்த்து கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்து சுண்டி வரும்போது இறக்கவும்.
இந்த மிளகு புளிக்குழம்பு, 4 நாட்கள் வரை நன்றாக இருக்கும். வெளியூர் செல்லும்போது சாதம் மட்டும் வெளியில் வாங்கிக்கொண்டால், இதை ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். இதை இட்லி, சப்பாத்திக்கும் தொட்டுச் சாப்பிடலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் Empty Re: 30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள்

Mon Jan 19, 2015 9:21 pm
[size=16]திடீர் மோர்க்குழம்பு[/size]
தேவையானவை: தயிர் – ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்டைக்காய் – 5 (நறுக்கிக்கொள்ளவும்) கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப,
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 28
செய்முறை: ஒரு கப் தயிரைக் கடைந்து ஒன்றரை கப் மோர் ஆக்கி, அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து… கடலை மாவு, அரிசி மாவு போட்டு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்… கடுகு, கறிவேப் பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெண்டைக்காய் சேர்த்து வதக்கி, தயிர் கரைசலை ஊற்றி, தனியாத்தூள் சேர்க்கவும். ஒரு பொங்கு பொங்கி நுரைத்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும். சாதம் மட்டும் எடுத்துச் சென்றாலோ அல்லது சாதம் வெளி யில் வாங்கிக் கொண்டாலோ இதை ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.


ஹெல்தி ஃப்ரிட்டர்ஸ்
தேவையானவை: கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு – 2 தலா டேபிள்ஸ்பூன், நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ் – தலா கால் கப், பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), காய்ந்த ரொட்டித்தூள் – 2 டேபிள்ஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன்,    மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 29
செய்முறை: நறுக்கிய கோஸ், கேரட்டை ஐஸ் வாட்டரில் 15 நிமிடம் போட்டு வைக்கவும். கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து… உப்பு,         மஞ்சள்தூள், சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ரொட்டித்தூள் போட்டுப் பிசிறவும். கேரட், கோஸை ஒட்டப் பிழிந்து, பிசிறி வைத்த மாவோடு சேர்த்து,  சிறிதளவு நீர் ஊற்றி கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை காயவிட்டு, மாவை பக்கோடா மாதிரி கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
இது 3 நாட்கள் வரை நன்றாக இருக்கும். மொமொறுவென்று சூப்பர் சுவையில் அசத்தும் இதை, சாதத்துக்கு சைட் டிஷ்ஷாகவும் பயன்படுத்தலாம்.


[size=16]மட்கி[/size]
தேவையானவை: மைதா – ஒரு கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், சோள மாவு – கால் கப், ஓமம் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, சோம்பு – கால் டீஸ்பூன், தயிர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் 30
செய்முறை: மைதா மாவை நன்றாக சலிக்கவும். ஓமம், சோம்பை பொடி செய்து அதனுடன் சேர்க்கவும். அதில் சோள மாவு,  பொட்டுக்கடலை மாவு, உப்பு, சமையல் சோடா, வெண்ணெய் சேர்த்து கைகளால் நன்றாக பிசறிவிடவும். தயிரை வெது வெதுப்பான நீர் கலந்து மோர் ஆக்கி மாவில் ஊற்றி கெட்டியாக பிசையவும். 2 மணி நேரம் மூடி வைத்து ஊறவிடவும். பிறகு, சிறிய சப்பாத்தியாக இட்டு, முக்கோணமாக மடித்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இது ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.
தொகுப்பு: பத்மினி  
படங்கள்: எம்.உசேன்  
ஃபுட் டெகரேஷன்: ‘செஃப்’ ரஜினி


[size=16]ஆச்சி கிச்சன் ராணி[/size]
[size=16]ஜிஞ்சர் – டேட்ஸ் சாஸ்[/size]
தேவையானவை: இஞ்சி – 50 கிராம், பேரீச்சம்பழம் – 5, புளி – சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் – 100 கிராம், ஆச்சி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் P129
செய்முறை: வெல்லம், கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் மூழ்கும் அளவு நீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைக்கவும், இஞ்சியை நன்றாகக் கழுவி நறுக்கிக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். இஞ்சி, பேரீச்சம்பழம், வெல்லம், உப்பு, ஆச்சி மிளகாய்த் தூள் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து… கொதி வந்ததும் புளிக்கரைசலை ஊற்றவும். அனைத்தையும் நன்கு கொதிக்கவிடவும் (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்). கொதித்தவுடன் இறக்கி, ஆறியபின் பரிமாறவும்.
இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் இது.
Sponsored content

30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள் Empty Re: 30 வகை பிக்னிக் - டூர் ரெசிப்பி வகைகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum