கணிப்பொறியின் இயங்குதிறன் அதிகரிக்க...
Mon Jan 12, 2015 4:37 am
உங்கள் கணிப்பொறி தன் வேகத்தைக் குறைத்து, பொறுமையைச் சோதிக்கிறதா... அதற்கான காரணம் அறியுங்கள் இங்கே!
கணிப்பொறி வேகமாக செயல்பட மிக முக்கியப் பங்கு வகிப்பவை Processor மற்றும் RAM. இதில், பழைய கட்டமைப்புக் கொண்ட கணினியின் Processor மற்றும் RAM ஆகியவை குறைந்த அளவிலான இயங்குதிறன் கொண்டதாக இருக்கும். இதனால் அந்தக் கணினியில், நவீன பயன்பாடுகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.
இதுவே, புதிதாக வாங்கிய கணினியில் அதிக அளவிலான இயங்குதிறன் இருப்பதைப் பார்க்கலாம். எனவே, நமது பயன்பாடுகளுக்கு ஏற்ப Processor மற்றும் RAM ஆகியவற்றின் திறனை மாற்றிக்கொள்வது, கணினியின் இயங்குதிறன் அதிகரிக்க வழிவகுக்கும்.
அதிக வேகம் கொண்ட Processor மற்றும் RAM இருந்தும் கணினி குறைந்த இயங்குதிறனில் செயல்பட்டால்... கணினியின் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பயன்பாடுகளை Defragment செய்யவேண்டியது அவசியம். இதனால் கணினியின் இயங்குதிறன் அதிகரிக்கும்.
Defragment என்பது, கணினியின் பல்வேறு இடங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளையும், துண்டு துண்டாக ஆங்காங்கே இருக்கும் பல்வேறு ஃபைல்களையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக நினைவகத்தில் சேமித்து வைக்கும் செயல்.
எப்படி Defragment செய்வது?
கணினியில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து, சர்ச் ஆப்ஷனை தேர்வு செய்து, அதிலே Disk Defragmenter என டைப் செய்யலாம். அல்லது, Start -> All Programs ->Accessories -> System Tools -> Disk Defragmenter என்ற வழியில் தேர்வு செய்யலாம். பின் அங்கே தோன்றும் Disk Defragmenter பெட்டியில் உள்ள Current status என்ற பிரிவின் கீழே உள்ள கணினியின் நினைவக பிரிவுகளான சி, டி, இ போன்றவற்றை தேர்வு செய்து, Defragment Disk என்ற பட்டனை கிளிக் செய்து, Defragment செய்யலாம்.
குறிப்பு: இந்த Defragment செயல்முறையை கணினியின் செயல்பாடுகளுக்கு ஏற்றாற்போல் வாரம் அல்லது மாதம் ஒருமுறை செய்து கொள்ளலாம்.
- சா.வடிவரசு

Re: கணிப்பொறியின் இயங்குதிறன் அதிகரிக்க...
Mon Jan 12, 2015 5:04 am
வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை..!!
எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.
இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.
இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதை தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp , Windows 7 ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்…!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum