ஸ்மைலி போயாச்சு ஸ்டிக்கர் வந்தாச்சு
Fri Dec 12, 2014 7:55 pm
மச்சான், வட போச்சே, நண்பேன்டா, செம, மெர்சலாயிட்டேன் என 20 விதமான தமிழ் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்திருக்கிறது ஹைக் நிறுவனம். அதுவும் இலவசமாக. ஆங்கிலம் போனடிக்ஸ் உச்சரிப்புகளில் இருக்கின்றன இந்த ஸ்டிக்கர்கள். இதில் விசேஷம் என்னவென்றால் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் அந்தந்த பிராந்திய மொழிகளில் ஸ்டிக்கர்களை ஹைக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சுமார் இருநூற்றைம்பதுக்கும் அதிகமான ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றால் பாருங்களேன்.
தற்போது மாதத்திற்கு 1000 கோடிக்கு மேல் தகவல்கள் ஹைக் மெசஞ்சர் மூலம் பரிமாற்றம் செய்யப்படுகின்றனவாம். ஹைக் சர்வதேச அளவில் ஐ.ஓ.எஸ் (ios), ஆண்ட்ராய்டு, டபிள்யு பி (WP), பிளாக்பெர்ரி, BB10, S40, S60 ஆகியவற்றில் கிடைக்கிறது.
ஒரு சிங்கிள் டச் மூலம் உரையாடலைப் பேச்சு வழக்கில் உணர்ச்சிபூர்வமாக மாற்றிவிடும் ஹைக் ஸ்டிக்கர்தான் வந்தாச்சே! இனி உங்கள் அன்பையும் கோபத்தையும் நச்சுனு உங்க மொழியிலேயே மெசேஜ் பண்ணுங்க. இந்த அப்ளிகேஷனை http://get.hike.in/ லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு http://hike.in/blog/- ஐ கிளிக் செய்யலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum