உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்
Tue Dec 02, 2014 7:26 pm
உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களே அதிகம் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ப்யு டெமோகிராபி என்ற நிறுவனம் உலக மக்கட்தொகையில் மதம் குறித்து ஆய்வு நடத்தியது.
இதில், உலகம் முழுவதும் 2.2 பில்லியன் மக்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகின்றனர், அதாவது உலக மக்கள் தொகையில் 32 சதவிகிதம் பேர் என தெரியவந்தது.
இரண்டாவதாக 1.6 பில்லியன் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர் என்பதும், 1 பில்லியன் மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்களை அடுத்து 50 கோடி புத்த மதத்தினரும், 1 கோடியே 40 லட்சம் யூதர்களும் உள்ளனர்.
மேலும் 400 மில்லியன் மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் பின்பற்றப்படும் பழங்குடி மற்றும் பாரம்பரிய மதங்களை பின்பற்றுகின்றனர்.
இவர்களில் அதிகளவான பேர் ஆப்ரிக்க, சீன, அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய பழங்குடியினராக உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து 58 மில்லியன் மக்கள் ஜைனம், சீக்கியம், ஷின்டோயிசம், டாவோயிசம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றுகின்றனர்.
இந்த ஆய்வு 230 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி: முகநூல்

Re: உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்
Tue Dec 02, 2014 7:28 pm
100 மில்லியன் பைபிள் புத்தகங்களை அச்சிட்டு சீன நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
சீனாவின் நான்ஜிங் மாகாணத்தில் உள்ள "Amity Printing Co Ltd", கடந்த 1988ஆம் ஆண்டு முதல் 100 மில்லியன் பைபிள்களை அச்சிட்டுள்ளது.
இந்நிறுவனத்திற்கு பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன. 70 நாடுகளில், 90 மொழிகளில் 40 மில்லியன் பைபிள்களை அச்சிட்டு வழங்கியுள்ளது.
சீனாவில் மதங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றாலும், அங்கு 1.6 கோடி கிறிஸ்துவ மக்களும், 55 ஆயிரம் சர்ச்சுகளும் உள்ளன.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum