இனம் புரியாத சில பயங்கள்
Sun Nov 30, 2014 5:58 am
சாமான்ய மனிதர்களைப் போலவே பிரபலமாக இருக்கும் பெரிய மனிதர்களுக்கும் இனம் புரியாத சில பயங்கள் ஏற்படுவது உண்டு. இதற்கு பெரிதாக காரணம் எதுவும் இருக்காது.
'பாப்' உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனுக்கு 'மையாபோபியா' என்ற நோய் இருந்தது. இது கிருமிகளைக் கண்டு பயப்படும் நோய். இதற்காகவே அவர் எங்கே வெளியே சென்றாலும் கை உறையும் முகமூடியும் போட்டுக் கொள்வார். ஓட்டல்களில் தங்குவதாக இருந்தால் கூட டி.வி. ரிமோட் வரை சுத்தமான துணியால் மூடி இருக்க வேண்டும் என்று நினைப்பார்.
ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு சிலந்தி என்றால் எப்போதும் பயம் தான். ஒருமுறை ஓட்டல் அறையில் சிலந்தியை பார்த்து விட்டு அலறியடித்து ஊரையே கூட்டி அறையை மாற்றிய பிறகே அமைதியானார். இப்போது கூட சிலந்தி என்றால் சிதறி ஓடி விடுவார், ஜானிடெப்.
'ஏரோபோபிக்' என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பறக்க பயப்படுவார்கள். இந்த நோய் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலிக்கு இருந்தது. எவ்வளவு அவசரம் என்றாலும் சரி, கடல் கடந்து போக வேண்டிய நிலை வந்தாலும் சரி. அவர் விமானத்தில் ஏறியதே இல்லை. எப்போதும் ரெயில் தான் அவரது வாகனம். கடல் கடந்து போக வேண்டும் என்றால் கப்பல் தான் அவரது சாய்ஸ்.
பூனையைப் பார்த்து பயப்படுபவர்களுக்கு 'ஏய்லுரோபோபியா' என்ற நோய் இருக்கும். தனது 14வது வயதில் ராணுவத்தில் சேர்ந்து, பல போர்களில் வெற்றி கண்டு, பல நாடுகளையும், மன்னர்களையும் நடுநடுங்கச் செய்த மாவீரன் நெப்போலியனுக்கு பூனை என்றால் ஒரே பயம். தொலைவில் பூனையை கண்டால் கூட ஒளிந்து கொள்வார்.
உயரமான பல மாடிகளை 'ஜம்ப்' செய்து கடந்து சண்டை போடும் ஜாக்கிசான் 'போலீஸ் ஸ்டோரி' படத்தில் அவர் பாலத்தில் இருந்து வண்டிக்கு தாவுவதை 'உலகில் மிகப்பயங்கரமான ஜம்ப்' என்று சினிமா உலகம் இன்னமும் கூட சொல்லிக் கொண்டே இருக்கிறது. அப்படி துணிச்சலுக்கு பேர் போன ஜாக்கிசான் தனது காரை எப்போதும் பாலத்துக்கு அடியில் நிறுத்தவே மாட்டார். கேட்டால், 'பாலம் இடிந்து விழுந்து காரோடு நசுங்கி இறந்து விடுவேனோ' என்று பயமாக இருக்கிறது என கூறுவார்.
வின்ஸ்டன் சர்ச்சில், எப்போதும் கைத்தடி இல்லாமல் வெளியே போக மாட்டார். அவ்வளவு பயம். ஹிட்லரையே பார்த்து நடுங்காத அவர் இதற்காக மட்டும் பயந்தார். ஒருமுறை அவசரத்தில் கைத்தடியை மறந்து வைத்து விட்டு போய் விட்டார். அன்றைக்குப் பார்த்து அவரது கார் விபத்தில் சிக்கிக் கொண்டது. அதன்பின் கைத்தடியை விட்டு பிரியவே இல்லை, சர்ச்சில்.
நன்றி: தினத்தந்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum