தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின் அதிசயங்கள்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின் அதிசயங்கள்! Empty நீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின் அதிசயங்கள்!

Tue Nov 04, 2014 8:29 pm
அறிவியல் வளர்ச்சியில் எத்தனை புதுப்புது விஷயங்களை நாம் அறிந்துகொண்டாலும் இயற்கை நமக்கு தரும் விஷயங்கள் அலாதியானவை. எக்காலத்திலும் அதன் பிரமிப்பு நம்மை விட்டு அகலாது. அப்படி சில இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போது நமக்கே ஆச்சர்யம் ஏற்படும்.
அவற்றில் சில கீழே..

லேக் ரெட்பா

ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் செனகல் நாட்டில் பிரபலமானது இந்த பிங்க் ஏரி. பொதுவாக தண்ணீருக்கு நிறமே கிடையாது ஆனால் இந்த ஏரியின் இந்த இளஞ்சிவப்பு நிறத்திற்கான காரணம்? கடலின் நீல நிறந்திற்கு வானத்தின் நீல நிறம் காரணமாக இருப்பது போல இதற்கும் ஒரு காரணம் உள்ளது. 

நீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின் அதிசயங்கள்! Wonder%20lake%20repa
ஏரியில் 'துனாலியல்லா சாலிணா' என்ற நுண்ணுயிரிகள் அதிகம் அவை சூரிய ஒளியினாலும் நீரின் உப்புத்தன்மையை சமாளிப்பதற்காகவும் ஒரு திரவத்தை சுரப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏரியன் உப்புத்தன்மை அதிகம் உள்ள காரணத்தால் இதில் நம் உடல் மூழ்காமல் மிதக்குமாம். அட... ஆச்சர்யம்தான்!

க்ரேட் ப்ளூ ஹோல்

பெலிசு நாட்டின் கடல் பரப்பில் உள்ளது இந்த நீர்மூழ்கி புதைகுழி. சாதாரணமாக தரையில் இருக்கும் புதைக் குழியைக் கவனித்துவிட்டால் சுதாரித்துக் கொள்ளலாம். கடலில் உற்சாகமாக நீந்திக் கொண்டிருக்கும் போது திடீர் என 300 அடி சுற்றளவிற்கு கடலின் ஆழம் அதிகரித்திருந்தால். அதுதான் இந்த 'க்ரேட் ப்ளூ ஹோல்'.

நீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின் அதிசயங்கள்! Wonder%20great%20blue%20hole%20middle
407 அடி ஆழம்,  அதாவது ஐந்து பனைமர உயரத்திற்கு இருக்கும் ஒரு குழி. இந்த ஆபத்தில் விளையாடவும் சில சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவது இதில் வியப்பான விஷயம். பல பயணிகள் வந்து இந்தக் குழியில் ஸ்கூபா டைவிங் செய்து சாகச சாம்பியன்களாக திகழ்கின்றனர்.

தர்வாசா

தர்வாசா என்றால் துருக்மெனிய மொழியில் கதவு என்று பொருள். இது துருக்மெனிஸ்தான் நாட்டின் காராக்கும் பாலைவனத்தின் நடுவே அமையப் பெற்றுள்ள ஒரு கிராமம். இங்கு இயற்கை எரிவாயு அதிகமாக இருப்பதை அறிந்த புவியியல் நிபுணர்கள் 1971-ம் ஆண்டு துளைக்கத் துவங்கினார்கள். அப்போது திடீரென நிலப்பகுதி தகர்ந்து விழ, 230 அடி விட்டத்திற்கு துவாரம் உருவானது. நச்சுப்புகை பரவாமல் இருக்க வேண்டும் என்று அதில் தீயைப் பற்ற வைத்தார்கள் நிபுணர்கள், சில மணிநேரத்தில் அணைந்துவிடும் என நினைத்த அந்தத் தீ இன்னும் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறதாம்.

நீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின் அதிசயங்கள்! Wonder%20fire
அந்த கிராமத்து வாசிகள் இந்த துவாரத்தை 'Door to Hell' (மரணத்தின் வாசல்) என்று அழைக்கின்றனர். 

சாந்த் பௌரி

ஜெய்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அபாநேரி கிராமம். அங்கு இருக்கும் ஷர்ஷத் மாதா கோவிலைச் சேர்ந்த கிணறுதான் இந்த சாந்த் பௌரி. சரியாக 3,500 படிகட்டுகள் கொண்ட கிணறு இது. 20 அடிக்கு தண்ணீர் சேமித்துவைக்கும் அளவு நேர்த்தியுடன் கட்டப்பட்ட இந்தக் கிணறு 1,000 வருடம் பழமையானது.

நீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின் அதிசயங்கள்! Wonder%20wall%20middle
சாதாரணமாக நிலவும் வெப்பநிலையைவிட 5 முதல் 6 டிகிரி வரை குறைவான வெப்பநிலையில் இருக்கும் இந்த கிணற்றங்கறையில், அதிக வெப்பமான நாட்களில் உள்ளூர்வாசிகள் கூடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

 - பா.ஜான்ஸன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum