பொருளாதார கேள்வி - பதில்கள்
Wed Oct 29, 2014 9:06 pm
ஃபிக்ஸட் டெபாசிட்... வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டுமா?
?தற்போது எனக்கு 61 வயதாகிறது. எந்த வருமானமும் இல்லை. 12 லட்சம் ரூபாயை 6 வங்கிகளில் பிரித்து டெபாசிட் செய்துள்ளேன். வங்கியில் படிவம் 15H சமர்ப்பித்துள்ளேன். இந்த நிலையில் நான் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா?
“மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்திருக்கும் 12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவிகித வட்டி வருமானம் கிடைத்தால்கூட, உங்களுக்கு வருடத்துக்கு 1.2 லட்சம் ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். எனவே, நீங்கள் வரி கட்ட வேண்டியதில்லை. அந்த வகையில் வருமான வரிச் சட்டம் 139 (1 )பிரிவின் படி எந்தவிதமான வருமான வரிக் கணக்கும் தாக்கல் செய்யத் தேவையில்லை.”
?எனக்கு 38 வயது. என் கணவருக்கு 47 வயது. எங்கள் ஓய்வுக் காலத்துக்காக என்னால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். எதில் முதலீடு செய்யலாம்?
[/size]
“உங்களின் கணவர் ஓய்வுபெறுவதற்கு இன்னும் 11 வருடங்கள் உள்ளன. எனவே, நீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தலா மாதம் 5 ஆயிரம் ரூபாய் என எஸ்ஐபி முறையில் இரு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதாவது, ஐசிஐசிஐ புரூ டைனமிக் பிளான், மீரே அசெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இந்த முதலீடு மூலமாக சுமார் 12 சதவிகித வருமானம் கிடைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8.11 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த முதலீட்டை அப்படியே தொடரலாம்.
[/size][size]
மேலும், இந்த எஸ்ஐபி முடித்தபிறகு, ஈக்விட்டி சந்தை சிறப்பாக இருந்தால் மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். உங்களுடைய முதலீடுகளை ஆண்டுக்கு ஒரு முறையேனும் எவ்வாறு செயல்படுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும்.”
?ஷேர் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் குறைகளைத் தீர்க்க ஏதாவது ஆணையம் இருக்கிறதா?
[/size]
‘‘பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியின் இணையதளத்தில் புகார்களைத் தெரிவிக்கலாம் அல்லது செபியின் கட்டண மில்லாத சேவை மையத்தில் புகார் தெரிவிக்கலாம். அதாவது, 1800 266 7575 , 1800 22 7575 ஆகிய எண்களில் அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை உங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.’’
[/size][size]
?இன்ஷூரன்ஸ் பாலிசி முதிர்வு தொகை 6 லட்சம் ரூபாய் எனக்குக் கிடைக்க தயாராக உள்ளது. அதுபோக, மியூச்சுவல் ஃபண்டில் 6 லட்சம் ரூபாய், பங்குச் சந்தையில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். இதனிடையே எனது பழைய வீட்டை இடித்துக்கட்டத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு சுமார் 8 லட்சம் ரூபாய் தேவை. எந்த முதலீட்டிலிருந்து பணத்தை எடுக்கலாம் என்பதைக் கூறவும்.
[/size]
“இன்ஷூரன்ஸ் பாலிசிகள் முதிர்வு பெற்றுள்ளன. எனவே, இதன்மூலமாக ஆறு லட்சம் ரூபாய் கிடைக்கும் எனில், அதை வீடு கட்ட எடுத்துக்கொள்ளலாம். மீதம் தேவைப்படும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் தந்துள்ள மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்த சில வருடங்களுக்கு இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளை அதுவரைக்கும் வைத்திருப்பது லாபமாக இருக்கும்.’’
?வங்கிக் கணக்கு, வாகனக் காப்பீடு மற்றும் குரூப் இன்ஷூரன்ஸ் ஆகிய மூன்றிலும் விபத்துக் காப்பீடு பாலிசி உள்ளது. எதாவது விபத்து நிகழும்போது இந்த மூன்று பாலிசியிலிருந்தும் க்ளைம் செய்ய முடியுமா?
[/size]
“ஒருவர் வைத்திருக்கும் அனைத்து விபத்துக் காப்பீடு பாலிசிகளிலும் க்ளைம் செய்ய முடியும். அதாவது, விபத்து ஏற்பட்டு மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்படும்போது மூன்று பாலிசிகளிலிருந்தும் ஒரேநேரத்தில் க்ளைம் பெறலாம்.
[/size][size]
உதாரணமாக, குரூப் பாலிசியில் 2 லட்சம் ரூபாயும், வங்கிக் கணக்கு மூலமாக வைத்திருக்கும் பாலிசியில் 3 லட்சம் ரூபாய்க்கும், தனிநபர் விபத்து காப்பீடு பாலிசியில் 5 லட்சம் ரூபாயும் கவரேஜ் ஓருவர் வைத்திருந்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். விபத்து மூலமாக மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்படும்போது இந்த அனைத்து பாலிசிகளிலும் மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கு ஒரே நேரத்தில் க்ளைம் செய்ய முடியும்.’’
?எஃப்எம்சிஜி, பார்மா ஆகிய துறை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். நல்ல ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும்.
[/size]
“செக்டார் ஃபண்டில் முதலீடு செய்யும்போது அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். எனவே, அந்த செக்டாரின் சமீபத்திய மற்றும் கடந்த காலச் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட், எஸ்பிஐ எஃப்எம்சிஜி ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். செக்டார் ஃபண்டுகளைவிட டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளின் செயல்பாடுகள் மிகவும் நன்றாக இருக்கும்.
[/size]
[size]
மேலும், சந்தை ஒருநிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது மல்டி கேப் ஃபண்டுகளின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும். இவற்றைக் கவனித்து முதலீடு செய்யவும்.”
?செக் தந்தவர் இறந்துவிட்டால், அந்த செக்கை மாற்ற முடியுமா?
[/size]
“காசோலை கொடுத்தவர் இறந்த விவரம் வங்கிக்குத் தெரிந்திருந்தால், அந்தக் காசோலை பயனற்றதாக மாறிவிடும். அந்தக் காசோலை மூலமாகப் பணம் பெற முடியாது. அதன்பிறகு அதை யாரும் மாற்ற முடியாது.”
[/size][size]
?என் குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது. குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய நினைக்கிறேன். நீண்ட கால திட்டமாக எதில் சேமிக்கலாம்?
[/size]
“உங்கள் குழந்தையின் நீண்ட கால தேவைக்காக சேமிக்க விரும்புகிறீர்கள். முதலீடு என்பது நல்ல வருமானத்தைக் கொடுக்க வேண்டும். எனவே, ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 20% வருமானத்தை சீராக கொடுத்து வருகிறது. இந்த ஃபண்டின் மூலமாக கிடைக்கும் லாபத்துக்கு வரி கிடையாது.”
நன்றி: நாணயம் விகடன்[/size]
கேள்வி - பதில்
?தற்போது எனக்கு 61 வயதாகிறது. எந்த வருமானமும் இல்லை. 12 லட்சம் ரூபாயை 6 வங்கிகளில் பிரித்து டெபாசிட் செய்துள்ளேன். வங்கியில் படிவம் 15H சமர்ப்பித்துள்ளேன். இந்த நிலையில் நான் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா?
ஜி.சங்கர், அம்பத்தூர்.எஸ். கிருஷ்ணன், ஆடிட்டர்
[size]“மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்திருக்கும் 12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவிகித வட்டி வருமானம் கிடைத்தால்கூட, உங்களுக்கு வருடத்துக்கு 1.2 லட்சம் ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். எனவே, நீங்கள் வரி கட்ட வேண்டியதில்லை. அந்த வகையில் வருமான வரிச் சட்டம் 139 (1 )பிரிவின் படி எந்தவிதமான வருமான வரிக் கணக்கும் தாக்கல் செய்யத் தேவையில்லை.”
?எனக்கு 38 வயது. என் கணவருக்கு 47 வயது. எங்கள் ஓய்வுக் காலத்துக்காக என்னால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். எதில் முதலீடு செய்யலாம்?
[/size]
பிரியா, மதுரை.வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர்.
[size]“உங்களின் கணவர் ஓய்வுபெறுவதற்கு இன்னும் 11 வருடங்கள் உள்ளன. எனவே, நீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தலா மாதம் 5 ஆயிரம் ரூபாய் என எஸ்ஐபி முறையில் இரு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதாவது, ஐசிஐசிஐ புரூ டைனமிக் பிளான், மீரே அசெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இந்த முதலீடு மூலமாக சுமார் 12 சதவிகித வருமானம் கிடைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8.11 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த முதலீட்டை அப்படியே தொடரலாம்.
[/size][size]
மேலும், இந்த எஸ்ஐபி முடித்தபிறகு, ஈக்விட்டி சந்தை சிறப்பாக இருந்தால் மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். உங்களுடைய முதலீடுகளை ஆண்டுக்கு ஒரு முறையேனும் எவ்வாறு செயல்படுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும்.”
?ஷேர் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் குறைகளைத் தீர்க்க ஏதாவது ஆணையம் இருக்கிறதா?
[/size]
கந்தசாமி, கோவை. வி.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்.
[size]‘‘பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியின் இணையதளத்தில் புகார்களைத் தெரிவிக்கலாம் அல்லது செபியின் கட்டண மில்லாத சேவை மையத்தில் புகார் தெரிவிக்கலாம். அதாவது, 1800 266 7575 , 1800 22 7575 ஆகிய எண்களில் அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை உங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.’’
[/size][size]
?இன்ஷூரன்ஸ் பாலிசி முதிர்வு தொகை 6 லட்சம் ரூபாய் எனக்குக் கிடைக்க தயாராக உள்ளது. அதுபோக, மியூச்சுவல் ஃபண்டில் 6 லட்சம் ரூபாய், பங்குச் சந்தையில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். இதனிடையே எனது பழைய வீட்டை இடித்துக்கட்டத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு சுமார் 8 லட்சம் ரூபாய் தேவை. எந்த முதலீட்டிலிருந்து பணத்தை எடுக்கலாம் என்பதைக் கூறவும்.
[/size]
நவீன், கள்ளக்குறிச்சி.ஆர்.ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்.
[size]“இன்ஷூரன்ஸ் பாலிசிகள் முதிர்வு பெற்றுள்ளன. எனவே, இதன்மூலமாக ஆறு லட்சம் ரூபாய் கிடைக்கும் எனில், அதை வீடு கட்ட எடுத்துக்கொள்ளலாம். மீதம் தேவைப்படும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் தந்துள்ள மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்த சில வருடங்களுக்கு இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளை அதுவரைக்கும் வைத்திருப்பது லாபமாக இருக்கும்.’’
?வங்கிக் கணக்கு, வாகனக் காப்பீடு மற்றும் குரூப் இன்ஷூரன்ஸ் ஆகிய மூன்றிலும் விபத்துக் காப்பீடு பாலிசி உள்ளது. எதாவது விபத்து நிகழும்போது இந்த மூன்று பாலிசியிலிருந்தும் க்ளைம் செய்ய முடியுமா?
[/size]
ஆனந்த் குமார், கரூர். கே.சுப்ரமணியன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்.
[size]“ஒருவர் வைத்திருக்கும் அனைத்து விபத்துக் காப்பீடு பாலிசிகளிலும் க்ளைம் செய்ய முடியும். அதாவது, விபத்து ஏற்பட்டு மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்படும்போது மூன்று பாலிசிகளிலிருந்தும் ஒரேநேரத்தில் க்ளைம் பெறலாம்.
[/size][size]
உதாரணமாக, குரூப் பாலிசியில் 2 லட்சம் ரூபாயும், வங்கிக் கணக்கு மூலமாக வைத்திருக்கும் பாலிசியில் 3 லட்சம் ரூபாய்க்கும், தனிநபர் விபத்து காப்பீடு பாலிசியில் 5 லட்சம் ரூபாயும் கவரேஜ் ஓருவர் வைத்திருந்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். விபத்து மூலமாக மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்படும்போது இந்த அனைத்து பாலிசிகளிலும் மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கு ஒரே நேரத்தில் க்ளைம் செய்ய முடியும்.’’
?எஃப்எம்சிஜி, பார்மா ஆகிய துறை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். நல்ல ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும்.
[/size]
& கார்த்திராஜன், மதுரை. அபுபக்கர், நிதி ஆலோசகர்.
[size]“செக்டார் ஃபண்டில் முதலீடு செய்யும்போது அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். எனவே, அந்த செக்டாரின் சமீபத்திய மற்றும் கடந்த காலச் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட், எஸ்பிஐ எஃப்எம்சிஜி ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். செக்டார் ஃபண்டுகளைவிட டைவர்ஸிஃபைடு ஃபண்டுகளின் செயல்பாடுகள் மிகவும் நன்றாக இருக்கும்.
[/size]
மேலும், சந்தை ஒருநிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது மல்டி கேப் ஃபண்டுகளின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும். இவற்றைக் கவனித்து முதலீடு செய்யவும்.”
?செக் தந்தவர் இறந்துவிட்டால், அந்த செக்கை மாற்ற முடியுமா?
[/size]
சி.பி.ராஜு, சுண்ணாம்புகொளத்தூர்.
மா.பாரி, முன்னாள் உதவி பொதுமேலாளர், லட்சுமி விலாஸ் வங்கி.
[size]மா.பாரி, முன்னாள் உதவி பொதுமேலாளர், லட்சுமி விலாஸ் வங்கி.
“காசோலை கொடுத்தவர் இறந்த விவரம் வங்கிக்குத் தெரிந்திருந்தால், அந்தக் காசோலை பயனற்றதாக மாறிவிடும். அந்தக் காசோலை மூலமாகப் பணம் பெற முடியாது. அதன்பிறகு அதை யாரும் மாற்ற முடியாது.”
[/size][size]
?என் குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது. குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய நினைக்கிறேன். நீண்ட கால திட்டமாக எதில் சேமிக்கலாம்?
[/size]
-@& வீரா.
ரவிக்குமார், நிதி ஆலோசகர்.
[size]ரவிக்குமார், நிதி ஆலோசகர்.
“உங்கள் குழந்தையின் நீண்ட கால தேவைக்காக சேமிக்க விரும்புகிறீர்கள். முதலீடு என்பது நல்ல வருமானத்தைக் கொடுக்க வேண்டும். எனவே, ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன்ஸ் கிஃப்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 20% வருமானத்தை சீராக கொடுத்து வருகிறது. இந்த ஃபண்டின் மூலமாக கிடைக்கும் லாபத்துக்கு வரி கிடையாது.”
நன்றி: நாணயம் விகடன்[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum