அப்பா போட்ட கேரன்டி கையெழுத்து... மகன் பணம் கட்ட வேண்டுமா?
Tue Oct 21, 2014 8:55 pm
அப்பா போட்ட கேரன்டி கையெழுத்து... மகன் பணம் கட்ட வேண்டுமா?
கேள்வி - பதில்
?என் அப்பா 2000-ம் ஆண்டில் அவருடைய நண்பர்கள் வங்கியில் கடன் வாங்குவதற்காக கேரன்டி கையெழுத்துப் போட்டிருக்கிறார். ஆனால், அந்த நண்பர்கள் கடனை சரியாக திரும்பக் கட்டவில்லை. இப்போது அந்த வங்கி, கடன் தொகை மற்றும் வட்டி சேர்த்து 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என என் தந்தை பெயருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், என் தந்தை 2002-ம் ஆண்டு இறந்துவிட்டார். அவருடைய வாரிசான நான் பணத்தைச் செலுத்த வேண்டுமா?
“உங்கள் அப்பா கேரன்டர் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர் இறந்துவிட்டாலும், சட்டப்படியான வாரிசுகள் அந்தக் கடனை திரும்பச் செலுத்தியாக வேண்டும். எனவே, இந்தக் கடனை நீங்கள் செலுத்த வேண்டும். உங்கள் அப்பா கையெழுத்துப் போட்ட நண்பர்களை உங்களுக்குத் தெரிந்தால், அவர்களிடம் பேசி கடன் தொகையைப் பெறலாம்.
கடன் வாங்கியவர்களை உங்களுக்குத் தெரியவில்லையெனில், வங்கிக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பலாம். அதாவது, கடன் வாங்கியவர்களை எந்தவகையிலும் எனக்குத் தெரியாது. சுமார் 14 வருடங்கள் கழித்து இதை எனக்குத் தெரிவித்திருக்கிறீர்கள். மேலும், இந்தக் கடனை செலுத்தும் அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை; அதேநேரத்தில் எந்தவிதமான சொத்துகளும் இல்லை (இல்லை என்கிறபட்சத்தில்) என்று கூறி நோட்டீஸ் அனுப்பலாம்.”
[/size][size]
?பான் கார்டு, டீமேட் கணக்கு, வங்கிக் கணக்கு ஆகியவற்றில் என் கையெழுத்தை மாற்றத் திட்டமிட்டுள்ளேன். பாஸ்போர்ட்டில் என் புதிய கையெழுத்தைப் பதிவு செய்துள்ளேன். ஆனால், டீமேட் கணக்குக்கு பான் கார்டில் உள்ள கையெழுத்தைதான் ஏற்றுக்கொள்வோம் என்கிறார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
[/size]
“புதிய பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் கையெழுத்து மாற்றம் செய்வதால், புதிய பான் கார்டு தேவை என்பதைக் குறிப்பிடுவது நல்லது. இந்த கார்டு கையெழுத்து மாற்றம் செய்வதற்காக மட்டும்தான். பெயர், பிறந்த தேதி, முகவரி, இனிஷியல் என வேறு எதுவும் மாற்றம் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அடுத்து, ஏற்கெனவே உள்ள கையெழுத்து மற்றும் புதிதாக மாற்ற நினைக்கும் கையெழுத்து ஆகிய இரண்டுக்கும் நோட்டரி பப்ளிக் அல்லது அரசு அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி அதை பான் கார்டு வழங்கும் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புதிய பான் கார்டு வாங்குவதற்குக் கட்டணம் இருக்கும். இதைச் செலுத்தி புதிய கையெழுத்திட்ட பழைய எண் கொண்ட பான் கார்டை வாங்கிக் கொள்ளலாம்.”
[/size][size]
?பேலன்ஸ்டு டெப்ட் கன்சர்வேட்டிவ் ஃபண்ட், பேலன்ஸ்டு டெப்ட் அக்ரஸிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். நல்ல ஃபண்டுகளைக் கூறவும்.
[/size]
“பேலன்ஸ்டு டெப்ட் கன்சர்வேட்டிவ் ஃபண்ட் என்கிறபோது ஹெச்டிஎஃப்சி மல்டி கேப் யீல்டு ஃபண்ட் 2005, ஐடிஎஃப்சி அசெட் அலோகேஷன் ஃபண்ட் ஆகியவற்றிலும், பேலன்ஸ்டு டெப்ட் அக்ரஸிவ் ஃபண்டுகளில் யூடிஐ சிசிபி பேலன்ஸ்டு ஃபண்ட், பிர்லா சன் லைஃப் மன்திலி இன்கம் பிளான் ஆகியவற்றிலும் முதலீடு செய்யலாம்.”
?ஹெச்டிஎஃப்சி டாப் 200, பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ், ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா?
[/size]
“நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஃபண்டுகள் சரியானவையே. அதாவது, லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப், மல்டி கேப் ஆகியவற்றைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். இந்த ஃபண்டுகளின் செயல்பாடுகள் நல்ல நிலையில் உள்ளன. எனவே, எஸ்ஐபி முறையில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.”
[/size][size]
? மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளேன். முகவரி மாற்றம் செய்யும்போது கேஒய்சியில் மட்டும் செய்தால் போதுமா அல்லது முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு தனித்தனியாக தகவல் கொடுக்க வேண்டுமா?
[/size]
“முகவரி மாறும்போது கேஒய்சி படிவத்தில் மட்டும் மாற்றம் செய்தால் போதும். கேஒய்சி என்பது அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவானது. இதில் மாற்றம் செய்தாலே அந்தத் தகவல் நீங்கள் முதலீடு செய்து வைத்திருக்கும் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்படும். தனித்தனியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.”
?தங்கம் வாங்கும்போது சேதாரத்துக்கும் சேர்த்து வாட் வரி வாங்குகிறார்கள். இது சரியா?
ஜெயந்திலால் ஜெ சலானி, தலைவர், மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் டைமன்ட் விற்பனையாளர் சங்கம்.
“விற்பனை செய்யப்படும் தங்கத்தின் எடையைப் பொறுத்து வாட் வரி வசூலிக்கப் படுவதில்லை. அதாவது, விற்பனை செய்யப்படும் மொத்த தொகையில் ஒரு சதவிகிதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்பது விதி. அந்த ஒரு சதவிகித தொகை என்பது சேதாரம், கூலி, விலை என அனைத்து மதிப்புக்கும் சேர்த்து வசூலிக்கப்படும். எனவே, நீங்கள் வாங்கும் தொகைக்குத்தான் வாட் வரி வாங்குகிறார்கள்.”
[/size]
[size]
? என் கணவருக்கு 61 வயதாகிறது. சமீபத்தில் அவருக்கு மாரடைப்பு வந்தது. இந்த நிலையில் அவருக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?
[/size]
“உங்களின் கணவருக்கு மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பாலிசி எடுத்துக் கொள்ள முடியும். இதில் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும். மேலும், குறிப்பிட்ட நோய்களுக்கு இவ்வளவுதான் கவரேஜ் என சீலிங் வைத்திருப்பார்கள். மூத்த குடிமக்கள் பாலிசியில் கோ -பேமென்ட் இருக்கும். இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டு பாலிசி எடுப்பது நல்லது.”
?வரி சேமிப்புக்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறேன். அதாவது, ஐசிஐசிஐ புரூ. டாக்ஸ் சேவர் ஃபண்ட், ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ஆகியவற்றில் மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகளைத் தொடரலாமா?
[/size]
“நீங்கள் முதலீடு செய்துவரும் இரண்டு ஃபண்டுகளின் செயல்பாடு களும் கடந்த மூன்று மற்றும் ஐந்து வருடங்களாக நல்ல நிலையில் உள்ளது. மேலும், இந்த ஃபண்டுகள் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானம் கொடுத்துள்ளது. வரி சேமிப்பு தேவை இருந்தால் இதில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.”
நன்றி: நாணயம் விகடன்[/size]
கேள்வி - பதில்
?என் அப்பா 2000-ம் ஆண்டில் அவருடைய நண்பர்கள் வங்கியில் கடன் வாங்குவதற்காக கேரன்டி கையெழுத்துப் போட்டிருக்கிறார். ஆனால், அந்த நண்பர்கள் கடனை சரியாக திரும்பக் கட்டவில்லை. இப்போது அந்த வங்கி, கடன் தொகை மற்றும் வட்டி சேர்த்து 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என என் தந்தை பெயருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், என் தந்தை 2002-ம் ஆண்டு இறந்துவிட்டார். அவருடைய வாரிசான நான் பணத்தைச் செலுத்த வேண்டுமா?
& ராஜா, வேலூர். முருகபாரதி, வழக்கறிஞர்.
[size]“உங்கள் அப்பா கேரன்டர் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர் இறந்துவிட்டாலும், சட்டப்படியான வாரிசுகள் அந்தக் கடனை திரும்பச் செலுத்தியாக வேண்டும். எனவே, இந்தக் கடனை நீங்கள் செலுத்த வேண்டும். உங்கள் அப்பா கையெழுத்துப் போட்ட நண்பர்களை உங்களுக்குத் தெரிந்தால், அவர்களிடம் பேசி கடன் தொகையைப் பெறலாம்.
கடன் வாங்கியவர்களை உங்களுக்குத் தெரியவில்லையெனில், வங்கிக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பலாம். அதாவது, கடன் வாங்கியவர்களை எந்தவகையிலும் எனக்குத் தெரியாது. சுமார் 14 வருடங்கள் கழித்து இதை எனக்குத் தெரிவித்திருக்கிறீர்கள். மேலும், இந்தக் கடனை செலுத்தும் அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை; அதேநேரத்தில் எந்தவிதமான சொத்துகளும் இல்லை (இல்லை என்கிறபட்சத்தில்) என்று கூறி நோட்டீஸ் அனுப்பலாம்.”
[/size][size]
?பான் கார்டு, டீமேட் கணக்கு, வங்கிக் கணக்கு ஆகியவற்றில் என் கையெழுத்தை மாற்றத் திட்டமிட்டுள்ளேன். பாஸ்போர்ட்டில் என் புதிய கையெழுத்தைப் பதிவு செய்துள்ளேன். ஆனால், டீமேட் கணக்குக்கு பான் கார்டில் உள்ள கையெழுத்தைதான் ஏற்றுக்கொள்வோம் என்கிறார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
[/size]
& டி.ராம், எம்.எஸ்.ஓ. அண்ணாமலை, ஷேர் புரோக்கர்.
[size]“புதிய பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் கையெழுத்து மாற்றம் செய்வதால், புதிய பான் கார்டு தேவை என்பதைக் குறிப்பிடுவது நல்லது. இந்த கார்டு கையெழுத்து மாற்றம் செய்வதற்காக மட்டும்தான். பெயர், பிறந்த தேதி, முகவரி, இனிஷியல் என வேறு எதுவும் மாற்றம் செய்யவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அடுத்து, ஏற்கெனவே உள்ள கையெழுத்து மற்றும் புதிதாக மாற்ற நினைக்கும் கையெழுத்து ஆகிய இரண்டுக்கும் நோட்டரி பப்ளிக் அல்லது அரசு அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி அதை பான் கார்டு வழங்கும் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புதிய பான் கார்டு வாங்குவதற்குக் கட்டணம் இருக்கும். இதைச் செலுத்தி புதிய கையெழுத்திட்ட பழைய எண் கொண்ட பான் கார்டை வாங்கிக் கொள்ளலாம்.”
[/size][size]
?பேலன்ஸ்டு டெப்ட் கன்சர்வேட்டிவ் ஃபண்ட், பேலன்ஸ்டு டெப்ட் அக்ரஸிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். நல்ல ஃபண்டுகளைக் கூறவும்.
[/size]
& ஆரோக்கியசாமி, மணப்பாறை. கோபாலகிருஷ்ணன், சிஇஓ, மணி அவென்யூஸ்.
[size]“பேலன்ஸ்டு டெப்ட் கன்சர்வேட்டிவ் ஃபண்ட் என்கிறபோது ஹெச்டிஎஃப்சி மல்டி கேப் யீல்டு ஃபண்ட் 2005, ஐடிஎஃப்சி அசெட் அலோகேஷன் ஃபண்ட் ஆகியவற்றிலும், பேலன்ஸ்டு டெப்ட் அக்ரஸிவ் ஃபண்டுகளில் யூடிஐ சிசிபி பேலன்ஸ்டு ஃபண்ட், பிர்லா சன் லைஃப் மன்திலி இன்கம் பிளான் ஆகியவற்றிலும் முதலீடு செய்யலாம்.”
?ஹெச்டிஎஃப்சி டாப் 200, பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ், ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட் ஆகியவற்றில் மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா?
[/size]
& கோவிந்தன், திருச்சி.வி.டி. அரசு, நிதி ஆலோசகர்.
[size]“நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஃபண்டுகள் சரியானவையே. அதாவது, லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப், மல்டி கேப் ஆகியவற்றைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். இந்த ஃபண்டுகளின் செயல்பாடுகள் நல்ல நிலையில் உள்ளன. எனவே, எஸ்ஐபி முறையில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.”
[/size][size]
? மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளேன். முகவரி மாற்றம் செய்யும்போது கேஒய்சியில் மட்டும் செய்தால் போதுமா அல்லது முதலீடு செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு தனித்தனியாக தகவல் கொடுக்க வேண்டுமா?
[/size]
& சிவகணேஷ், மதுரை.கமலா ராதாகிருஷ்ணன் , பொது மேலாளர், கேம்ஸ்.
[size]“முகவரி மாறும்போது கேஒய்சி படிவத்தில் மட்டும் மாற்றம் செய்தால் போதும். கேஒய்சி என்பது அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவானது. இதில் மாற்றம் செய்தாலே அந்தத் தகவல் நீங்கள் முதலீடு செய்து வைத்திருக்கும் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்படும். தனித்தனியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.”
?தங்கம் வாங்கும்போது சேதாரத்துக்கும் சேர்த்து வாட் வரி வாங்குகிறார்கள். இது சரியா?
ஜெயந்திலால் ஜெ சலானி, தலைவர், மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் டைமன்ட் விற்பனையாளர் சங்கம்.
“விற்பனை செய்யப்படும் தங்கத்தின் எடையைப் பொறுத்து வாட் வரி வசூலிக்கப் படுவதில்லை. அதாவது, விற்பனை செய்யப்படும் மொத்த தொகையில் ஒரு சதவிகிதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்பது விதி. அந்த ஒரு சதவிகித தொகை என்பது சேதாரம், கூலி, விலை என அனைத்து மதிப்புக்கும் சேர்த்து வசூலிக்கப்படும். எனவே, நீங்கள் வாங்கும் தொகைக்குத்தான் வாட் வரி வாங்குகிறார்கள்.”
[/size]
? என் கணவருக்கு 61 வயதாகிறது. சமீபத்தில் அவருக்கு மாரடைப்பு வந்தது. இந்த நிலையில் அவருக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?
[/size]
– ராஜேஸ்வரி, திருச்சி.ஜெ.ஜெயந்தி, மண்டல மேலாளர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி.
[size]“உங்களின் கணவருக்கு மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பாலிசி எடுத்துக் கொள்ள முடியும். இதில் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும். மேலும், குறிப்பிட்ட நோய்களுக்கு இவ்வளவுதான் கவரேஜ் என சீலிங் வைத்திருப்பார்கள். மூத்த குடிமக்கள் பாலிசியில் கோ -பேமென்ட் இருக்கும். இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டு பாலிசி எடுப்பது நல்லது.”
?வரி சேமிப்புக்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறேன். அதாவது, ஐசிஐசிஐ புரூ. டாக்ஸ் சேவர் ஃபண்ட், ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர் ஃபண்ட் ஆகியவற்றில் மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகளைத் தொடரலாமா?
[/size]
& மாதவன், சென்னை.வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர்.
[size]“நீங்கள் முதலீடு செய்துவரும் இரண்டு ஃபண்டுகளின் செயல்பாடு களும் கடந்த மூன்று மற்றும் ஐந்து வருடங்களாக நல்ல நிலையில் உள்ளது. மேலும், இந்த ஃபண்டுகள் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானம் கொடுத்துள்ளது. வரி சேமிப்பு தேவை இருந்தால் இதில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.”
நன்றி: நாணயம் விகடன்[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum