அமேசானில் 7 நாள் ஆஃபர்: கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!
Fri Oct 10, 2014 6:03 pm
ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே அறிமுகம் செய்து ஒரு நாளில் 600 கோடி விற்பனை செய்தது. இதனை தொடர்ந்து அமேசான் தன் பங்கிற்கு அக்டோபர் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை ஆஃபர்களை வழங்க போவதாக அறிவித்தது. ஃப்ளிப்கார்ட்டில் தவறவிட்ட பலரும் இன்றைய ஆஃபர் நாளை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை முதலே ஆஃபர்களை வழங்கி வருகிறது அமேசான். இந்த ஆஃபர்களில் எப்படி கவனாமாக இருக்க வேண்டும். ஃப்ளிப்கார்ட்டில் நடந்த தவறுகள் போல் இதில் நடக்குமா? இதில் பொருட்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? என கேட்பவர்கள் இந்த 7 விஷயங்களை கட்டாயம் கவனியுங்கள்.
கட்டாயம் கவனி8க்க வேண்டிய 7 விஷயங்கள்:
1. விற்பனையாளரை கவனியுங்கள்:
நீங்கள் பொருட்களை உங்களது விருப்பப்பட்டியலில் சேர்க்கும் முன் அதனை விற்கும் விற்பனையாளர் யார் என்று பாருங்கள் அவருக்கு ஆன்லைனில் நல்ல மதிப்பு இருக்கிறதா என்று கவனித்து பின்னர் பொருட்களை வாங்குங்கள் அதுமட்டுமின்றி அமேசான் ஒரே பொருளை பலவிதமான விற்பனையாளரிடம் இருந்து பெற்றிருக்கும். அதனடிப்படையில் விலை குறைவாக தரும் விற்பனையாளரை தேர்ந்தெடுங்கள்.
2. பொறுமை அவசியம்:
இந்த ஆஃபர் 7 நாட்கள் இருப்பதால் ஆரம்பத்தில் சுமாரான அளவிற்கு ஆஃபரை அளித்தாலும் இறுதியில் ஆஃபர்களை அள்ளி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் பொறுமையாக இருந்து வாங்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.அதுமட்டுமின்றி ஏழு நாட்களில் என்னென்ன பொருட்கள் வருகிறது என்பது கணிக்க முடியாததால் இப்போது சிறப்பாக இருக்கிறது என்று வாங்காமல் பொறுமையாக இருந்து நல்ல விலை ஆஃபர் வரும் போது வாங்குவது சிறந்தது.
3. கார்ட்டில் சேமியுங்கள்:
ஒருவேளை நீங்கள் வாங்கும் பொருள் நல்ல விலையில் இருந்தால் அதனை தவறவிடாமல் மறுநாள் குறைகிறதா என்ற கவலையும் இல்லாமல் உங்கள் பர்சேஸ் கார்ட்டில் இணைத்து விடுங்கள். அதைவிட குறைவான விலை வந்தால் அதனை ஆர்டர் செய்துவிட்டு இதனை கேன்சல் செய்துவிடலாம். அதனால் கார்ட்டில் சேமித்து ஆஃபரை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
4.ரீடெயில்கடைகளை விசாரியுங்கள்!
ஆஃபர் ஏழு நாட்கள் இருப்பதால் அருகில் உள்ள ரீடெயில் கடைகளில் என்ன விலைக்கு அதே பொருள் விற்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து ரீடெயிலை விட குறைவாக இருந்தால் ஆன்லைனிலோ! அல்லது அதே பொருள் ரீடெயிலிலேயே குறைவாக கிடைத்தால் அதனையோ வாங்கி நம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
5.கூடுதல் ஆஃபர்கள் கவனியுங்கள்!
சில பொருட்களோடு இணைந்த ஆஃபர்களாக காம்போ ஆஃபர்களை வழங்கி வருகிறது அநத ஆஃபர்கள் உண்மையாகவே நமக்கு தேவைதானா என்று பாருங்கள் இல்லையெனில் அதனை தவிர்த்து பொருட்களை வாங்குங்கள் அது உங்கள் செலவை குறைக்கும்
6.35% சதவிகிதத்துக்கு மேல்!
இன்றைய ரீடெயில் விலையை ஒப்பிட்டு பாருங்கள் அதிலிருந்து எவ்வளவு வேறுபட்டுள்ளது என்பதையும் பாருங்கள். அதற்கும் நீங்கள் வாங்கும் பொருளுக்கும் குறைந்தபட்சம் 35% விலை தள்ளுபடி இருந்தால் நீங்கள் வாங்குவதில் லாபம் இருக்கும். ஏனேனில் தற்போது பண்டிகை தினம் என்பதால் ரீடெயில் கடைகளிலேயே 20 முதல் 25 சதவிகிதம் தள்ளுபடி உள்ளது.
7. கேஷ் ஆன் டெலிவரி தேர்வு செய்யுங்கள்!
பொருட்களுக்கு பணம் செலுத்தும் போது ''கேஷ் ஆன் டெலிவரி'' முறையை தேர்ந்தெடுங்கள் ஒருவேளை ஃப்ளிப்கார்ட்டில் ரத்தானது போல ரத்தானால் உங்கள் பணம் திரும்ப கிடைக்குமா? அல்லது தாமதம் ஆகுமா? என்ற கவலை இல்லாமல் சிஓடி முறையில் பர்சேஸ் செய்யுங்கள்.
Thanks: Vikadan

Permissions in this forum:
You cannot reply to topics in this forum