சொத்து வாங்கும்போதே பட்டாவும் வாங்க வேண்டுமா?
Fri Sep 05, 2014 4:23 pm
சொத்து வாங்கும்போதே பட்டாவும் வாங்க வேண்டுமா? அல்லதுபின்னர் வாங்கிக்கொள்ளலாமா ?
சொத்து வாங்கும்பொழுதே பட்டா தேவையா? அல்லது பின் னர் வாங்கிக் கொள்ளலாமா? பட்டா எப்படிப் பதிவு செய்யப்படு கிறது என்று நம்மில் பல கேள்விகள் எழுகின்றன என்பது கண் கூடு. இதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகளை நாம் முதலில் அறிந்து கொள்ள
வேண்டும்.
பட்டா, சிட்டா, அடங்கல் அனைத்துமே வீடு, நிலம் ஆகி யவற்றை வாங்கும்பொழுது சரிபார்க்க வேண்டிய ஒன்று தான். பட்டா என்பது ஒரு இட த்தை வாங்கி இருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி. வங்கிக் கடன் பெறுவதற்கு பட்டா கட்டாயம் தேவை. மற்றபடி பட்டாதேவை இல்லை என்பது தான் உண்மை என்கிறார் என்கிறார் சட்டப் பஞ்சா யத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ.
‘‘உதாரணமாக, ஓர் இட த்தைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து பெறப்படும் பதிவு பத்திரமே அனைத்திற்கும் போது மானது. இதே இடத்திற்கு வேறு ஒருவர் பட்டா பெற்றாலும் அது செல்லாது. அந்த இடம் பதிவுசெய்யப்பட்ட வருக்கு மட்டுமே சொந்தம். அதேசமயம் பட்டா எ ன்பது உரிமையாளருக்கு மேலு ம் ஒரு அங்கீகாரம்’’ என்கிறார் சிவ இளங்கோ.
பட்டாப் பதிவு எப்படி முறை யாக நடைபெறுகிறது என்பதை முத லில் பார்க்கலாம். சார்ப திவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப் படும்பொழுது அது ‘அ’ பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இந்தத் தகவலைச் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து அவர்க ளேஅப்பகுதி தாசில்தாருக் கு அனுப்பிவிடுவார்கள். இ துதான் நடைமுறை. ஒரு வர் தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து அரை ஏக்க ர் நிலத்தை வேறு ஒருவரு க்கு விற்றுவிட்டார் என்றா ல், அந்தப் பதிவு விவரங்கள் உடனடியாகத் தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று விடும்.
ஒரு பகுதியை மட்டுமே விற்றதால் இதனைப் பிரித்துப் பதிவு எண்கொடுக்க வேண்டும். இதற் கான கட்டணத்தை நிலத் தைப் பதிவு செய்யும்பொழு தே சார்பதிவாளர் அலுவல கத்தில் கட்டிவிடச் சொல்வா ர்கள். இதற்கு ரசீதும் கொடு த்து விடுவார்கள். உடனடியா கத் தாசில்தாருக்குத் தகவ லும் அனுப்பிவிடுவார்கள். வருவாய்த் துறை அரசு ஆணை எண் 117ன்படி தகவ ல் கிடைத்த 30 நாட் களுக்குள் பட்டாவைப் பதிவு செய்தவரின்வீட்டுக்கு அனுப்ப வே ண்டும். அதில் சார்பதிவாளர் அலுவலக த் தகவலின்படி பட்டா வழங்கப் படுகிறது என்றும் குறிப்பிடப்பட வேண்டும். இந்த நடை முறை தாசில்தார் அலுவலகங்களில் பின்பற்றப்படுகின்றனவா என்ப து சந்தேகமே. அதனால்தான் நாம் தாசில்தார் அலுவலகங்க ளில் பட்டா வாங்கக் காத்திருக்க நிலை ஏற்படுகிறது என்கிறார் சிவ இளங்கோ.
பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களு க்குள் பட்டா வரவில்லையெ ன்றால் தகவல் அறியும் சட்டத் தின் மூலம் நம் மனு மீதான நிலையை அறியலாம்.
நன்றி: விகடன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum