குடும்பச் சொத்து – சட்டம் சொல்வது என்ன?
Fri Sep 05, 2014 4:19 pm
பாகப்பிரிவினை..!
”தந்தை வழி சொத்தில் வாரிசுக ளுக்குக் கிடைக்கும் சொத்துரி மைதான் பாகப்பிரிவினை. அதா வது, குடும்பச்சொத்து உடன்படிக் கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாக வோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமா கப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை
வாரிசுகளுக்கு சமமாக ப் பிரிக்கப் படாத பட்சத் தில் அல்லது அவர்களி ல் யாரேனும் ஒருவரு க்கு ஆட்சேபனை இருந் தால் பாகப் பிரிவினை யை எதிர்த்து நீதிமன்ற த்தில் வழக்குத் தொடர லாம்.
ஒருவருக்கு நான்கு வா ரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுக ளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப் பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தா ல், அந்தப் பாகப்பிரிவினை செல்லா து என அவர் நீதிமன்றத்தைநாடலாம்.
தான பத்திரம்..!
சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறி ப்பாக, நெருங்கிய குடும்ப உறவுக ளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்து கொள்ளும் போது இந்த முறையைக் கையாளலாம்.
ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண் டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூல ம்மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவரு க்கு தானமாகக் கொடுக்கலாம். இ ப்படி செய்வதன் மூலம் முத்திரைத் தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ள லாம்.
ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்ட ணம் சொத்து வழி காட்டி மதிப்பில் 1 சத விகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.
உயில்..!
இது விருப்ப ஆவணம்: சொத்தை தனிப்பட்ட முறையில், தனதுவிருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரு ம் முறைதான் உயில் எனப்படும். ஒரு வர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத் துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல் லாமல் போய்சேர வேண்டும் என்பதற் காக தனது சுயநினைவோ டு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.
தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லா த மூன் றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியு ம். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என் றால், சம்பந்தப்பட்ட வாரிசுக ளுக்கு சொத்து சேர்ந்துவி டும்.
மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழு தப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படு மாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
பெண்களுக்கான சொத்துரிமை!
பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரி மை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தி ல் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திரு மணமான பெண்களுக்கான சொத்துஉரிமையி ல் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
2005-ம்ஆண்டு சட்டதிருத்தத்தி ன்படி, பெண்கள் தனது தந்தை ன் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோ ரமுடியும். மேலும், 25.3.1989-க் குமுன்பு திருமணம்செய்து கொ ண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திரு மணம் செய்துகொ ண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத் தில் உரிமை கோர முடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப் பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பி ரிவினை கோர முடியாது. ஒரு வேளை அந்த சொத்து விற்கப் படாமல் அல்லது பாகம் பிரிக் கப்படாமல் இருந் தால் உரிமை கோர முடியும்.
வாரிசுச் சான்றிதழ்..!
வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட்போன்றவற்றில் முதலீடு செய் திருந்து எதிர்பாராமல் இறக் கும் பட்சத்தில் நாமினிகளிட த்தில் இந்த சொத்துக்கள் ஒப் படைக்கப்படும். ஆனால், நாமி னி இல்லாதபட்சத்திலோ அல் லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்ப ட்சத்திலோ வாரிசுச் சான்றித ழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன் றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சா ன்றிதழ் அடிப்படையில் சொ த்துக்கள் ஒப்படைக்கப்படும்.
பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனை த்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்க ப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத் து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரிய வரும் போது அந்த தீர்வு ரத்து செய்ய ப்படும்.
முதல் மனைவி உயிருடன் இரு க்கும்போது இரண்டாவது திரும ணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்க வில்லை. இதனா ல் இரண்டாவது மனைவிக்கு கண வனது சொத்தில் உரிமையில் லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”
பொதுவாக, சொத்து பாகப் பிரி வினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவ னித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத் தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள் ளலாம்.
நன்றி: விகடன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum