நன்மை செய்வதில்...
Sat Feb 23, 2013 6:19 am
ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த
சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை
உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான்.
சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல்
நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு
இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு
நாய் குரைக்கவில்லை.
அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான்,
குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது
சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த
ஆரம்பிச்சுது. சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.
தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு
கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு
இருக்கேன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.
ஹி ஹி ஹி என்று சிரித்துக் கொண்டிருக்கும் எனக்கு அருமையானவர்களே! நாமும்
பிறருக்கு நன்மையே செய்தாலும் சில பல நேரங்களில் இதுபோல தான் தவறாக
புரிந்து கொள்ளப்படுகிறோம். இருந்தாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும்
நன்மை செய்வோம்.
ஏனென்றால் பரிசுத்த வேதாகமம் சொல்கிறது,
கலாத்தியர் 6:9 நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக
II தெசலோனிக்கேயர் 3:13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum