தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இஸ்ரேல் நாட்டின் வரலாறு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்ரேல் நாட்டின் வரலாறு Empty இஸ்ரேல் நாட்டின் வரலாறு

Mon Aug 25, 2014 8:04 am
இஸ்ரேல் நாட்டின் வரலாறு


இஸ்ரேல் நாட்டின் வரலாறு Israel_map
இஸ்ரேல் நாட்டின் வரலாறு கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்பு இறைவனின் திருச்சித்தப்படி தேராகின் மகனாகிய‌ ஆபிரகாம் ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு தற்போது இஸ்ரேல் என்றழைக்கப்படுகிற கானான் தேசத்தை கி.மு.2161 ல் வந்தடைந்தார். ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்குக்கு இரண்டு மகன்கள்: ஏசா மற்றும் யாக்கோபு. ஈசாக்கின் இளைய மகன் யாக்கோபின்மேல் கடவுள் பிரியமாக இருந்தது மட்டுமன்றி அவனுக்கு இஸ்ரேல் என்றும் பேரிட்டார்.




"அப்போது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்." - ஆதியாகமம் 32:28




யாக்கோபின் வம்சா வழியினர் இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டனர். இதில் யாக்கோபின் 12 மகன்களில் ஒருவராகிய‌ யூதாவின் வம்சா வழியினர் யூதர்கள் என்றழைக்கப்படுகின்றனர். கானான் தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை அடுத்து இஸ்ரவேலர் கி.மு.1871ம் ஆண்டில் எகிப்துக்குச் சென்றனர்.




கிட்டத்தட்ட 400 வருட காலங்கள் எகிப்திலிருந்த இஸ்ரவேலர் எகிப்தியரால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இதையடுத்து கி.மு.1441ம் ஆண்டில் மோசே தலைமையில் இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறி கானான் தேசத்தை நோக்கிச் சென்றனர். சீனாய் வனாந்திரம் வழியாகச் சென்ற அவர்கள் 40 வருட்ங்களுக்குப் பிறகு கி.மு.1400ம் ஆண்டில் யோசுவா தலைமையில் கானானுக்குள் சென்றனர். கானானியரை வெற்றி கொண்ட இஸ்ரவேலர் அத்தேசத்தில் குடியேறினர். கானான் தேசம் இஸ்ரேல் தேசம் என்றழைக்கப்படலாயிற்று. இந்தக் கானானியர் தற்போது பாலஸ்தீனர் என்றழைக்கப்படும் கூட்டத்தினர் அல்ல என்பதை நினைவிற் கொள்க. இப்படி 4000 வருடங்களுக்கு முன்பு யூதர்களின் மூதாதையாரான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் குடியிருந்த தேசத்தை, 3400 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களின் முன்னோர்கள் மறுபடியும் குடியேறிய தேசத்தை யூதர்களுக்குச் சொந்தமானதல்ல என்று இஸ்லாமியர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.




தொடக்கத்தில் நியாயாதிபதிகளால் நிர்வகிக்கப்பட்ட இஸ்ரேல் தேசம், கி.மு.1020 முதல் ராஜாக்களால் ஆளப்பட்டது. இஸ்ரேல் ராஜாக்களில் மிக முக்கியமானவர்கள், முதல் அரசனான சவுல், இஸ்ரேலை வலிமை வாய்ந்த நாடாக மாற்றிய தாவீது மற்றும் தாவீதின் மகனும் மிகுந்த‌ ஞானமுள்ளவருமான‌ சாலமோன் ஆகியோர். ஜெருச‌லேம் ஆல‌ய‌த்தைக் க‌ட்டிய‌வ‌ர் சால‌மோன் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. அத‌ன்பிற‌கு இஸ்ரேல் நாடு இர‌ண்டாக‌ப் பிரிந்து ச‌மாரியாவைத் த‌லைந‌க‌ராக‌க் கொண்டு இஸ்ரேல் என்றும் ஜெருச‌லேமைத் த‌லைந‌க‌ராக‌க் கொண்டு யூதேயா என்றும் இரு நாடுக‌ளாக‌ நிர்வ‌கிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.




கி.மு.722ம் ஆண்டு இஸ்ரேல் நாடு அசீரிய‌ர்க‌ளால் அழிக்க‌ப்ப‌ட்ட‌து ம‌ட்டும‌ன்றி அத‌ன் குடிம‌க்க‌ளும் சித‌ற‌டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். கிட்ட‌த்த‌ட்ட‌ நூறு வருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு பாபிலோனால் யூதேயா பிடிக்க‌ப்ப‌ட்ட‌து. யூதேயாவின் குடிம‌க்க‌ள் நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌ர். கி.மு.586ல் ஜெருச‌லேம் ஆல‌ய‌ம் பாபிலோனியர்களால் இடிக்க‌ப்ப‌ட்ட‌து.




பெரும்பாலான யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஐம்பது வருடங்களுக்குப் பின்பு, பெர்சிய அரசர் சைரஸ், பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அவர் யூதர்களுக்கு மீண்டும் ஜெருசலேத்தை நிர்மாணிக்கும் அனுமதியை அளித்து, அதில் குடியிருக்கும் உரிமையையும் வழங்கினார்.




கி.மு.538ல் கிட்டத்தட்ட 50,000 யூதர்கள் செருபாபேல் தலைமையில் இஸ்ரேலுக்குத் திரும்பினர். பின்னர் எஸ்ரா தலைமயில் இன்னொரு கூட்டம் யூதர்கள் நாடு திரும்பினர். கி.மு.520-515ல் ஜெருசலேம் ஆலயம் இரண்டாவது முறையாகக் கட்டப்பட்டது. கி.மு.333ல் அலெக்ஸாண்டரின் படைகளால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேல் கி.மு.63 வரை கிரேக்கர்களின் பிடியில் இருந்தது. டைட்டஸ் தலைமையிலான ரோமப் படை கி.மு.63ல் ஜெருசலேம் நகரைப் பிடித்தது. கி.பி.70ல் ஜெருசலேம் ஆலயம் ரோமானியர்களால் மீண்டும் இடிக்கப்பட்டது. ஜெருசலேம் நகரை ஏலியா கேபிடோலினா என்று பெயர் மாற்றிய ரோமர்கள் கி.பி.313 வரை இஸ்ரேலை ஆண்டனர். கி.பி.313 முதல் 636 வரை பைசாண்டிய அரசால் ஆளப்பட்ட இஸ்ரேல் கி.பி.636ல் அரபியர்கள் வசம் வந்தது. பைசாண்டிய அரசர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காலிஃப் அப்டெல் மாலிக் ஆலயம் இடிக்கப்பட்ட இடத்தில் டோம் ஆஃப் தி ராக்-ஐ கட்டினார். இவ்வாறாக‌ யூதர்களின் ஆலயம் இருந்த இடத்தில் முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டது.




கி.பி.1099 முதல் 1291 வரை சிலுவைப்போர் வீரர்கள் வசமும் கி.பி. 1291 முதல் 1516 வரை மம்லுக் அரசின் வசமும் இஸ்ரேல் நாடு இருந்தது. 1516 முதல் 1918 வரை ஓட்டோமான் அரசர்கள் இஸ்ரேலை ஆண்டனர். சுல்தான் சுலைமான் காலத்தில் (1520-1566) பழைய ஜெருசலேமின் சுவர்கள் மீண்டும் கட்டப்பட்டது. 1799ல் ஃப்ரான்ஸின் நெப்போலியன் போனபார்ட் காசா நகரைக் கைப்பற்றி ஜெருசலேமை நோக்கி விரைந்தார். யூதர்களை ஃப்ரான்ஸ் படையினரின் உளவாளிகள் என்று சந்தேகித்த முகமதியர்கள் அவர்களை அழிக்கத் திட்டமிட்டனர். இதற்கிடையில் திடீரெனத் தன் திட்டத்தை மாற்றிய நெப்போலியன் ஜெருசலேமைத் தாக்காமல் திரும்பிச் சென்றார். யூதர்கள் இறைவனிடம் செய்த மன்றாட்டு தான் இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. 1909ல் டெல் அவிவ் நகரம் (Hill of Spring) அமைக்கப்பட்டது. இந்ந‌கரம் தான் பின்னர் இஸ்ரேலின் தலைந‌கராகியது என்பது குறிப்பிடத்தக்கது. 1917ல் முதலாம் உலகப்போர் தொடங்கியது. ஆலன்பை தலைமையில் பிரிட்டிஷ் படைகள் எகிப்திலிருந்து சீனாய் பாலைவனம் வழியாக ஜெருசலேம் நோக்கி விரைந்தன. அக்டோபர், 1918ல் ஜெருசலேம் நகரை வெற்றி கொண்ட பிரிட்டிஷ் படைகள் நகரின் புனிதத் தன்மை கருதி கால்னடையாகவே நடந்து நகருக்குள் சென்றனர். இந்த வெற்றியை யூதர்கள் தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதினர். பின்னர் 1948 வரை இஸ்ரேல் பிரிட்டன்வசம் இருந்தது.




இப்படியாகப் பல்வேறு காலக்கட்டங்களில் பல நாட்டு அரசர்களால் ஆளப்பட்ட இஸ்ரேலை சுதந்திர நாடாக்கி சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எல்லாம் அங்கு ஒன்றுகூடி வாழவேண்டும் என்ற எண்ணம் மட்டும் யூதர்கள் மத்தியில் இருந்து கொண்டே வந்தது. இந்த எண்ணம் சீயோனிசம் என்ற யூத தேசிய விடுதலை இயக்கத்தின்மூலம் உத்வேகம் பெற்றது. சீயோன் எனப்படுவது ஜெருசலேமில் உள்ள ஒரு மலை ஆகும். 1882 முதல் 1903 வரை ஏராளமான யூதர்கள் முக்கியமாக ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர். இந்த சம்பவம் முதல் அலியா என்றழைக்கப்படுகிறது. 1897ல் யூத நாட்டின் ஆன்மீகத் தந்தை என்றழைக்கப்பட்ட தியோடர் ஹெர்சல் ஸ்விட்சர்லாந்தில் பேசல் என்ற இடத்தில் முதல் சீயோன் மாநாட்டைக் கூட்டி யூத மக்களுக்கான புதிய‌தொரு நாட்டை அமைக்க யூதர்களுக்குள்ள உரிமையைப் பிரகடனம் செய்தார். 1904 முதல் 1914 வரை இரண்டாவது கட்டமாக யூதர்கள் ரஷியா மற்றும் போலந்திலிருந்து குடிபெயர்ந்தனர். இது இரண்டாவது அலியா என்றழைக்கப்படுகிறது.




ஒட்டோமான் அரசின் இறுதிப்பகுதியில் துருக்கிய‌ர்க‌ளுக்கு முன்னுரிமை கொடுக்க‌ப்ப‌ட்ட‌தால் அர‌பிய‌ரிடையே அதிருப்தி ஏற்ப‌ட்ட‌து. ஓட்டோமான் அர‌சிட‌மிட‌மிருந்து சுத‌ந்திர‌ம் வாங்கிக் கொடுக்க‌ப்ப‌டும் என்ற‌ வாக்குறுதியை ந‌ம்பி யூதர்களும் அரபிகளும் முத‌ல் உல‌க‌ப்போரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட‌ நேச நாடுகளுக்கு ஆத‌ர‌வ‌ளித்த‌ன‌ர். இதனால் அர‌பு தேசிய‌ம் அமைக்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ற‌ எழுச்சி ஏற்ப‌ட்ட‌து. பாலஸ்தீனத்திலுள்ள‌ அரேபிய‌ர்க‌ளுக்கும் யூத‌ர்க‌ளுக்கும் ப‌கைமை வ‌ள‌ர்ந்த‌து.




நவம்பர் 2, 1917ல் இஸ்ரேல் நாட்டை ஏற்படுத்துவதற்கு பிரிட்டிஷ் அமைச்ச‌ரவையால் அங்கீகரிக்கப்பட்ட பிரகடனம் ஆர்தர் ஜேம்ஸ் பல்ஃபோர் என்பவரால் வெளியிடப்பட்டது. பல்ஃபோர் பிரகடனம் என்றழைக்கப்பட்ட இந்த பிரகடனம் யூதர்களுக்கு தனி நாடு அமைப்பதற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. 1919 முதல் 1923 வரை மூன்றாவது கட்டமாக யூதர்கள் ரஷியாவிலிருந்து குடியேறினர். இது மூன்றாவது அலியா என்றழைக்கப்படுகிறது. 1922ல் பிரிட்டன் Mandate for Palestine என்றழைக்கப்படும் தனி இஸ்ரேல் நாடு அமைக்கும் அதிகாரத்தை வழங்கியது. 1924 முதல் 1932 வரை யூதர்கள் நான்காவது அலியா கால கட்டத்தில் போலந்திலிருந்து குடிபெயர்ந்தனர்.




முதல் உலகப்போருக்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு வந்து குடியேறிய யூதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து. மேலும் மோசமடைந்து வந்த உலகளாவிய பொருளாதார சூழலாலும் வேறுபல காரணங்களாலும் அரபியர்களும் பெருமளவில் வர ஆரம்பித்தனர். பெருமளவில் அதிகரித்த யூதக் குடியிருப்புகளும் யூதர்களால் வாங்கப்பட்ட பண்ணை நிலங்களிலும் அவர்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலும் அரபியர்களை பணியமர்த்தாததும் அரபியர்களின் கோபத்தை அதிகரித்தன. இதையடுத்து அரபியர்கள் யூதர்களைத் தாக்கத் தொடங்கினர். ஆகஸ்ட் 1929ல் ஹெப்ரான் படுகொலை என்றழைக்கப்பட்ட சம்பவத்தில் 67 யூதர்கள் கொல்லப்பட்டனர்.




1936 முதல் 1939 வரை அரபியர் யூதர்களுக்கு எதிராக‌ கிளர்ச்சி செய்தனர். அரபியர்கள் கொடுத்த நெருக்கடியை அடுத்து பிரிட்டன் பாலஸ்தீனத்திற்கு குடியேறிக் கொண்டிருந்த‌ யூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆரம்பித்தது. இதையடுத்து பெரும்பாலான யூதர்களை சட்டத்திற்கு விரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்பட வேண்டியதாயிற்று. இதனால் மேலும் பதட்டம் அதிகரித்தது. 1933 முதல் 1939 வரை ஐந்தாவது அலியா கால கட்டத்தில் யூதர்கள் நாஜிக் கட்சியினரின் அட்டகாசத்தால் ஜெர்மனியிலிருந்து குடியேறினர். 1941ல் லேஹி என்ற ரகசிய அமைப்பு அமைக்கப்பட்டது; பல்மாக் எனப்படும் அதிரடிப்படையும் அமைக்கப்பட்டது. 1944ல் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பகுதியாக யூத படைப் பிரிவு அமைக்கப்பட்டது.




பிரச்சினைகளை சமாளிக்க முடியாத பிரிட்டன், ஐ.நா. சபையிடம் தீர்வு காண வேண்டிக்கொண்டது. 1947, மே 15 ல் ஐ.நா. UUNSCOP என்ற கமிட்டியை அமைத்தது. இதில் 11 நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர். நடுநிலைமையை உறுதி செய்வதற்காக வல்லரசு நாடுகள் எதுவும் இதில் அனுமதிக்கப்படவில்லை.




ஐந்து வாரங்களுக்குப் பிறகு இந்தக் கமிட்டி தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இதன்படி பாலஸ்தீனம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி யூதர்களுக்கும் இன்னொரு பகுதி அரபியர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும். இந்த அறிக்கை ஐ. நா. சபையில் தீர்மானம் 181 வடிவத்தில் நவம்பர் 1947ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்திற்கு 33 நாடுகள் ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 10 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அரபு லீக்கைச் சேர்ந்த அரபு நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த‌த் தீர்மான‌ம் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌வுட‌ன் பால‌ஸ்தீனிய‌ர்க‌ளுக்கும் யூத‌ர்க‌ளுக்கும் பால‌ஸ்தீன‌ப் ப‌குதிக‌ளைப் பிடிப்ப‌தில் க‌டும் மோத‌ல் ஏற்ப‌ட்ட‌து. 1948, மே 14 அன்று இஸ்ரேல் நாடு பிர‌கட‌ன‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. ம‌றுநாளே அர‌பு நாடுக‌ள் இஸ்ரேல் மீது ப‌டையெடுத்த‌ன‌.




பின்குறிப்பு: இந்தக் கட்டுரை இஸ்ரேலிய வரலாற்றின் சுருக்கமே ஆகும். இதில் ஓட்டோமான் அரசின் தொடக்கக் காலம் வரையிலான ஆண்டுக் கணக்குகள் தோராயமானவை.






[size]

நன்றி: சகோதரர் ராபின் அவர்கள்[/size]
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்ரேல் நாட்டின் வரலாறு Empty Re: இஸ்ரேல் நாட்டின் வரலாறு

Mon Aug 25, 2014 8:06 am
ஆறு நாள் யுத்தம்
முன்னுரை
இஸ்ரேல் நாட்டின் வரலாற்றில் இந்த ஆறு நாள் யுத்தம் மிகவும் முக்கியமான சம்பவ‌ம் ஆகும். ஆறு நாட்களில் முடிந்து போன‌ இந்தப் போரில் இஸ்ரேலை எதிர்த்து அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டான் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் சண்டையிட்டன. மேலும் ஈராக், சவுதி அரேபியா, சூடான், துனீசியா, மொனாக்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக படைகளையும் ஆயுதங்களையும் அனுப்பின. இந்தப் போரில் சோவியத் யூனியன் அரபு நாடுகளுக்கும் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இஸ்ரேலுக்கும் ஆதரவளித்தன. உல‌க‌ நாடுக‌ள் அனைத்தும் விய‌க்கும் வ‌ண்ண‌ம் சின்ன‌ஞ்சிறு நாடான‌ இஸ்ரேல் ம‌க‌த்தான‌ வெற்றி பெற்ற‌து.
யூதர்கள் மீது முஸ்லீம்களுக்கு கடுமையான வெறுப்பும் பகையும் உண்டு. யூதர்கள் முகமதுவை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளாததே இதற்கு முக்கியமான‌ காரணம். இஸ்ரேல் நாடு உருவானதிலிருந்து அந்த நாட்டை அழிக்க இன்றளவும் தொடர்ந்து முயற்சி செய்து வரும் அரபு நாடுகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதற்குக் காரணம் இறைக்கரம் இஸ்ரேலைக் காத்து வருவதே. இன்னிலையில் உலகம் முழுவதும் இஸ்ரேல் நாட்டை ஒரு பயங்கரவாத நாடாகச் சித்தரித்தும் யூதர்கள் அந்த இடத்தை முஸ்லீம்களிடமிருந்து பிடுங்கி ஆக்கிரமித்துள்ளதாகவும் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதை முன்னின்று செய்பவர்கள் முஸ்லிம்கள்; அவர்களுக்கு துணை நிற்பவர்கள் நாத்திகர்கள். இந்தப் பொய் பிரச்சாரம் திரும்பத் திரும்பச் செய்யப்படுவதாலும் இதற்குச் சரியானபடி பதில் கொடுக்கப்படாததாலும் பலர் இதை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் பல கிறிஸ்தவர்களும் உண்டு. இன்னிலையில் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டுமெனில் இஸ்ரேல் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.
போருக்கான காரணங்கள்
எகிப்தின் வசமிருந்த சூயஸ் கால்வாய் 1882ம் ஆண்டு பிரிட்டன் வசம் வந்தது. 1948‍ம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவானதிலிருந்து அரபு நாடுகள் தொடர்ந்து விரோதம் பாராட்டி வந்தன. பிரிட்டனின் ஆக்கிரமிப்பும் இஸ்ரேல் நாடு உருவாவதற்கு பிரிட்டன் செய்த உதவியும் எகிப்திற்கு எரிச்சலூட்டியது. சூயஸ் கால்வாய் வழியாகச் சென்ற இஸ்ரேல் நாட்டின் கப்பல்களை எகிப்து தாக்கியது. 1956ம் ஆண்டு எகிப்து அதிபர் நாசர் சூயஸ் கால்வாய் நாட்டுடைமையாக்கப்படுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எகிப்தைத் தாக்கின. இறுதியில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனின் தலையீட்டின்பேரில் போர் முடிவுக்கு வந்தது. இந்தப் போர் அரபு நாடுகளிடையே இஸ்ரேலுக்கு எதிராக விரோதத்தை மேலும் வளர்த்தது.
இஸ்ரேல் யோர்தான் நதியின் நீரை பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக அரபு நாடுகள் அணை கட்டத் தொடங்கின. 1965 ஆம் ஆண்டு இஸ்ரேல் படைகள் சிரியாவில் நடந்த இந்தக் கட்டுமானப் பணிகளைத் தடுக்கும் விதமாகத் தாக்குதல் நடத்தின.
1966, நவம்ப‌ர் 11 ஆம் தேதி எல்லையில் ரோந்து சென்ற‌ இஸ்ரேல் ப‌டையின‌ர் 3 பேர் க‌ண்ணி வெடியால் சிக்கி இற‌ந்த‌ன‌ர், ஆறு பேர் காய‌ம‌டைந்த‌ன‌ர். தொட‌ர்ந்து இஸ்ரேல் எஸ் சாமு என்ற‌ யோர்தான் கிராம‌த்தைத் தாக்கியது. இஸ்ரேல் ப‌டைக‌ளும் யோர்தான் ப‌டைக‌ளும் நேருக்கு நேர் தாக்கிக் கொண்ட‌ன‌. யோர்தான் அதிப‌ர் ஹூசைன் இஸ்ரேலுக்கு எதிராக‌ப் படைக‌ளைத் திர‌ட்ட‌ ஆர‌ம்பித்தார்.
சிரியா இஸ்ரேலின் வ‌ட‌கிழ‌க்கு க‌லிலேயா ப‌குதியில் வ‌சித்து வ‌ந்த‌ பொதும‌க்க‌ளைத் தாக்க‌த் தொடங்கிய‌து. இஸ்ரேலின் கவச டிராக்டர்கள் சிரியாவுடனான எல்லையில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் நிலத்தை உழ ஆரம்பித்தன. சிரிய படைகள் இதை எதிர்த்து தாக்குதல் நடத்தின. பதிலுக்கு இஸ்ரேலிய படைகள் தாக்கின. 1966 ஆம் ஆண்டு எகிப்தும் சிரியாவும் வேறு நாடுகள் தங்களைத் தாக்கினால் ஒன்றுக்கொன்று உதவி செய்யவேண்டும் என்று உடன்படிக்கை செய்துகொண்டன. 1967, ஏப்ரல் 7 அன்று இஸ்ரேலிய விமானங்களும் தாக்குதலில் கலந்துகொன்டதை அடுத்து பிரச்சனை தீவிரமடைந்தது. இதற்கிடையே சோவியத் உளவுத்துறை இஸ்ரேல் சிரியாவுடனான எல்லையில் படைகளைக் குவித்து வருவதாக எகிப்திற்கு தவறான தகவலை அனுப்பி பதட்டத்தை மேலும் அதிகரித்தது. சிரிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேலை ஒழித்துக் கட்டப் போவதாக சூளுரைத்தார்.

  • பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய படைகளை விலக்கிக் கொண்டது. எகிப்து சினாய் பகுதியில் படைகளை குவித்தது.


  • மே 22 ஆம் தேதி திரன் ஜலசந்தியில் இஸ்ரேலிய கப்பல்கள் செல்வதற்கு எகிப்து தடைவிதித்தது. மேற்கத்திய நாடுகள் இத்தடையை எதிர்த்தாலும் இந்தியாவும் அரபு நாடுகளும் எகிப்தை ஆதரித்தன.


  • மே 30 ஆம் தேதி ஜோர்டான் எகிப்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. எகிப்து அதிபர் நாசர் “எங்களுடைய அடிப்படை நோக்கம் இஸ்ரேலை அழிப்பதே” என்று அறிவித்தார். விரோதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் விடுத்த வேண்டுகோளுக்கு ஜோர்டான் செவிமடுக்கவில்லை. எகிப்து கமாண்டோ படைகளையும் சோவியத் யூனியனிலிருந்து தருவிக்கப்பட்ட ஆயுதங்களையும் ஜோர்டானுக்கு அனுப்பியது. இன்னிலையில் ஈராக், சூடான், குவைத், அல்ஜீரியா ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக‌ தங்கள் படைகளை நகர்த்தத் துவங்கின.


  • மே 23 ஆம் தேதி இஸ்ரேல் அமைச்சரவை கூடி மே 25 ஆம் தேதிக்குள் திரன் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால் தாக்குதல் நடத்துவதென தீர்மானித்தது. தொடர்ந்து அமெரிக்காவும் ஐ.நா. சபையும் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் பலனளிக்கவில்லை.


  • பெரும்பாலான அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராகத் திரும்பிய நிலையில் முதலில் தாக்குதல் நடத்துவது என்ற புத்திசாலித்தனமான முடிவை இஸ்ரேல் எடுத்தது. ஜூன் 5 ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதை அடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த‌ ஆறு நாள் யுத்தம் ஆரம்பித்தது.


படை பலம்
எகிப்து 1 இலட்சம் துருப்புகளை சீனாய் பகுதியில் குவித்து வைத்திருந்தது. 950 டாங்குகளும் தயாராக இருந்தன. மேலும் எகிப்திடம் 450 விமானங்கள் கொண்ட மிகப்பெரிய விமானப் படை இருந்தது. சிரியா 75,000 துருப்புகளையும் ஜோர்டான் 55,000 துருப்புகளையும் தயாராக வைத்திருந்தன. இஸ்ரேல் 2,64,000 துருப்புகளை தயார் செய்திருந்தது. இதில் சிவிலியன்களும் கணிசமான அளவில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 200க்கு மேற்பட்ட போர் விமானங்களும் இருந்தன. எதிரி நாட்டுப் படைகளை ஒப்பிடும்போது ஒழுங்கிலும் திறமையிலும் இஸ்ரேல் நாட்டுப் படைகளே சிறந்து விளங்கியது.
போரின் போக்கு
இஸ்ரேல் தனது உள‌வுத்துறை மூல‌ம் ஜோர்டானின் போர்த் திட்ட‌ங்க‌ளை அறிந்து கொண்ட‌து. ஜோர்டான் மூன்றே நாட்க‌ளில் இஸ்ரேல் த‌லைநக‌ரான‌ டெல் அவிவ் நக‌ர‌த்தை பிடித்து விட‌லாம் என்று த‌ப்புக் க‌ண‌க்குப் போட்ட‌து. இத‌ற்கிடையே 1967, ஜூன் 5 ஆம் தேதி 7:45 மணிக்கு எதிரிக‌ள் யாரும் எதிர்பாராத‌ நேர‌த்தில் எகிப்திய‌ விமான‌ப் படை மீது இஸ்ரேல் போர் விமான‌ங்க‌ள் க‌டுமையான‌ தாக்குத‌லை ந‌ட‌த்தின. ச‌ற்றேர‌க்குறைய‌ 200 போர் விமான‌ங்க‌ள் ரேடார்க‌ளின் க‌ண்க‌ளில் ப‌டாத‌வாறு தாழ்வாக‌ச் சென்று எகிப்தின் போர் விமான‌ங்க‌ள் மீதும் ஓடுத‌ள‌ங்க‌ளின்மீதும் குண்டு ம‌ழை பொழிந்த‌ன‌. 300 எகிப்து போர் விமான‌ங்க‌ள் நொறுக்கப்பட்டன. இஸ்ரேலுக்கு மிக‌க் குறைந்த‌ அள‌விலேயே சேத‌ம் ஏற்ப‌ட்ட‌து. எதிரிக‌ளுக்குப் பேரிடியாக‌ விழுந்த‌ இந்த‌த் தாக்குத‌ல் போரில் மிக‌ப் பெரிய‌ திருப்ப‌த்தை ஏற்ப‌டுத்திய‌து. அன்று ம‌தியமே, ஈராக், சிரியா ம‌ற்றும் ஜோர்டானிய‌ போர் விமான‌ங்க‌ள் இஸ்ரேல் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தின‌. உட‌னே இஸ்ரேல் விமான‌ங்க‌ள் ப‌தில் தாக்குத‌ல் நட‌த்தின.அன்று பொழுது சாய்வதற்குள் ஜோர்டானின் விமான‌ப் ப‌டை முற்றிலுமாக‌ அழிக்க‌ப்பட்ட‌து. சிரியா ம‌ற்றும் ஈராக் நாடுக‌ளும் த‌ங்க‌ளுடைய‌ பெரும்பாலான போர் விமான‌ங்க‌ளை இழ‌ந்த‌ன‌. முத‌ல் இர‌ண்டு நாட்க‌ள் ந‌ட‌ந்த‌ விமான‌த் தாக்குத‌லில் 426 எதிரி விமான‌ங்க‌ளை அழித்த‌தாக‌வும் 26 விமான‌ங்களை இழந்ததாகவும் இஸ்ரேல் அறிவித்த‌து.
விமான‌ப் படைத் தாக்குத‌லைய‌டுத்து த‌ரைப் ப‌டைத் தாக்குத‌ல்க‌ள் ஆர‌ம்பித்த‌ன‌. எகிப்தின் 1 இல‌ட்ச‌ம் துருப்புக‌ளுக்கு எதிராக‌ இஸ்ரேல் 70,000 பேர் கொண்ட‌ படையை நிறுத்திய‌து. எகிப்தின் எதிர்பார்ப்புக்கு மாறாக‌ வ‌ட‌க்கு ம‌ற்றும் ம‌த்திய‌ சினாய் வழியாக‌ டாங்குக‌ளையும் துருப்புக‌ளையும் ஒரு சேர‌ ப‌ய‌ன்ப‌டுத்தி எதிர்பாராத‌ நேர‌த்தில் தாக்குத‌ல் நட‌த்த‌ இஸ்ரேல் திட்ட‌மிட்ட‌து. இஸ்ரேல் த‌ள‌ப‌தி ஷாரோன் தாக்குத‌லைத் தொட‌ங்கினார். ந‌ன்றாக‌த் திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ இத்தாக்குத‌லின் ஒரு ப‌குதியாக‌ இரு ப‌டைப்பிரிவுக‌ள் உம்-காதேப் ப‌குதிக்கு அனுப்ப‌ப்ப‌ட்ட‌து. ஒரு பிரிவு எகிப்திய நகரான அபு-அஜைலாவுக்கு தெற்குப் ப‌குதியில் ஊடுருவியது. இர‌ண்டாவ‌து பிரிவு அபு-அஜைலாவை கிழ‌க்குப் ப‌குதியிலிருந்து சுற்றி வ‌ளைத்த‌து. இத‌ற்கிடையே பார‌சூட் படை எகிப்திய‌ பீர‌ங்கிக‌ளை தாக்கி அழித்த‌து. மூன்ற‌ரை நாட்க‌ள் ந‌ட‌ந்த‌ இந்த‌த் தாக்குத‌ல் அபு-அஜைலா வீழும் வ‌ரை தொட‌ர்ந்த‌து. அபு-அஜைலா வீழ்ந்த‌தை அடுத்து ப‌ய‌ந்து போன எகிப்திய‌ த‌ள‌ப‌தி அப்தல் ஹ‌க்கிம் அம‌ர் சினாய் ப‌குதியில் குவித்து வைக்க‌ப்ப‌ட்ட‌ அனைத்து ப‌டைப் பிரிவுக‌ளையும் உட‌னே பின்வாங்குமாறு உத்த‌ர‌விட்டார். இது எகிப்து தோல்வியை ஒத்துக் கொள்வ‌துபோல‌ ஆயிற்று. நான்கு நாட்க‌ள் ந‌ட‌ந்த‌ இந்த‌த் தாக்குத‌லில் நூற்றுக்க‌ண‌க்கான‌ எகிப்து வீர‌ர்க‌ள் உயிரிழ‌ந்த‌து ம‌ட்டும‌ன்றி ஏராள‌மான‌ போர் ஆயுத‌ங்க‌ளையும் எகிப்து இழ‌ந்த‌து. ஜூன் 8 ஆம் தேதி சினாய் முழுமையாக‌க் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌து.
தொடக்கத்தில் போரில் இறங்க தயக்கம் காட்டிய ஜோர்டான் எகிப்து அதிபர் தம்முடைய படைகள் வெற்றி பெற்று வருவதாக சொன்ன பொய்யை நம்பி சம்மதித்தது. ஜூன் 5ம் தேதி ஜோர்டான் விமானப்படை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படுத்த முடியவில்லை. ஜூன் 6ம் தேதி இஸ்ரேல் படைகள் மேற்குக் கரை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் விமானப் படை ஜோர்டான் விமானப் படையைத் தாக்கி அழித்தது. இஸ்ரேலிய தரைப் படைகளும் பாரசூட் படையும் ஜெருசலேமை சுற்றி வளைத்தன. புனித நகரான ஜெருசலேமிற்கு சேதம் ஏற்படும் என்பதால் இஸ்ரேலிய தளபதி தயான் நகருக்குள் நுழையவேண்டாம் என்று படைகளுக்கு உத்தரவிட்டார். ஜோர்டானிய‌ பகுதிகளை ஒவ்வொன்றாக கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம் ஜூன் 7ம் தேதி ரமல்லா நகருக்குள் நுழைந்தது. இதற்கிடையே ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்தத்திற்கு முயற்சிப்பதை அறிந்த தயான் தன் முடிவை மாற்றிக் கொண்டு ஜெருசலேம் நகரைக் கைப்பற்றத் தன்னிச்சையாக முடிவெடுத்தார். இஸ்ரேலின் பாரசூட் வீரர்கள் பழைய‌ ஜெருசலேம் நகருக்குள் நுழைந்து மேற்குச் சுவர் மற்றும் டெம்பிள் மவுன்ட் பகுதிகளைக் கைப்பற்றினர். இஸ்ரேல் ராணுவத்தின் தரைப் படைப் பிரிவு மேலும் நகர்ந்து யூதேயா மற்றும் எபிரோன் பகுதிகளைக் கைப்பற்றியதோடு யோர்தான் நதியையும் நெருங்கியது.
இஸ்ரேலிய ராணுவம் தோற்கடிக்கப்பட்டதாகவும் எகிப்திய பீரங்கிப் படை விரைவில் டெல்_அவிவ் நகரைக் கைப்பற்றும் என்றும் எகிப்து பொய்யான தகவல்களை வெளியிட்டது. சிரியா இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது. ஆனால் இஸ்ரேல் விமானப் படை எகிப்தில் தன்னுடைய போர் திட்டங்களை வெற்றிகரமாக முடித்து விட்டு சிரிய விமானப் படையை தாக்கத் தொடங்கும்போதுதான் எகிப்திலிருந்து வந்த தகவல்கள் தவறானவை என்பதை சிரியா புரிந்து கொண்டது. ஜூன் 5ம் தேதி சாயுங்காலத்திற்குள் இஸ்ரேல் விமானங்கள் சிரியா விமானப் படையின் மூன்றில் இரண்டு பகுதியை அழித்தது. இஸ்ரேலைத் தாக்க முயன்ற சிரிய பீரங்கிப் படையின் பெரும்பகுதி யோர்தான் நதியில் மூழ்கி அழிந்தது. சிரியா தரைப் படைத் தாக்குதலைக் கைவிட்டது. இஸ்ரேல் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்திலிருக்கும் கோலான் குன்றுகளைப் பிடிக்கத் திட்டமிடப்பட்டது. இஸ்ரேலின் சிறந்த உளவாளியான ஏலி கோஹென் சேகரித்து வைத்திருந்த தகவல்கள் இத்திட்டத்திற்கு மிகுந்த உதவியாக இருந்தது. சிரியப் படைகள் தப்பி ஒடிவிட்டதால் ஜூன் 10 ஆம் தேதி எலாட் பெலெட் தலைமையிலான இஸ்ரேலியப் படை வெகு எளிதாக கோலான் குன்றுகளைக் கைப்பற்றியது. இன்னிலையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

- லேவிய‌ராக‌ம‌ம் 26:7,8

எதிரிக‌ள் படைப‌ல‌த்திலும் ஆய‌த‌ப் ப‌ல‌த்திலும் இஸ்ரேலைவிட‌ அதிக‌மாக‌ இருந்தாலும் இஸ்ரேலே வெற்றி பெற்ற‌த‌ற்குக் கார‌ண‌ம் தேவ‌ன் கொடுத்த‌ வாக்குத்த‌த்த‌மே.
இஸ்ரேலின் வெற்றிக்கான‌க் கார‌ண‌ங்க‌ள்
இந்த‌ ஆறு நாள் யுத்த‌தில் இஸ்ரேலுக்கு வெற்றியைத் தேடித் தந்ததில் விமான‌ப் படை முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கித்த‌து. முக்கிய‌மாக போரின் முத‌ல் நாளில் எகிப்தின் விமான‌ப் படை மீது ந‌ட‌த்த‌ப்பட்ட‌ அதிர‌டித் தாக்குத‌ல் போரின் போகையே மாற்றிய‌து. திறமையற்ற‌ ஜோர்டான் ம‌ற்றும் எகிப்திய‌ விமான‌ப் படைகள் இஸ்ரேலுக்கு எதிராக‌ ந‌ட‌த்திய‌ தாக்குத‌ல்க‌ள் தோல்வியில் முடிவ‌டைந்த‌ன‌. போருக்கு முன்பே எதிரி நாடுக‌ளின் விமானிகள் பல‌ர் விமானங்களோடு இஸ்ரேல் நாட்டில் த‌ஞ்ச‌ம் புகுந்த‌ன‌ர். இது எதிரி நாட்டு விமான‌ங்க‌ளைப் ப‌ற்றி அறிந்து கொள்வ‌த‌ற்கு மிகுந்த‌ உத‌வியாக‌ இருந்த‌து. இந்த‌ப் போரில் இஸ்ரேலுக்கு உத‌வியாக‌ இறைவன் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றிய‌ பல த‌க‌வ‌ல்க‌ளும் உண்டு.
போரின் விளைவுக‌ள்

  • இஸ்ரேல் காசா, சினாய் தீபகற்பம், கிழ்க்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஜோர்டான் நதியின் மேற்குக் கரை மற்றும் கோலான் குன்றுகளை கைப்பற்றியது. இஸ்ரேலின் நிலப்பரப்பு மூன்று மடங்காக அதிகரித்தது: போருக்கு முன்பு 8000 சதுர மைல் பரப்பளவாக இருந்த இஸ்ரேலின் நிலப் பரப்பு 26000 சதுர மைல்களாக அதிகரித்தது.


  • கைப்பற்றப்பட்ட பகுதிகளில் வசித்து வந்த 10 இலட்சம் அரபியர்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்தனர்.


  • இஸ்ரேலின் போர்த்திறமை உலகிற்கு வெளிக்காட்டப்பட்டது.


  • இஸ்ரேலின் தலைமைத் தளபதி இஷாக் ராபின் இந்த‌ உல‌க‌மே விய‌க்கும் வ‌ண்ண‌ம் இஸ்ரேல் வெற்றிப் பெற்ற‌த‌ற்குக் கார‌ண‌ம் போரில் தோற்றால் த‌ங்க‌ளுடைய‌ நாடு முற்றிலுமாக‌ அழிக்க‌ப்ப‌ட்டு விடும் என்று புரிந்து கொண்டு வீர‌த்துட‌ன் போரிட்ட‌தே என்று கூறினார்.


  • இஸ்ரேல் சினாய் பகுதியை எகிப்துக்கும் கோலான் குன்றுகளை சிரியாவுக்கும் கொடுக்க முன்வந்தது. அமெரிக்கா வழியாக அனுப்பப்பட்ட‌ இந்தச் செய்தி சம்பந்தப்பட்ட நாடுகளைச் சென்றடைந்ததா என்பதில் குழப்பமே நீடிக்கிறது. ஆனால் பின்னர் நடந்த அரபு நாடுகளின் கார்ட்டோம் உச்சி மாநாட்டில் எந்த சமாதானமும் அங்கீகாரமும் பேச்சுவார்த்தையும் இஸ்ரேலுடன் கிடையாது என்று முடிவெடுக்கப்பட்டது. எகிப்தும் ஜோர்டானும் ஐக்கிய நாடுகள் சபையின் 242 ஆவது தீர்மானத்தை ஏற்றுக் கொண்டன. இந்தத் தீர்மானத்தின்படி இஸ்ரேல் தான் கைப்பற்றிய பகுதிளைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். ஆனால் இத்தீர்மானத்தை இஸ்ரேலும் மற்ற நாடுகளும் தங்கள் விருப்பப்படி விளக்க முற்பட்டதால் குழப்பமே நீடித்தது.


  • ஜோர்டானும் எகிப்தும் மேற்குப் பகுதி மற்றும் காசா பகுதிகளை உரிமை கொண்டாடுவதைக் கைவிட்டன.


  • இஸ்ரேல் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களும் சிரியர்களும் ஜோர்டானுக்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் இடம் பெய்ர்ந்தனர். அரபு நாடுகளில் வசித்து வந்த யூதர்கள் துன்புறுத்தப்பட்டனர்; பலர் நாடு கடத்தப்பட்டனர்.


  • ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தக்க வைத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களும் யூதர்களும் புனித ஸ்தலங்களை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.


  • இந்தப் போரில் இஸ்ரேலுக்கு மிகக் குறைந்த இழப்பே ஏற்பட்டது. இஸ்ரேல் 800 வீரர்களையும் 46 விமானங்களையும் இழந்தது. அரபு நாடுகள் 21000 க்கு மேற்பட்ட வீரர்களையும் 400 விமானங்களையும் இழந்தன.


  • இஸ்ரேல் சரணடைந்த ஆயிரம் எகிப்திய வீரர்களைக் கொன்றதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.


அரபு நாடுகளின் பொய் பிரச்சாரம்
முதல் நாள் யுத்தத்தில் இஸ்ரேல் விமானப் படையின் வல்லமையைக் கண்ட அரபு நாடுகளால் அதை ஜீரணிக்க முடியவில்லை. பெரும்பாலான அரபியர்களால் இஸ்ரேல் ராணுவம் தங்கள் நாட்டு ராணுவத்தைவிட உயர்ந்தது என்ற உண்மையை நம்ப முடியவில்லை. தொடர்ந்து, யுத்தத்தின் இரண்டாம் நாளே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விமானங்கள் போரில் ஈடுபட்டதாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன. ஆனால் வெளி உலகம் இந்தப் பொய் பிரச்சாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சோவியத் யூனியன் அமெரிக்கா இந்தப் போரில் ஈடுபடவில்லை என்று எகிப்துக்கு தெரிவித்தது. ஜூன் 8ம் தேதி எகிப்து அதிபர் நாசருக்கும் ஜோர்டான் அரசர் ஹூசைனுக்கும் நடந்த ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலை வெளியிட்டு உண்மை எது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்த உரையாடலில் இரு நாட்டு தலைவர்களும் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் நாடுகள் எப்படி இந்தப் போரில் ஈடுபட்டதாகப் பொய் பிரச்சாரம் செய்வது என்பதைப் பற்றி விவாதித்திருந்தனர். ஜூன் 30ம் தேதி ஜோர்டான் அரசர் அமெரிக்க விமானங்களோ பிரிட்டிஷ் விமானங்களோ இந்தப் போரில் ஈடுபடவில்லை என்று நியூயார்க்கில் வைத்து அறிவித்தார். ஆனால் அரபு ஊடகங்கள் தொடர்ந்து இந்தப் பொய் பிரச்சாரத்தை செய்து வந்தன. வழக்கம்போல அரபியர்கள் இந்தப் பொய்யையும் நம்பத் தொடங்கினர். போரில் சோவியத் யூனியன் தங்களூக்கு உதவும் என்பதற்காகவும் தோல்வியினால் ஏற்படும் அவமானத்தைத் தவிர்ப்பதற்காகவும் அரபு நாடுகள் இந்தப் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. ஆறு அரபு நாடுகள் அமெரிக்காவுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டன. மேலும் பல அரபு நாடுகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதித்தன.
யுத்தத்தில் நடந்த அற்புதங்கள்

  • இந்த‌ யுத்த‌த்தில் இஸ்ரேலுக்கு பல கட்டங்களில் க‌ர்த்த‌ராகிய‌ ஆண்டவ‌ர் உத‌வி செய்தார் என்று த‌க‌வ‌ல்க‌ள் உண்டு.


  • ஜூன் 26ம் தேதியிட்ட‌ தி ஜெருச‌லேம் போஸ்ட் என்ற‌ இஸ்ரேல் நாட்டு ஆங்கில‌ நாளித‌ழ் ப‌ல‌ அரிய‌ த‌க‌வ‌ல்க‌ளை அளிக்கிற‌து. எதிரி நாடுகளின் நூற்றுக்க‌ண‌க்கான‌ க‌ன‌ர‌க‌ வாக‌ன‌ங்க‌ளும் க‌வ‌ச‌ வாக‌ன‌ங்க‌ளும் போர் முனைக்கு வ‌ரும் முன்பே செய‌லிழ‌ந்த‌ன‌. க‌ணிச‌மான‌ எகிப்திய‌ போர் விமான‌ங்க‌ள் போரில் ஈடுப‌டும் த‌குதியை இழ‌ந்த‌ன‌. எகிப்தின் ரேடார் எச்ச‌ரிக்கை அமைப்பு முற்றிலுமாக‌ செய‌லிழ‌ந்த‌து. இஸ்ரேல் தாக்குத‌ல் நட‌க்கும்போதெல்லாம் பெரும்பாலும் எதிரி நாட்டுப் படைக‌ளின் ஒழுங்கு சீர்குலைந்த‌து. சினாய் தீப‌க‌ற்ப‌த்தில் சித‌றிக் கிட‌ந்த 2000 மில்லியன் டாலர் மதிப்புள்ள சோவிய‌த் யூனிய‌னின் த‌யாரிப்பான‌ டாங்குகளையும் ம‌ற்ற‌ ஆயுத‌ங்களையும் இஸ்ரேல் ராணுவம் சேகரித்தது.


  • இன்னும் பல செய்திகள் அற்புதங்களை நேரில் கண்ட இஸ்ரேல் படையினர் மூலமாகவும் சிவிலியன்கள் மூலமாகவும் வெளியிடப்பட்டன.


  • யுத்தத்தின் முதல் நாளான ஜூன் 5ம் தேதி இஸ்ரேல் விமானங்கள் எகிப்தை நோக்கிப் பறப்பதை ரேடார் மூலம் அறிந்து ஜோர்டான் எகிப்துக்கு ரகசிய‌ தகவல் அனுப்பியது. ஆனால் எகிப்தினால் அந்தச் செய்தியை டிகோட் செய்ய முடியவில்லை. அதற்கு முந்திய நாள் எகிப்தின் ரகசிய செய்திகளை என்கோட் செய்யும் அமைப்பின் அலை வரிசை மாறி விட்டதே இதற்குக் காரணம்.


  • சீகேம் என்பது யூதேயா மற்றும் சமாரியாவிலே உள்ள நகரங்களில் பெரியது. இந்த நகரத்திலுள்ள ஆயிரக்கணக்கானோர் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள். இவர்களை வெற்றி கொள்வது கடினம் என்று இஸ்ரேல் ராணுவ நிபுணர்கள் கருதினர். ஈராக்கிலிருந்து இஸ்ரேலுக்குச் சீகேம் வழியாகச் செல்லவேண்டும். இந்த நகரத்தைப் பற்றி ஆதியாகமத்தில் சிறு குறிப்பு உண்டு. “ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்;…” ‍‍_ ஆதியாகமம் 12:6இஸ்ரேல் ராணுவம் சீகேமை நோக்கி வருமென்று யூகித்த ஜோர்டான் ராணுவம் சீகேமின் மறுபக்கம் மலைப்பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தது. இஸ்ரேல் ராணுவம் தந்திரமாக வடமேற்குப் பகுதியில் ஊடுருவி கிழக்குத் திசை வழியாக சீகேமுக்குள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான அரபியர்கள் சீகேமின் நுழைவாயிலில் நின்று வருவது இஸ்ரேல் ராணுவம் என்று தெரியாமல் ஆரவாரிப்போடு வரவேற்றனர். இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் அரபிய காவலாளி ஒருவர் வைத்திருந்த ஆயுதத்தைக் கீழே போடச் சொன்னார். காவலாளி மறுத்ததை அடுத்து அந்த அதிகாரி வானத்தை நோக்கிச் சுட்டார். உடனே நிலைமையைப் புரிந்து கொண்ட கூட்டம் கலைந்து ஒடியது. அரபியர்கள் மறைந்திருந்துத் தாக்கத் தொடங்கினர். நடந்தது என்னவென்றால் அரபியர்கள், வந்தது ஈராக்கியப் படையினர் என்று தவறாகப் புரிந்து கொண்டு இஸ்ரேல் படையினரை வரவேற்றுள்ளனர். இதற்கிடையே சீகேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள அரபியரிடையே யூதர்களைப் பற்றிய பயம் பீடித்தது. இஸ்ரேலியர் மேல் கடும் வெறுப்பும் சினமும் கொண்டிருந்தாலும் கர்த்தருடைய பயங்கரம் அவர்கள் மேல் விழுந்ததால் கலக்கமடைந்து ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு இஸ்ரேல் ராணுவத்திடம் சரணடைந்தனர்.


  • ஜெருசலேம் நகரில் போருக்கு கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியலின் மேல் எதிரி நாட்டிலிருந்து வீசப்பட்ட குண்டு ஒன்று விழுந்தது. அந்தப் பகுதி முழுவதும் வெடித்துச் சிதறப் போகிறதென்று எல்லாரும் பயந்து கொண்டிருந்த வேளையில் வீசப்பட்ட குண்டு வெடிக்காமல் அற்புதமாக தேவன் கிரியைச் செய்தார்.


  • திர‌ன் ஜ‌ல‌சந்திப் ப‌குதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த இஸ்ரேலிய வீரர்கள் இருவர் அந்த‌ வ‌ழியாக‌ வ‌ந்த‌ எகிப்திய‌ வீர‌ர்க‌ளிட‌ம் சிக்கிக்கொண்ட‌ன‌ர். இவர்களோ வெறும் இரண்டு பேர்; எகிப்திய‌ர்க‌ளோ 18 பேர் இருந்த‌ன‌ர். த‌ங்க‌ளைச் சுட்டுக் கொல்ல‌ப் போகிறார்க‌ள் என்று இஸ்ரேல் வீர‌ர்க‌ள் ப‌ய‌ந்துகொண்டிருந்த‌ வேளையில் அந்த‌ அதிச‌ய‌ம் நிக‌ழ்ந்த‌து. எகிப்திய‌ர்க‌ள் கைக‌ளில் ஆயுத‌ந்க‌ளுட‌ன் ஏதோ அதிர்ச்சியில் உறைந்த‌துபோல் அசையாம‌ல் இருந்த‌ன‌ர். உட‌னே சுதாரித்துக் கொண்ட‌ இஸ்ரேல் வீர‌ர்க‌ள் கைக‌ளைத் தூக்குமாறு உத்த‌ர‌விட்ட‌ன‌ர். அத‌ன்ப‌டியே செய்தனர் எகிப்திய‌ வீர‌ர்கள். அவர்களில் ஒருவ‌ர், “என் உட‌ல் முழுவ‌தும் அப்ப‌டியே செய‌லிழ‌ந்து விட்ட‌து” என்றார்.


மேலே குறிப்பிட்டவை தவிர இன்னும் பல சம்பவங்கள் நடந்ததாக இஸ்ரேல் நாட்டில் தகவல்கள் உண்டு. மதசார்பற்றவை என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஊடகங்கள் இந்தச் செய்திகளை வெளி உலகிற்குத் தெரியாமல் மறைத்துவிட்டன.
ஆறு நாள் யுத்த‌ம் முடிவ‌டைந்தாலும் அர‌பு நாடுக‌ளின் தாக்குத‌ல்கள் ம‌ட்டும் குறைய‌வில்லை. தொட‌ர்ந்து நேர‌டியாக‌வும் ம‌றைமுக‌மாக‌வும் தாக்கினாலும் இஸ்ரேலை அழித்துவிட‌வேண்டும் என்ற‌ அவ‌ர்க‌ளின் க‌ன‌வு ம‌ட்டும் இன்னும் ப‌லிக்க‌வில்லை; இனியும் பலிக்கப் போவதில்லை.
References:http://en.wikipedia.org/wiki/Six-Day_War
http://www.zionism-israel.com/dic/6daywar.htm
http://www.sixdaywar.co.uk/hidden_miracles.htm
http://www.israelnationalnews.com/News/News.aspx/122435
http://www.israelnationalnews.com/Articles/Article.aspx/7133

நன்றி ச‌கோதரர் ராபின் அவர்கள்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum