நாட்டின் மேல் அக்கறையுள்ளவர்களின் குரலிது
Tue Apr 01, 2014 12:14 pm
மோடியின் அரசியல் ஆதாயத்திற்கான வருத்தம்!
"குஜராத் கலவரம் தொடர்பாக நான் வருத்தமடைகிறேன். ஆனால், நான் குற்றவாளியல்ல; எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று சொல்லவில்லை.” – நநேரந்திர மோடி
பிரிட்டன் எழுத்தாளரும், டி.வி. நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஆண்டி மெரினோ “மோடி வாழ்க்கை வரலாறு” தொடர்பாக எழுதிய புத்தகத்தில் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில், பல்வேறு காரணங்களையும் கூறியுள்ளார். மோடியின் இந்தக் கூற்று நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவித அனுதாப அலையையும் ஏற்படுத்தாது. குஜராத்தில் 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிரான மிகப் பெரும் இனப்படுகொலை நடைபெற்று, 2000த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டõர்கள். பல லட்சம் கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்த கலவரம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலக அரங்கில் தலைகுனிய வைத்த நிகழ்வாக மாறியது.
இந்தக் கலவரம் நடந்து 14 ஆண்டுகள் கழிந்துவிட்டன. கலவரம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் அப்பொழுதும், இப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தக் கலவரத்தில் முக்கியப் பங்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இருக்கின்றது. கலவரம் நடக்கும் பொழுது காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு கட்டளையிடப்பட்டிருந்தது – முஸ்லிம்களுக்கு எந்தவித உதவிகளையும் செய்யக்கூடாது, இந்துக்கள் தங்களின் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளட்டும் என்று.
எந்த அரசு அதிகாரிகளும் முஸ்லிம்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் கலவரக்காரர்களுடன் இணைந்து அவர்களுக்கான உதவிகளை செய்தனர் என்பதுதான் வேதனையான உண்மை. ஆனால், இதுவரை மோடியின் வாயிலிருந்து ‘மன்னிப்பு’ என்ற வார்த்தை வந்ததே கிடையாது.
சமீப காலமாக “2002 குஜராத் கலவரத்திற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று மோடி கூறி வருகிறார். இவருடைய இந்த வார்த்தைகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டு வருகின்றது. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் “2002 குஜராத் கலவரத்திற்காக முஸ்லிம்களிடம் நான் மன்னிப்பு கோருகின்றேன்” என்றார்.
பாரதிய ஜனதாவின் தலைமை பீடமாக திகழும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பல்வேறு குண்டுவெடிப்புகள், கலவரங்கள், வன்முறைகள், ரத யாத்திரைகள் மூலம் மக்களிடம் மதவாதத்தை தூண்டி ஆட்சியை பிடித்து வந்தவர்கள், இப்பொழுது வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலன், பழைய நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்தல், மீனவர் பிரச்னை, மக்கள் பாதுகாப்பு, ஊழலற்ற இந்தியா என்ற ரீதியில் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இது மக்கள் மத்தியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மதவாத பா.ஜ.க.வை ஆதரித்தால், நாட்டில் என்ன நடக்கும் என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இவர்கள் ஆட்சி செய்த ஒவ்வொரு மாநிலங்களின் நிகழ்வுகளையும் பட்டியலிட்டால், அதனுடைய வெளிப்பாடு தெரியும்.
சிறுபான்மை மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பு வேலைகள் தாராளமாக நடந்தேறும். அதே போன்ற ஒன்றுதான் குஜராத் கலவரம். இந்தக் கலவரத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியும் கொல்லப்பட்டார். இன்று வரை அவருடைய மனைவி ஜக்கியா ஜாஃப்ரி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால் எந்தவித நீதியும் கிடைக்கவில்லை.
கலவரம் நடந்து இத்தனை ஆண்டுகளாகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு என்ற முறையில் முழுமையான உதவிகள் வழங்கப்பட்டது கிடையாது. இதில், குற்றவாளிகள் என அடையாளம் காட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டது கிடையாது. அகதிகளாக புலம் பெயர்ந்தவர்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு திரும்பாமல் இன்றும் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் நிலையைப்பற்றி மோடி அரசு கவலைப்பட்டது கிடையாது.
சமீபத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரல் வளையை நெறிக்கும் விதமாக ஒரு அறிக்கை விட்டார் நரேந்திர மோடி. அப்போது, குஜராத் முஸ்லிம்களை காரில் வந்து விழும் நாய்க்குட்டிகளுக்கு ஒப்பாக கூறினார் மோடி. இதுவெல்லாம் முஸ்லிம் சமூகத்தை மேலும் காயப்படுத்தியது.
தற்பொழுது, எதிர்வரும் நாடாளுமுன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, பிரதமர் பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆர்.எஸ்.எஸ்.ஸின் உத்தரவின் பேரில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றுதான் இப்பொழுது மேற்சொன்ன புத்தகத்திற்கு கொடுத்துள்ள பேட்டி.
ஒரு முதல்வர் நாட்டில் நடந்த கலவரத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு. இதே குஜராத்தில்தான் கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் அநியாயமாக போலி என்கௌண்டரில் கொல்லப்பட்டார். இதில் பெரும்பாலான குஜராத் அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர்தான் டி.ஜி.பி. வன்சாரா. இவர் “என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட்” என்று அழைக்கப்படுகிறார். இவர் சமீபத்தில் அவருடைய ராஜினாமா கடிதத்தில் கூறும்போது, “நாங்கள் என்கௌண்டர் செய்ததற்காக சிறையில் இருக்கின்றோம் என்றால், எங்களுக்கு உத்தரவிட்டவர்களும் சிறையில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இவருக்கு உத்தரவிட்டதே மோடிதான் என்பதும், அமித் ஷாவுக்கும் தொடர்பிருப்பதை பற்றியும்தான் அவர் குறிப்பிட்டார். இப்படி பல்வேறு குற்றங்களுக்கும், கலவரங்களுக்கும் காரணமான மோடியை இந்தியாவின் பிரதமராக முன்னிறுத்துகிறார்கள். இதை பத்திரிகைகளும் ஊடகங்களும் பரவலாக வெளிப்படுத்துகின்றன. அதனுடைய வெளிப்பாடுதான் மோடியின் ஒவ்வொரு பேட்டியும் இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.
அதை உணர்ந்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் நலன் கருதி மக்கள் வாக்களிக்க வேண்டும். மதவாத பா.ஜ.க. கட்சியை புறக்கணிக்க வேண்டும் என்பதே நாட்டின் மீது அக்கறையுள்ளவர்களின் குரலாக இருக்கின்றது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum