நாம் அறிக்கை செய்யும் விசுவாசம்
Thu Aug 21, 2014 12:36 pm
நாம் அறிக்கை செய்யும் விசுவாசம் உயர்தரமானது. அது உலகத்தரமானது, உலகளாவியதும் கூட. இதை பவுல் அடிகள் வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
* பாவிகளை இரட்சிக்க உன்னதத்திலிருந்து தோன்றிய அருநோதயமாக தேவமகன் கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். (1தீமோ1:15) என்ற காரணத்தால் அது உயர்தரமானது... அதாவது உன்னதமானது.
* சத்திய வார்த்தையாகிய இந்த சுவிசேஷம் உலகமெங்கும் பரவி, பலன் தருகிறது..... அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறது... (கொலோ1:6), எனவே அது உலகத்தரமானது.
* இயேசு கிறிஸ்து எல்லாருக்காக மரித்தார்..... இதுவே நாம் அறிவிக்கும் சுவிசேஷம் (2 கொரி 5:15). எனவே அது உலகளாவியது. அனைவருக்கும் பொதுவானது.
அது உயர்தரமானது (விலையேறப்பெற்றது) என்பதாலே அது நமக்கு இலவசமாக்கப்பட்டது.
அது உலகத்தரமானது என்பதால் வேற்றுமை இன்றி எவரையும் அடியோடு மாற்றவல்லது.
அது உலகலாவியது என்பதாலேயே அது எல்லோருக்கும் ஈவாக வழங்கப்பட்டது
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum