உங்கள் சபைகளில் இவைகள் உண்டா?
Thu Feb 21, 2013 8:22 pm
"நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி" இயேசு கிறிஸ்து
யாத்திராகமம் 3: 5
அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய் சத்தியத்திற்குத் தூணும் ஆதாராமாயிருகிறது 1 திமோத்தி 3 :15
நாம் ஆலயத்திற்கு செல்வது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் நம்முடைய
சபைகளில் நாம் எப்படி தேவனை ஆராதிக்கிறோம் என்பதை கொஞ்சம் நிதானித்து
பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்றைக்கு மக்கள் சபைக்கு
வந்தால் போதும் என்கிற மனநிலையுடன் இருக்கும் பல போதகர்கள் சபையின்
ஒழுக்கத்தை கண்டிப்பாக கற்று கொடுக்க வேண்டும்.
சபைகளுக்குள்ளக
காலணிகளை அணிந்து வருவது, வேதாகமத்தை கொண்டுவர தயக்கம் காட்டுவது. அப்படியே
கொண்டு வந்தாலும் திறப்பதில்லை, தேவ செய்தி வேலையில் கால் மேல் கால்
போட்டு உட்கார்ந்து ஏதோ மனிதர் பேசுவதை போல கைபேசியை உருட்டி கொண்டே
கேட்பது போல நடிப்பது, என்று அடுக்கி கொண்டே போகலாம். சபையில் தேவன்
பேசுகிறார் என்று நீங்கள் நம்பினால் தயவு செய்து அவருக்கு வேண்டிய மதிப்பை
கொடுங்கள்.
நன்ற: முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum