பள்ளிபாளையம் கோழி வறுவல்
Mon Aug 18, 2014 1:19 pm
ஈரோட்டின் பெருமைகளில் ஒன்று " பள்ளிபாளையம் சிக்கன் " என்பதை யாராலும் மறுக்க முடியாதுங்க
எந்தவித மசாலாவும் சேர்க்காமல் செய்யப்படும் நம்ம பள்ளிபாளைய சிக்கென்னை கண்டால் "சிக்கன் 65 வும் சில்லி சிக்கன் னும் தெரிச்சு ஓடிருமுங்க.
கோழி (நாட்டு கோழி) - 1 கிலோ
வர மிளகாய் - 15 to 20
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 4 பல்லு
கருவேப்பிலை - 12
எண்ணெய் - 5 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கொத்துமல்லி , உப்பு , மஞ்சள் தேவையான அளவு எடுத்துக்குங்க
கோழி கறியை சிறுசு சிறுசா அறுத்துட்டு ,, தண்ணீல நல்லா கழுவீறுங்க. மஞ்சள் தூள், உப்பு கொஞ்சம் போட்டு கோழி கறியை நல்லா கலக்கி வெச்சுருங்க.
வட சட்டியில் எண்ணெய் கடுகு போட்டு தாளிச்சிட்டு , சின்ன வெங்காயத்தை சிறுசு சிறுசா அருஞ்சு போட்டுருங்க,, ஓரளவு வெங்காயம் பொன்நிறம் வந்ததும் , வர மிளகாயில் விதைகளை எடுத்துட்டு எல்லா மிளகாயையும் கில்லி போட்டுட்டு பூண்டு துண்டுகளையும்,கருவேப்பிலையையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி ரெண்டு நிமிஷம் விட்ருங்க ,
இப்போ கோழி கறியை தாளிச்சு வெச்சுருகிற வெங்காயம்
வரமிளகாயுடன் சேர்த்து நல்லா கலக்கி விடுங்க, மஞ்சளும் , உப்பும் , மறுபடியும் வேணும்னா கொஞ்சம் சேர்த்துகுங்க,
தயவு செய்து தண்ணீர் ஊத்திராதீங்க
கொத்துமல்லி சேர்த்து மூணு நிமசதுக்கு ஒருக்கா நல்லா கலக்கி விடுங்க 20 பது நிமிஷம் கழிச்சு பாருங்க .
முக்கால் கிலோ கோழிதான் இருக்கும், ஏன்னா டேஸ்ட்டு பார்க்குறேன்கிற பேருலே கால் கிலோ சிக்கென்னை நீங்களே
சாப்பிட்டு முடுச்சிருப்பீங்க ......
நன்றி: கொங்குநாட்டு குழம்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum