தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மற்ற மாநிலத்தவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது என்ன? கேரளம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மற்ற மாநிலத்தவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது என்ன? கேரளம் Empty மற்ற மாநிலத்தவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது என்ன? கேரளம்

Sat Aug 16, 2014 1:13 pm
சுதந்திர தின சிறப்புப் பக்கங்கள்...
கேரளா : கற்க வேண்டியது என்ன?
எங்கும் பிழைக்கும் எறும்புகள்!
அதிஷா

‘கடவுளின் சொந்த கிராமம்’ கேரளத்திற்கு இப்படி ஒரு பெருமை. கடவுளுக்கு உலகில் ஒரு கிராமம்தான் சொந்தம். ஆனால் மலையாளிகளுக்கோ உலகமே சொந்தம். கேரளத்தில் சுமார் 3.5 கோடி மலையாளிகள் வசிக்கிறார்கள். ஆனால் அமீரகத்தில் ஆறரை லட்சம், அமெரிக்காவில் ஏழரை லட்சம், சவுதியில் ஆறு லட்சம் இங்கிலாந்தில் ஒருலட்சம் என உலகின் ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் மலையாள மக்களின் எண்ணிக்கையைக் கூட்டினால் அந்தத் தொகை இன்னொரு கேரளமாக இருக்கும்
யாதும் ஊரே எனத் தமிழன்தான் எழுதினான் ஆனால் அதை மெய்பித்தவர்கள் மலையாளிகள்தான் காரணத்தைக் கண்டு கொள்வது கஷ்டம் இல்லை. ’கடவுளின் கிராம’த்தில் வேலை வாய்ப்பு குறைவு. அதற்கு மலையாளிகள் தங்கள் மாநிலத்தை அழுக்குப்படாமல் வைத்துக் கொள்ள விரும்புவதும் ஒரு காரணம். பெரிய தொழிற்சாலைகளுக்கு அவர்கள் ஆசைப்படுவதில்லை.அதனால் வேலை வாய்ப்புப் போனாலும் பரவாயில்லை, வெளியில் போய் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று ஒரு தன்னம்பிக்கை இயற்கையைப் பேணுவதில் அவர்களுக்கு இணை இல்லை. கேரளத்தில் எந்த ஆற்றிலும் மணல் அள்ளக்கூடாது என்று கேரள அரசு சட்டமே போட்டிருக்கிறது. அப்படியானால் கட்டிடம் கட்டுவது எப்படி? இருக்கவே இருக்கிறது தமிழ்நாடு. பணம் வருகிறதென்றால் பாலாறை பாழாறக்கவும் நாம் ரெடி
சொந்த மண்ணைக் காப்பதற்காக அயல் மண்ணில் போய் வியர்வை சிந்துகிற உடலும் மனமும் அவர்களுக்கு. உலகமயம் என்ற வார்த்தையை இந்தியா உச்சரிக்கக் கற்கும் முன்னரே புலம்பெயர்ந்து பிழைப்பவர்கள் மலையாளிகள் வெயிலடிக்கும் அரபு நாடுகளில் கட்டிட வேலையும் செய்வார்கள், காஷ்மீரின் கடுங்குளிரில் துப்பாக்கியோடு அரணாகவும் நிற்பார்கள். மலையாளிகள் உலகின் எந்த மூலையிலும் எப்படியாவது பிழைத்துக்கொள்கிற விசித்திர ஜீவிதர்கள். எதுவுமே இல்லையா கப்பயும் கஞ்சியுமாக திருப்தி கொள்வதிலும் அவர்களே டாப்.
என்னதான் உலகம் சுற்றி உழைத்துப் பிழைத்தாலும் உள்ளூரில் ஒரு ‘செர்ரிய வீடும் தோட்டமும்’ தான் அவர்களுடைய கனவு. எங்கு புலம்பெயர்ந்தாலும் அந்த இடத்திலும் தங்களுக்கென ஒரு முத்திரையையும், தன் இனத்தினரை அழைத்து அரவணைத்துப் பேணுகிற குணத்தையும் கொண்டிருப்பதுதான் மலையாளிகளின் அடையாளம்.
’சேட்டா ஸ்ட்ராங்காயிட்டு ஒரு டீ’ என்கிற குரலை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் கேட்கலாம் சென்னையில் டீக்கடை வைத்திருக்கிற சேட்டன்கள் துணைக்கு ஊரிலிருந்து ஒரு பையனை அழைத்து வருவார்கள். அவனுக்கு தொழில் கற்றுத்தருவார். அவன் வளர வளரத் தனியாக ஒரு கடை வைக்க உதவுவார்கள். 
சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் எல்லா டீக்கடை சேட்டன்களும் இப்படித்தான் வளர்ந்திருப்பார்கள். ஒரு சேட்டன் இன்னொரு சேட்டனை கண்டு பொறாமை கொள்வதில்லை. சொல்லப்போனால் அவருக்கு உதவிகள் செய்து வளர்க்கவே ஒவ்வொரு மலையாளியும் விரும்புகிறார்.
தேநீர்க் கடைகளிலிருந்து தேசத்தை ஆள்கிற பிரதமரின் அலுவலகம் வரை இதுதான் நிலை.இலக்கியத்தில், விளையாட்டில், ராணுவத்தில், எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் இதைப் பார்க்கலாம் இன்று இந்தியா முழுக்க மலையாளிகள் வியாபித்து இருக்கவும் மிக உயரிய துறைகளின் மிக உயரிய பதவிகளில் மலையாளிகள் வீற்றிருக்கவும் இதுவும் ஒரு காரணம் 

எந்தச் சூழலிலும் உழைக்கத் தயாராக இருக்கும். தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரனைப் போட்டியாளனாகக் கருதாமல் கூட்டுகாரனாக பாவிக்கிற மனநிலை. மலையாளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய கலை.

நன்றி: புதிய தலைமுறை
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மற்ற மாநிலத்தவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது என்ன? கேரளம் Empty Re: மற்ற மாநிலத்தவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது என்ன? கேரளம்

Sat Aug 16, 2014 1:14 pm
பஞ்சாப்: கற்க வேண்டியது என்ன?

சிரிக்கத் தெரிந்த மனம்
மாலன்

பஞ்சாபியர்களைப் போலத் துயரங்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட இன்னொரு சமூகம் இந்தியாவில் இல்லை. மேற்கிலிருந்து வந்த முதல் படையெடுப்பிற்கே முகம் கொடுத்தவர்கள் அவர்கள். உலகையே வெல்ல வேண்டும் என்று ஆசை உந்தித் தள்ள அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது. மண்டியிட மாட்டேன் என அவனுக்கு எதிராக வாளுயுர்த்தி நின்ற போரஸ் பஞ்சாபி. அந்த வீரத்தைக் கண்டு வியந்து, போரில் வென்ற போதும், பூமியைத் திரும்பக் கொடுத்து விட்டுப் புறப்பட்டுப் போனான அந்த கிரேக்கன், அடுத்த தாக்குதல் கிழக்கேயிருந்து வந்தது. சண்டைக்கு வந்தவன் சந்திரகுப்த மௌரியன். அப்புறம் மெகலாயர்கள். அப்புறம் ஆங்கிலேயர்கள். எத்தனை ரத்தம்!

அத்தனை ரத்தமும் துச்சம் என எண்ணியோ என்னவோ ஜெனரல் டயர் சுற்றிச் சுவர்களால் சூழப்பட்ட மைதானத்தில் கவச வண்டிகளை கொண்டு கொத்துக் கொத்தாகச் சுட்டுத் தள்ளிய ஜாலியன் வாலா பாக் கோரத்தையும் பஞ்சாப் கண்டது. 

அரசியல் சதுரங்கத்தில் வெட்டுண்ட வீரர்கள் அவர்கள். இந்தியா மொத்தமும் சுதந்திரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், அவர்கள் அகதிகளாக அலைந்து கொண்டிருந்தார்கள். வயிற்றைக் கிழித்துக் கொண்டு பிறக்கிற சிசுவைப் போல அவர்களது நிலத்தைக் கீறித்தான் அன்று பாகிஸ்தான் பிறந்தது. கணிசமாக பஞ்சாபிகள் வாழ்ந்த கராச்சி உள்பட பெரும்பகுதி பாகிஸ்தானுக்குப் போயிற்று. நேற்றுவரை நிலச்சுவான்தாரர்களாக, வியாபாரிகளாகச் செலவத்தில் திளைத்தவர்கள் ஒருநாளில் ஏழைகள் ஆனார்கள். என்ன ஆனார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாத வண்ணம் உறவுகள் கலைந்தன. 

அப்புறம் இந்தியா பாகிஸ்தான் யுத்தங்கள். பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து ரணகளமான கதை. அவர்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டிக் கேளுங்கள், ஒவ்வொரு குடும்பத்திலும் ரத்தம் சிந்தியவர்கள் இருப்பார்கள். 

ஆனால் அவர்களைப் போல உற்சாகமானவர்களை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது. வாழ்வை வரமென்று கொண்டாடுகிற உற்சாகம். அந்த உற்சாகம் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் ததும்பிக் கொண்டிருக்கும். அவர்கள் உடைகளில், அவர்கள் இசையில், அவர்கள் நடனத்தில், ஏன் உரத்துப் பேசுகிற அவர்கள் குரலில் கூட. தேசம் முழுக்க அவர்களைப் பற்றிச் சொல்கிற ஜோக்குகளைக் கேட்டு கூரை அதிரச் சிரிக்கிறவர்கள் அவர்கள்தான். போஜனப் பிரியர்கள். கேளிக்கையின் குழந்தைகள். விருந்துகளில்- அளிப்பதிலும் கலந்து கொள்வதிலும்- விரும்பிப் பங்கேற்பவர்கள்.

அந்த மாலை இன்னும் நினைவிருக்கிறது. மறுநாள் தென்னாப்பிரிக்கா புறப்பட வேண்டும். இன்று அந்த தூதரகத்தில் பார்ட்டி. தவிர்த்து விடலாமா எனத் தயங்கித் தயங்கிப் பின் தாமதமாகப் புறப்பட்டேன். நான் பயணித்த டாக்சியை ஓட்டியவர் ஒரு சர்தார்ஜி. 
80 வயதிருக்கும். முதுமையின் களைப்பை முகத்தில் காணவில்லை. “உங்களுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?” என்று ஆரம்பித்தேன். இரண்டு மகன்கள் ஒருவன் இராணுவத்தில். இன்னொருவன் லண்டனில். மகளைக் கட்டிக் கொடுத்துவிட்டேன். மாப்பிள்ளை லூதியானாவில் பட்டறை வைத்திருக்கிறான்” “பின் ஏன் நீங்கள் இந்த வயதில் தில்லியில் டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?” 

சர்தார் என்னைத் திரும்பிப் பார்த்தார். “என்ன தப்பு? ஓ!இந்தக் கிழவன் இருட்டில் இழுத்துக் கொண்டுபோய் எங்கேயாவது முட்டிவிடுவான் என மிரள்கிறீர்களா? இராணுவத்தில் வண்டியோட்டியிருக்கிறேன், சாப்!. கரடு முரடான மலைகளில் ஓட்டியிருக்கிறேன். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதும் கிடைத்த காசில் வண்டி வாங்கினேன். உடலில் தெம்பிருக்கிறவரை ஓட்டுவேன், பென்ஷன் வருகிறது. சாப்பாட்டிற்கு பிரச்சினை இல்லை. ஆனாலும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிட மனசு இல்லை. நமக்கு நாம்தான் சார் பொறுப்பு. அதை அடுத்தவர்களிடம் எதிர்பார்ப்பது தப்பு” 

அவர் வார்த்தைகளை யோசிக்க ஆரம்பித்து அதிலேயே மூழ்கிப் போனேன். இறங்க வேண்டிய இடம் வந்ததைக் கவனிக்கவில்லை. அப்போது தோளில் தட்டி சர்தார் சொன்னார். “பார்ட்டிக்குப் போற,. சந்தோஷமா போ!. துக்கம் மகிழ்ச்சி இரண்டும் கொண்டது உலகம். துக்கத்தை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. மிச்சம் இருப்பது மகிழ்ச்சிதான். போசாப்! என்ஜாய்!” 

துயரங்களுக்கு நடுவிலும் வாழ்க்கையைக் கொண்டாடுவது எப்படி என்பதை வரம் வாங்கி வந்துள்ள பஞ்சாபிகளிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மற்ற மாநிலத்தவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது என்ன? கேரளம் Empty Re: மற்ற மாநிலத்தவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது என்ன? கேரளம்

Sat Aug 16, 2014 1:15 pm
கர்நாடகா : கற்க வேண்டியது என்ன?

இலக்கியத்துக்கு ஆராதனை
எம்.பி. உதயசூரியன்

கன்னடர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவு அடிக்கடி காவிரி நீரால் சலசலக்கும். ஆனால் தாய்மொழியை நேசிப்பதிலும், தலைசிறந்த இலக்கியவாதிகளை ஆராதிப்பதிலும் கன்னடர்களுக்கு இருக்கிற அக்கறை கண்டு இந்தியாவே கைகுவிக்கும். 

சான்றுக்கு சமீபத்தில் நடந்த சரித்திர சம்பவங்கள் இரண்டு. கர்நாடகத்தின் முதல்வராக அறிவிக்கப்பட்டதுமே, சித்தராமய்யா முதலில் சந்தித்தது - கன்னட தேசியக் கவிஞர் சிவருத்ரப்பாவை. அடுத்துப் பார்த்தது - ஞானபீட விருது பெற்ற சந்திரசேகர கம்பாரை. அப்புறம் சென்றது - ஞானபீட விருது பெற்றவரும், அரசியல் விமர்சகருமான யு.ஆர்.அனந்தமூர்த்தியைச் சந்திக்க. கன்னட இலக்கியப் பிதாமகன்களின் இல்லம் சென்று முதல்வர் செய்த ’முதல் மரியாதை’ கண்டு மாநிலமே மெய்சிலிர்த்து மெச்சியது. 

அடுத்தது - சமீபத்தில் வயோதிகத்தால் முதுபெரும் கவிஞரான சிவருத்ரப்பா காலமானார். அவர் மறைந்த துக்கத்தை மாநிலமே அனுஷ்டிப்பதற்காக, அன்றைய நாளை அரசு விடுமுறையாக அறிவித்தது கர்நாடக அரசு. 

படைப்பாளிகளுக்கு கன்னடர்கள் செய்த கௌரவத்தை எண்ணிப் பாருங்கள், ஆனந்தக் கண்ணீர் பொங்கும். அப்படியே ஒருநொடி நம்மையும் ஒப்பிட்டுப் பார்த்தால்... அதே கண்களில் ஆற்றாமை கலந்த உப்புநதி வழியும். 

மறக்காமல் சொல்ல வேண்டிய மற்றொரு செய்தியும் உண்டு. அது, தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதை, இந்தியாவிலேயே அதிகம் பெற்றவர்கள் கன்னட எழுத்தாளர்கள்தான். விருதுகளில் மட்டுமல்ல... புத்தக விற்பனையிலும் வரலாறு படைப்பவர்கள் இங்குள்ள எழுத்தாளர்கள். பிரபல எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா எழுதிய ’யாணா’ நாவல், வெளியான முதல் நாளிலேயே பத்தாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. பதிப்பாளர் வீட்டுப் பரணில் கிடக்கவிடாமல், பாய்ந்து சென்று வாங்கி நூலுக்கு வெற்றிப் பரணி பாடிய கன்னட வாசகர்களின் வாசிப்பு ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. 

வசீகரிக்கிற இயற்கை எழில்... வரலாற்றுச் சின்னங்கள்... வணங்க வேண்டிய திருத்தலங்கள் என, வந்து குவிகிற சுற்றுலாப் பயணிகளை சொக்க வைக்கிற சொர்க்க பூமி கர்நாடகம். கன்னட மொழியோ, நம் கன்னித்தமிழைப் போலவே மிகத் தொன்மையான மொழி என்ற பெருமையைப் பெற்றது. 

‘தமிழ் மொழியில் இருந்து பிறந்தது கன்னட மொழி என்று சொல்வதைவிட, தமிழின் உடன்பிறந்தவள் என்று இம்மொழியைச் சொல்வதே சாலப் பொருத்தம்’ என்கிறார் மொழியறிஞர் தேவநேயப் பாவாணர். தமிழில் புழக்கத்தில் இல்லாத அரிய பல தமிழ்ச் சொற்கள், காதுகளில் தேன் பாய்ச்சியபடி கன்னடத்தில் கம்பீர உலா வருகின்றன. 

’இறங்குங்கள்’ என்பதற்கு கன்னடத்தில் ’இளி’ என்கிறார்கள். கம்பராமாயணத்தில் ஏறிப் பார்த்தால் இந்தச் சொல்லை எட்டிப் பிடிக்கலாம். அரசனாக ஆகியிருக்க வேண்டியவன் நாடு துறந்து காடு நோக்கிப் போவதைக் காணும் குகன் கண்ணிலிருந்து நீர் இறங்கி ஓடுகிறது. ‘இழி புனல் பொழி கண்ணான்’ என்று அதைச் சித்திரச் சொல்லில் எழுதுகிறான் கம்பன். அந்த ’இழி’தான் ’இளி’யாகி (’று’ என்ற மரியாதை விகுதி சேர்ந்து) இன்றும் அங்கே இனிக்கிறது’ என்கிறார் ஒரு ஆய்வாளர். 

’மைசூரின் புலி’ என்று போற்றப்பட்ட மாமன்னன் திப்புசுல்தான் ஆண்ட மண் இது. அதனாலே என்னவோ, தாய்மொழியைக் காக்க புலிப்பாய்ச்சல் பாய்கிறார்கள் கன்னட மைந்தர்கள். ‘கர்நாடகத்துக்கு வந்து வசிக்கிறவர்கள் யாரானாலும் அவர்கள் கன்னடம் கற்றுக் கொள்ளவேண்டும்; கட்டாயம் கன்னடத்தில் பேசவேண்டும்’ - கன்னட நாள் விழாவில் சொன்னவர், கர்நாடக முதல்வர் சித்தராமய்யா. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழிதானே! 

பெங்களூருவில் GBKM என்ற இயக்கம் பிரபலம். இந்த எழுத்துக்களின் அர்த்தம் ‘காஞ்சலி பிடி, கன்னட மாத்தாடி’. தமிழில் சொன்னால், ‘பிறமொழி பாசத்தைக் கைவிடுங்கள்; கன்னடத்தில் பேசுங்கள்’. கன்னடத்தில் பேசுவதற்கான வகுப்புகளை நடத்துவது, பொது இடங்களிலுள்ள அறிவிப்புகள், பெயர்ப் பலகைகளில் கன்னடம் இடம் பெறச் செய்வது போன்றவையே இந்த அமைப்பின் தீவிரப் பணி.

கர்நாடகத்தின் முதலமைச்சர் தொட்டு கடைசிக் குடிமகன் வரை சகலரிடமிருந்தும், கலப்படமில்லாத தாய்மொழிப் பற்றையும், இலக்கிய பிரம்மாக்களை கௌரவிக்கிற பண்பையும் நம் இனிய தமிழ் மக்கள் இனியேனும் கற்கவேண்டும். தயாரா தமிழினமே?



நன்றி: புதிய தலைமுறை
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மற்ற மாநிலத்தவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது என்ன? கேரளம் Empty Re: மற்ற மாநிலத்தவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது என்ன? கேரளம்

Sat Aug 16, 2014 1:15 pm
தெலங்கானா: கற்க வேண்டியது என்ன?

போர்க்குணம் பழகலாம்
கீதா

இன்றைய படித்த இளைஞர்களுக்கு ரோசா பார்க்கைத் தெரியும், அமெரிக்கக் கறுப்பின மக்களின் சிவில் உரிமைப் போராட்ட வரலாறு இவரிடமிருந்துதான் துவங்குகிறது. ஆனால் அவரை அறிந்தவர்களுக்குக் கூட சித்தியால அய்லம்மாவைத் தெரிந்திருக்காது.

இந்தியாவில் ஒரு பெரும் புரட்சிக்கு வித்திட்டவர் அவர். இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டம் அன்று நிஜாம் ஆட்சிக்கு சலாம் வைத்துக் கொண்டிருந்த ஜமீன்தார்களின் கீழ் இருந்தது. கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், கட்டாய வரி வசூலிப்பு, விவசாயிகளுக்குச் சொந்தமான நிலத்தில் அவர்களது உழைப்பில் விளைந்த பயிர்களை வலுக்கட்டாயமாகப் பறித்துப் போவது என எல்லாவிதமான அட்டகாசங்களும் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தன. 

பாலகுருத்தி கிராமத்தின் ஜமீன்தார் ராமச்சந்திரன் அயிலம்மாவின் நிலத்தில் விளைந்ததை அள்ளிக் கொண்டுவர 19 குண்டர்களை அனுப்பி வைத்தார். தன்னுடைய 4 ஏக்கர் நிலத்தைக் காக்க அயிலம்மா அந்தக் குண்டர்களுடன் போராடினார். அவர் தாக்கப்படுவதைக் கண்ட கிராமம் உதவிக்கு வந்தது. கம்பு கட்டை, மண்வெட்டி என வீட்டிலிருந்த விவசாயக் கருவிகள்தான் ஆயுதங்கள்.அந்தச் சீற்றத்தை எதிர்கொள்ள இயலாமல் ஜமீன்தாரின் படை திரும்பிச் சென்றது. ஆனால் மறுநாள் அந்த கிராமத்தின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதை எதிர்த்துக் கிளம்பிய புரட்சி 3000 கிராமங்களுக்குப் பரவியது. 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஜமீன்தார்களிடமிருந்து மீட்கப்பட்டு ஏழைகளுக்குள் விநியோகிக்கப்பட்டது. கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது 1946லிருந்து 1951 வரை நடந்த இந்தப் புரட்சி முதலில் நிஜாமாலும் பின்னர் இந்திய ராணுவத்தாலும் ஒடுக்கப்பட்டது.

இந்தப் போர்க்குணம் இன்றும் தெலங்கானா மக்களிடம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. பழங்குடி மக்களுக்காக போராடிய 2 பெண்மணிகள் சரளம்மா, சம்மக்கா. இருவருமே இன்று தெய்வங்கள். ஆண்டு விட்டு ஆண்டு இவர்களுக்கான திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இன்று தெலங்கான இந்தியாவின் 29-ஆம் மாநிலம். ஆனால் அது ஏதோ மனுப்போட்டு வாங்கியதல்ல. 1946-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள்..

1952-இல் முல்கி அல்லாதோருக்கு எதிரான போராட்டம் என்ற ஒன்றை மாணவர்கள் துவக்கினார்கள் (முல்கி என்றால் உள்ளூர்காரர்கள்). போராட்டம் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. ஏழு மாணவர்கள் இறந்து போனார்கள்.

1953-இல் ஆந்திரப் பிரதேசம் உருவானது. ஆனால் தெலங்கானாப் பகுதிகளும் ஆந்திராவிலேயே இணைக்கப்பட்டன. தெலங்கானா மக்கள் ஓய்ந்துவிடவில்லை. எல்லா முயற்சிகளும் தோற்றுப் போன நிலையில் 1969-இல் மீண்டும் போராட்டம் வெடித்தது. 300 மாணவர்கள் இறந்து போனார்கள். சில சலுகைகள் கிடைத்தன. போராட்டத்தை வழி நடத்தியவர்கள் பதவிகள் பெற்று ஒதுங்கினார்கள். ஆனால் அடுத்த தலைமுறை போராட்டத்தைக் கையில் எடுத்தது. தலைமுறை தலைமுறையாகப் போர்க்குணத்தைக் கைவிடாமல், அதே நேரம் பொறுமையையும் இழந்து விடாமல் போராடித்தான் இலட்சியத்தை அடைந்தார்கள். 

அந்த மக்களில் சிலர் இன்று என்ஜீனியர்களாக, ஐடி வல்லூநர்களாக, வணிகர்களாக ஆகியிருக்கலாம். ஆனால் அடிப்படையில் அவர்கள் விவசாயிகள். விவசாயிகளின் வாழ்க்கையே போர்தான். நித்தம் ஒரு யுத்தம். “அப்பாவுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு லட்சம் செலவு செய்து 3 முறை போர் போட்டார். தண்ணீர் வரவில்லை. அந்த நிலம் என் அப்பா கைவிட்டு போய்விடக் கூடாது. எப்படியும் ஒரு 5 லட்சமாவது சேமித்து அவரின் கையில் கொடுக்க வேண்டும். அதைவைத்து நிலத்தை சீர் செய்துவிடலாம்” என்பார்கள் அந்த என்ஜினீயர்கள் ஐடி வல்லுநர்கள், கொஞ்சமும் நம்பிக்கை குறையாமல் போர்க்குணம், அதே நேரம் பொறுமை. இதை நாம் தெலுங்கானா மக்களிடம்தான் கற்க வேண்டும்.
Sponsored content

மற்ற மாநிலத்தவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது என்ன? கேரளம் Empty Re: மற்ற மாநிலத்தவரிடமிருந்து நாம் கற்க வேண்டியது என்ன? கேரளம்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum