நாம் மேன்மை பாராட்ட வேண்டியது
Fri Jul 05, 2013 8:14 pm
ஆவியின் வரங்களுக்குள் (Gift) வாகனமும் அடக்கம்!
அப்படி வேதம் சொல்லுகிறதா????
இல்லை
சாலையில் வலம்வரும் கிறிஸ்தவர்களின்
வாகனங்களே சொல்லுகின்றன...
கார் முதலான உலகப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பது அல்ல, அவை தேவைதான். கர்த்தர் நமக்கு கிருபையாய் கொடுத்த வாகனம் அதில் கர்த்தரை மகிமைப்படுத்தும் வாசகம் இடம்பெறவேண்டும் என்று நாம் நினைப்பதும் இயல்புதான்.
ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவால் வந்த ஆசீர்வாதம் என்று எதை உலகுக்கு சொல்லுகிறோம் என்பது மிக மிக முக்கியம். நாம் உலகத்துக்குரியவர்கள் இல்லை என்பதையும், உலகப்பொருட்கள் நிரந்தரமற்றவை என்பதையும் நமது ஒவ்வொரு அசைவும் உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
புதிய உடன்படிக்கையை நன்றாக ஆராய்ந்து பாருங்கள், உலகப்பொருளை ஆசீர்வாதம் என்று அது எங்குமே குறிப்பிடவில்லை. நாம் மேன்மை பாராட்ட வேண்டியது பரலோக ராஜ்ஜியத்தின் காரியங்களைக் குறித்தேயன்றி உலகப்பொருட்களைப் பற்றியல்ல.
உலகப்பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். அவை இருக்க வேண்டிய நம் இடம் பாதங்களுக்கு கீழே. அது நமக்கு அடிமை. அவற்றிற்கு ஆசீர்வாத அந்தஸ்து கொடுத்து உலகுக்கும் பிற விசுவாசிகளுக்கும் காட்டக்கூடாது. புதிதாய் கிறிஸ்துவுக்குள் பிறக்கும் விசுவாசிகள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை விட்டுவிட்டு இவைகளை தேட ஆரம்பித்து விடுவார்கள். யாருக்கு முன்னும் இடறலைப் போடாதிருப்போம். அது அபாயம்!
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum