பிஜேபி ஆட்சியில் கடந்த 2 மாதங்களில் 600 மத வன்முறைகள்
Thu Aug 14, 2014 9:17 pm
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
Read more: http://viduthalai.in/e-paper/85824.html#ixzz3ANMpKRIN
புதுடில்லி, ஆக.14_ மதக் கலவரங்கள் அதி கரித்து வருவதாகக் குற் றம் சாட்டி, மக்களவையில் விவாதத்தைத் தொடங் கியது காங்கிரஸ் கட்சி. இந்த விவாதத்தின் போது, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது, கடந்த 2 மாதங்களில் மட்டும், மதச் சிறுபான் மையினர் மீது 600_க்கும் அதிகமான வன்முறைகள் நிகழ்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். இந்த மதக் கலவரங்களுக்குப் பின் னணியில் யார் உள்ளனர் என்று தெரியவேண்டும் என்று கூறிய அவர், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று முயலும் ஒரு சில கட்சிகளாலும் குழுவாலும்தான் இது நடத்தப்படுகிறது என்றார். நமது நாடு மதச்சார் பற்றது என்று அரசிய லமைப்புச் சட்டம் கூறு கிறது; நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள் என் றால், மற்றவர்களை நசுக்க முயற்சி செய்யக் கூடாது. இந்த நாடு அனைவருக் கும் சொந்தமானது என்று பேசினார் மல்லிகார்ஜுன கார்கே.
Read more: http://viduthalai.in/e-paper/85824.html#ixzz3ANMpKRIN
Permissions in this forum:
You cannot reply to topics in this forum