பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றிய விவரம் வருமாறு:–
Sun Aug 10, 2014 9:35 pm
மாத சம்பளம் ரூ.50 ஆயிரம், ரெயிலில் இலவச பயணம் எம்.பி.க்களுக்கு கிடைக்கும் வசதிகள், சலுகைகள்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
ஏராளமான சலுகைகள்
பாராளுமன்ற தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்த அடுத்த கணத்தில் இருந்தே அந்த உறுப்பினருக்கு பல வகையான சலுகைகள் கிடைக்க தொடங்கி விடுகின்றன. மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம், காலாண்டுக்கு ஒருமுறை வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், சோபா விரிப்புகள் ஆகியவற்றை சலவை செய்வதற்கான தொகையில் இருந்து, பாராளுமன்ற வளாகத்தில் மிகவும் குறைந்த விலையில் அதிக சலுகையுடன் உணவு போன்ற அனைத்தும் அவர்களுக்கு கிடைக்கும். அனேகமாக அவர்கள் எதற்குமே செலவு செய்யத்தேவையில்லை என்ற அளவுக்கு அவர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றிய விவரம் வருமாறு:–
மாத சம்பளம் ரூ.50 ஆயிரம்
* ஒவ்வொரு பாராளுமன்ற மற்றும் மேல்–சபை உறுப்பினருக்கும் அவருடைய பதவிக்காலம் முழுவதும் மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.
* பாராளுமன்றத்தில் கூட்டத்தொடரின் போது பதிவேட்டில் கையெழுத்திட்டால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.2000 வழங்கப்படும்.
* ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவருடைய தொகுதியில் பணிக்காக ஒவ்வொரு மாதமும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.45 ஆயிரம் வழங்கப்படும்.
* ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவருடைய அலுவலகத்தை நடத்துவதற்காக ரூ.45 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகையில் அவர் எழுதுபொருள் மற்றும் தபால் செலவுக்காக ரூ.15 ஆயிரம் செலவழிக்கலாம். அவருக்கு அலுவலக உதவியாளராகப் பணியாற்றுபவருக்கு ஊதியம் அளிக்க உதவியாக மீதி ரூ.30 ஆயிரத்தை அவர் செலவழிக்கலாம்.
விமான பயணம்
* தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தன்னுடைய தொகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒவ்வொரு உறுப்பினரும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு பணித்திட்டங்களை பரிந்துரைக்கலாம்.
* ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் பணியை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளும் பயணங்களுக்குப் பயணத்தொகை அளிக்கப்படும். பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்து கொள்ளவும், பாராளுமன்ற குழுக்கூட்டங்கள், மந்திரிசபை கூட்டங்களில் கலந்துகொள்ள அல்லது அவருடைய பணி தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்த பயணத்துக்கும் அவருக்கு பயணப்படி வழங்கப்படும். அவர் சொந்த ஊருக்கு திரும்பும் செலவும் இதில் அடங்கும்.
* பாராளுமன்ற கூட்டத்தொடர், குழுக்கூட்டங்கள் அல்லது வேறு ஏதேனும் அலுவலகப் பணியாக ஒரு உறுப்பினர் பயணம் செய்யும் போது விமான கட்டணம் மற்றும் அதற்கு 25 சதவீதம் கூடுதலான தொகை அவருக்கு அளிக்கப்படும். ஒரு உறுப்பினர், தன்னுடைய கணவர்/மனைவியுடன் ஓராண்டுக்கு 34 முறை ஒருவழிப்பயணமாக விமானப்பயணம் மேற்கொள்ளலாம். உறுப்பினரின் கணவர்/மனைவி ஆண்டுக்கு 8 முறை தனியாக விமானப் பயணம் மேற்கொள்ளலாம். இந்த தொகை 34 பயணங்களில் அடங்கியதாகும்.
வாகன கடன்
* ஒவ்வொரு உறுப்பினரும் விரும்பினால் ரெயிலில் முதல் வகுப்பில் இலவசமாக பயணிக்கலாம். அவருக்கு ஒவ்வொரு ரெயில் பயணத்தின் போதும் ஒரு முதல் வகுப்பு ஏ.சி. மற்றும் இரண்டாம் வகுப்புக்கான இலவச சலுகை கூப்பன்கள் கிடைக்கும்.
* எம்பிக்கள் தங்கள் பணி நிமித்தம் மேற்கொள்ளும் சாலைப்பயணங்களில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.16 வழங்கப்படும்.
* ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவருடைய பதவிக்காலம் முழுமைக்கும் வாடகையற்ற வீடு அல்லது ஹாஸ்டல் இருப்பிடம் அளிக்கப்படும். பங்களா தேவைப்படும் உறுப்பினர்கள், அவர்களுடைய தகுதி அடிப்படையில் முழு அளவில் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். பதவிக்காலம் முடிவடைந்ததும் அந்த வீட்டில் அதற்கான வாடகையை செலுத்தி ஒரு மாதத்துக்கு தங்கிக் கொள்ளலாம்.
* பதவிக்காலத்தில் உறுப்பினர் இறந்து போனால், அந்த அரசாங்க வீட்டை அவருடைய குடும்பத்தினர் அந்த உறுப்பினர் இறந்த நாளில் இருந்து உரிய வாடகை செலுத்தி 6 மாதங்களுக்கு தங்கலாம்.
* ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஜன்பத், வெஸ்டர்ன் கோர்ட் கட்டிடத்தில் விருந்தினர் தங்குமிடங்கள் கிடைக்கும்.
* ஒவ்வொரு உறுப்பினரும் வாகனம் வாங்க ரூ,4 லட்சம் கடனாகப் பெறலாம். இந்த தொகையை அந்த உறுப்பினர் 60 தவணைகளில் திருப்பி செலுத்தலாம்.
தொலைபேசி வசதி
* ஒவ்வொரு உறுப்பினருக்கும் 3 தொலைபேசி இணைப்புகள் பெறுவதற்கு உரிமை உண்டு. ஒரு இணைப்பு அவருடைய டெல்லியில் உள்ள வீடு அல்லது அலுவலகம், மற்றொன்று அவருடைய விருப்பப்படி அவர் ஊரில் தங்குமிடத்தில் இணைக்கப்படும். மேலும் இரண்டு மொபைல் போன்களும் வழங்கப்படும். அவற்றில் ஒன்று பி.எஸ்.என்.எல். அல்லது எம்.டி.என்.எல். இணைப்பாக இருக்கும். இந்த மொபைல் போன்களில் 3ஜி வசதியும் இருக்கும். இந்த அனைத்து தொலைபேசிகளிலும் மொத்தமாக ஓராண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் அழைப்புக்களை அவர் செய்யலாம். 3ஜி வசதிக்கான கட்டணமும் இந்த தொகையில் அடங்கும்.
* உறுப்பினரின் வீட்டில் உள்ள சோபா உறைகள் மற்றும் திரைச்சீலைகளை ஒவ்வொரு மூன்று மாதத்திலும் சலவை செய்து கொள்ள வசதிகள் தரப்படும்.
உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடு மற்றும் அலுவலகத்துக்காக ரூ.75 ஆயிரத்துக்கு மிகாமல் வாங்கிக் கொள்ளலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum