உங்க போன chargeல போட போறீங்களா ? சில முன்னெச்சரிக்கைகள்
Fri Aug 08, 2014 10:33 pm
போஸ்ட் போட்டு ரெம்ப நாளாகுது மொபைல் சில HARDWARE பிரச்சினை காரணமா ரெண்டு நாள் Hospitalல அட்மிட் ஆகி இன்னைக்குதா கைக்கு கிடச்சது )
இந்த பிரச்சினைக்கான காரணத்தை நான் அந்த 'DOCTOR'இடம் விசாரிக்கையில் அவர் என்னிடம் கூறிய தகவல் அதிர்ச்சியடைய வைத்து விட்டது அவர் இதுவரை ஏகப்பட்ட இதே மாதிரியான 'கேஸ்'களை பார்த்துவிட்டாராம் அது அனைத்தும் இது போன்ற Android Mobileகளில்தான் இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்
மேலும் தொடர்ந்த அவர் மொபைல்களை சார்ஜ் செய்து அதனுடைய பேட்டரி திறன் 100 சதவிகிதத்தை அடைந்ததும் அவர்கள் இனைப்பை துண்டிப்பதில்லை எனவும் இதனால் அந்த 'சர்க்கியூட்' அதிக உஷ்னத்தை அடைந்து பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்
இதை விட கொடுமை என்ன்வென்றால் மிக அதிகமானோர் இரவில் சார்ஜ் செய்து தூங்கி காலையில்தான் அதனை துண்டிக்கிறார்கள் இது முழுக்க முழுக்க தவறு எனவும் அவர் தெரிவித்தார் இதனால் ஏற்படும் பிரச்சினைகள் அந்த சார்ஜ் செய்யும் பின் அருகே உள்ள அனைத்து Hardwareகளும் அதாவது Head phone pin, speaker, power Button போன்றவைகள் விரைவில் செயலிழக்கும் அதுதான் இப்பொழுது உங்களுக்கு நடந்துள்ளது என்று என்னை எச்சரிக்கை செய்தார் கடைசியாக அவர் கூறிய ஒரு எச்சரிக்கை செய்தி சார்ஜ் செய்யும்பொழுது மொபைலை அறவே உபயோகிக்காமல் இருப்பது சிறந்தது எனவும் தெரிவித்தார்
இவ்வளவு தகவல்களை நமக்கு தந்த அவரிடம் கடைசியில் எவ்வளவு என்று கேட்டேன் வெறும் 200 ரூபாய் கொடுங்கள் போதும் என்றார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum