இலவச ஈ புத்தகங்கள் வேண்டுமா?
Wed Feb 20, 2013 4:40 pm
இனி விலை கூடுதலான புத்தகம் வாங்க கவலை இல்லை! எல்லாருக்கும் இலவசமா புத்தகம் வழங்கி ஒரு வலை தளம் உதவி வருகின்றது.
நான் உயிரியல் தொழில்நுட்பம் படித்து வருகிறேன். இந்தியாவில் இந்த துறை
சரியாக இன்னும் வளர்ச்சி அடைய வில்லை. எனக்கு வருகின்ற பாடங்களுக்கு
புத்தகம் வாங்குவதே பெரும் பாடு தான். வெளிநாட்டுக்காரங்க எழுதின
புத்தகங்களத்தான் படித்தாக வேண்டும். அந்த புத்தகங்களும் சீக்கரம் கிடைத்து
விடாது. பத்து கடை ஏறி இறங்குனாதான் கிடைக்கும். அதுவும் மூவாயிரம்
நாலாயிரம் என்று விலை சொல்லி தலையில கல்ல தூக்கி போடுவான். பரீட்சை
நாட்களில் படிப்பதே சிரமம்! எந்த தோழியோ தோழரோ நல்ல மனசு பண்ணி அவங்க
கடின பட்டு வாங்கின புத்தகத்தை நகல் எடுத்துக்க தருவாங்க. அதை வாங்கி, நகல்
எடுத்து, படித்து, பரிட்சையில் தேறுவது ஒரு சாகசம் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் இனி அந்த கவலை இல்லை, ஒரு நாள் அவசரமா ஒரு புத்தகம் தேவைப்பட்டது.
எங்கும் கிடைக்கவில்லை. சரி, இணையத்திலாவது தேடி, படித்து தேறிவிடலாம் என்ற
நோக்கத்தோடு கணினியை ஆன் செய்தேன். கிடைத்தது! தகவல்கள்
அல்ல! நான் தேடின புத்தகமே கிடைத்துவிட்டது! அந்த புத்தகத்தின் விலை
மூவாயிரம் ரூபாய். அதே புத்தகம், அதே மாதிரி, சிறிதும் மாற்றம் இல்லாமல்,
இலவசமாக ஒரு வலை தளத்தில் கிடைத்துவிட்டது. அந்த புத்தகம்
மட்டும் அல்ல! இன்னும் எந்ததெந்த புத்தகங்களுக்கு நான் தேடி தேடி
அலைந்தேனோ, அத்தனை புத்தகங்களும், அந்த வலைத்தளத்தில் கொட்டி கிடந்தன.
என்னுடைய பாட பிரிவுக்கு மட்டும் அந்த வலை தளத்தில் புத்தகம் இருந்தது
என்று நான் சொல்லவில்லை! எல்லா பாடபிரிவுகளுக்கும் அங்கே புத்தகங்கள் கொட்டி கிடந்தன.
எல்லாம் டிஜிட்டல் புத்தகங்களாகவே கிடைத்தன. அப்படி என்றால், அந்த
புத்தகங்களை கணினியில் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம். PDF
சாப்ட்வேர் மூலம் தான் படிக்க முடியும், ஒவ்வொரு பக்கமாக அழகாக ஒரிஜினல்
புத்தகம் போல, கர்சரை நகர்த்தி கணினியில் படிக்கலாம். "Go to page number" என்ற option மூலம் தேவையான பக்கங்களை எளிதாக புரட்டலாம். உங்களிடம் அந்த புத்தகம் இருக்கிறது
என்ற மனநிறைவும் கிடைக்கும். புத்தகம் அதிக விலை என்றால் இவ்வாறு இலவசமாக
டிஜிட்டல் முறையில் பெற்று விடலாம். எதிர்கால தேவைக்கும் பயன்படுத்தி
கொள்ளலாம். பரீட்சை நேரத்தில், அந்த டிஜிட்டல் புத்தகத்தில் உள்ள தேவையான
பக்கங்களை பிரிண்ட் அவுட் எடுத்து படித்து கொள்ளலாம்.
இந்த மாதிரி புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கும் என்ற விவரம் நிறைய பேருக்கு தெரிந்து
இருக்கும். இருந்தாலும் என்னை போன்று தெரியாதவர்களுக்காக வெளியிட்டு
இருக்கிறேன்.
ஆனால் இந்த வலைதளத்தை, உங்களிடம் போதிய அளவு பணம் இல்லை, அவசரமாக புத்தகம்
தேவைப்படுகிறது, தேடியும் கிடைக்கவில்லை என்ற போது மட்டும் பயன்படுத்தி
கொண்டால் நல்லது. என்னதான் இருந்தாலும், உண்மையான புத்தகங்கள்
தரும் பலனை இது தரும் என்ற சொல்ல முடியாதே! உண்மையான புத்தகம் போலவும்
உணர்வு வாரதே! எனவே பணத்தை மிச்சம் பிடிக்க, புத்தகங்களை வாங்குவதை
நிறுத்தி விடாதீர்கள். இது படிப்பிற்கு உதவ வெளியிட்ட செய்தி, பணத்தை
மிச்சம் பிடிக்க கூறிய யோசனை அல்ல!
அந்த வலைபக்கத்தின் முகவரி- http://www.free-ebooks.net/
நன்றி: தமிழ்ச் சொல்

டிஜிட்டல் புத்தகம் |

Permissions in this forum:
You cannot reply to topics in this forum