தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?... Empty இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?...

Mon Apr 29, 2013 9:05 pm
 இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?... 941800_642675412425520_795401420_n


எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள்,
கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள
காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லா
டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர்.

தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினசரி 200ம் அதற்கு மேலும் வைட்டமின் “ஈ” எடுத்துக் கொள்வர்களுக்கு சர்வ
தேச அளவில் 77 சதவீதம் இதய நோய்கள் வர வாய்ப்பில்லை என்கின்றனர் 2 ஆயிரம்
ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஆராய்ந்த ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த்
ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600 யூனிட் வைட்டமின் “ஈ” எடுத்துக் கொள்ளும்
பெண்களுக்கு இதய நோய்களே வருவதில்லையாம்.

இளவயதுக்காரர்கள் நோய்
எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும், நடு வயதுக்காரர்கள் இதய நோய் அபாயத்தைத்
தவிர்க்கவும். வைட்டமின் “ஈ” உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், தவிடு நீக்காத
கோதுமை மாவு, முளைவிட்ட தானியங்கள், அவாகோடா பழம், கொட்டை உள்ள உணவுகள்
(நிலக்கடலை போன்றவை), கீரைகள், சூரியகாந்தி விதைகள், தாவார எண்ணெய்
(சூரியகாந்தி எண்ணெய்), ஆலிவ் எண்ணெய், கடுகு, கேனோலா எண்ணெய் போன்றவைகளை
சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக்
அமிலம் நல்ல இதய நோய் தடுப்பானாக செயல்படுகிறது என்கின்றனர் ஹார்வார்டு
யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். தினசரி 400 மி.கி., போலிக் அமிலம்
எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இதய நோய் அபாயம் குறைவு என்கின்றனர்.
போலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகள் ஆரஞ்சு சாறு, கீரைகள், பச்சைக்காய்கறிகள்,
முளை கட்டிய பருப்புகள்.

இதயத்தில் கொலஸ்ட்ரால் தேங்கினால் ரத்த
நாளங்கள் சுருங்கும். இதனால், இதயச் செயலிழப்பு ஏற்படும். இதைத்
தடுப்பதில் அமிலச் சத்தான “ஒமேகா 3″ வேகம் காட்டுகிறது என்கிறார் வாஷிங்டன்
நேஷனல் ஹெல்த் சென்டர் ஆராய்ச்சியாளர் சிமோபவுலாஸ். இந்த சத்து மீனில்
அதிகம் உள்ளதால் மீன் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் இல்லை
என்கின்றனர்.

உடலில் கொழுப்பு சேர விடாமல், “ஒமேகா 3″
தடுக்கிறது. எனவே, வாரத்திற்கு இருமுறை சால்மன், புளூபிஷ், மகிரால் வகை
மீன்களை உண்ண சிபாரிசு செய்கிறார் சிமோபவுலாஸ். மீன் சாப்பிடாதவர்கள்
வால்நட் பருப்பு, ப்ளாக்ஸ் ஆயில், சோயா, மொச்சை, ஆலிவ் ஆயில் போன்றவைகளை
உபயோகியுங்கள் என்கின்றனர். ஆலிவ் ஆயில் இதய நோய் வரும் வாய்ப்பை 53
சதவீதம் குறைக்கிறதாம்.

இதய நோய்கள் அபாயம் இன்றி வாழ தினமும்
அரை கப் மாதுளம் பழச்சாறு அருந்துங்கள் என்கின்றனர் இஸ்ரேல் நாட்டிலுள்ள
ராம்பம் மருத்துவ ஆராய்ச்சி மைய அறிஞர்கள். மாதுளை சாற்றில், “பாலி
பெனோல்ஸ்” என்ற இதயத்திற்கு நன்மை செய்யும், “ஆன்டி ஆக்ஸிடென்ட்” அதிகமாக
இருக்கிறதாம்.

டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய்,
சுத்திகரிக்கப்படாத எண்ணெய் போன்றவற்றினால் ஆன உணவு பதார்த்தங்களை
உண்ணாதீர்கள். அதிக கொழுப்பு சத்து நிறைந்த பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம்
போன்றவற்றை குறைவாக உபயோகியுங்கள் என்கின்றனர்.

அதிக
உப்புத்திறன் கொண்ட “அஜினமோட்டோ”, சமையல் சோடா, சமையல் பொடி, போன்றவற்றை
உபயோகிக்க கூடாது. உணவு உண்ணும் மேஜையிலிருந்து உப்பு தூவும் குடுவையை
எடுத்துவிடுங்கள். உப்பிற்கு பதிலாக, எலுமிச்சை, பூண்டு மற்றும் வெங்காயம்
கொண்டு உணவு தயாரிக்கவும்.

எப்பொழுதும் புதிய பழங்கள் மற்றும்
காய்கறிகளை மட்டுமே உண்ணுங்கள், ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை
உணவில் சேருங்கள். பீன்ஸ், உருளைகிழங்கு போன்றவற்றையும் உணவில் அதிகம்
சேர்க்கவும். எல்லாவற்றையும் விட அதிக நீர் குடியுங்கள்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum