பல் துலக்க சரியான 'பிரஷ்யை' எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
Fri Jul 11, 2014 9:59 pm
பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் டூத் பிரஷ்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. பெரியவர்களுக்கென்றும் சிறியவர்களுக்கென்றும் தனித்தனி அம்சங்களுடன் பிரஷ்கள் உள்ளன.
கடின ரகம், நடுத்தர ரகம், மென் ரகம் என்றும் குச்சங்களின் வளையும் தன்மையை வைத்து வகைப்படுத்தி பிரஷ்கள் விற்கப்படுகின்றன.
பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு விளம்பரம் செய்யும்போது மக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது.
பொதுவாக கடின முனைகள் கொண்ட பிரஷ்கள் தேய்ந்து ஈறுகளை வலுவிழக்கச் செய்கின்றன. அதனால் வேர்கள் வெளிப்பட்டு பற்கூச்சத்தை உண்டாக்கும்.
ஆகவே, அதை தவிர்த்து மென்மையான அல்லது நடுத்தர வகை பிரஷ்களைப் பயன்படுத்துவது நல்லது. பற்களின் சுத்தத்திற்கு தேய்ப்பதில் தரும் அழுத்தம் முக்கியம் அல்ல. தேய்க்கும் முறையே முக்கியம்.
பிரஷ்ஷின் முனைப் பகுதி வாய்க்குள் எளிதில் அடங்கும் அளவுடையதாக இரண்டு பல் அகலத்திற்குக் குச்சங்கள் கொண்டதாய் இருத்தல்அவசியம்.
குழந்தைகளுக்கெனில், மேற்கண்ட அம்சங்களுடன் மிகச் சிறிய முனைகள் கொண்ட பிரஷ் போதுமானது.
சீரான உயரம் கொண்டதும், 1 அல்லது 1.25'' நீளம், 5/16'' -3/8'' அகலம் கொண்டதும், 2-4 வரிசைகளைக் கொண்டதும் ஒவ்வொரு கற்றையிலும் 80}86 முனைகள் உள்ளதுமான பிரஷ் சிறந்ததாகும்.
லேசான வளைவைக் கொண்ட முனையுள்ள பிரஷ்கள் கடைசி பல் அல்லது ஞானப் பற்களுக்குப் பின்னாலும் சென்றடையும் என்பதால் அவை சிறந்தவையே.
பிரஷ் முனைகள் தேய்ந்து கற்றையிலிருந்து விலகி நிற்கும்போதோ அல்லது நான்கு மாதத்துக்கு ஒரு முறையோ மாற்றுதல் அவசியம்.
பற்களின் வடிவத்திற்கும், அமைப்பிற்கும் ஏற்ற பிரஷ்ஷை தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் உங்கள் பல் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள். —

Permissions in this forum:
You cannot reply to topics in this forum