ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்
Thu Jul 03, 2014 2:28 am
தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்...
தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதிய பயன் பெறும் வகையில் தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஜூலை 1ம் தேதி முதல் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 1.7.2014 முதல் 30.6.2018 வரை ரூ.2 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடியும். இந்த திட்டம் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் வாயிலாக கருவூல கணக்குத் துறை இயக்குநர் மூலம் செயல்படுத்தப் படும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அதிக அளவில் மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு கூடுதல் பயன் பெற இயலும். மேலும் முந்தைய திட்டத்தில் வாழ்நாள் காலத்திற்கு ரூ.ஒரு லட்சம் என்ற உச்சவரம்பு, இந்த புதிய திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஓய்வூதியரிடம் இருந்து ஏற்கெனவே பழைய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட மாதாந்திர சந்தா ரூ.150 தொடர்ந்து பிடித்தம் செய்யப்படும். இதற்கான ஆண்டு காப்பீட்டுத் தொகை, பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசால் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்திற்காக ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சென்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவலர், அந்தந்த மாவட்ட கருவூல அலுவலர்கள் மற்றும் சார் நிலை கருவூல அலுவலரிடம் அளித்து அதன் நகலை உரிய அலுவலரின் கையொப்பத்துடன் பெற்றுக் கொள்ளுமாறு ஏற்கெனவே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் தாம் ஓய்வூதியம் பெறும் வங்கிகள் மூலம் படிவங்களை சமர்ப்பித்து நகலை பெற்றுக் கொள்ளலாம்.
ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் படிவ நகலை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும் வரை இந்த புதிய திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என நெல்லை மாவட்ட கருவூல அலுவலர் வெங்கடலெட்சுமி தெரிவித்துள்ளார்.

- பொதுக் காப்பீட்டு நிறுவனம் Vs மருத்துவக் காப்பீட்டு நிறுவனம்..எது பெஸ்ட்?
- சுகன்யா சம்ரிதி திட்டம்... பெண் குழந்தைகளுக்கு முதலீட்டு திட்டம்
- காப்பீட்டு நிறுவனமே காப்பு!
- வருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி கிடையாது நாளை முதல் அமல்
- மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான வழிமுறை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum