ரோஜா செடியில் அதிக மலர்களை பெற நுனிகிள்ளுதல்
Sat Jun 14, 2014 8:45 am
ரோஜா செடியில் பசுமையான வளர்ச்சி காணப்படும் போது பிரதான தண்டின் நுனியினை மட்டும் அரை முதல் ஒரு அங்குல தூரத்தில் கிள்ளி எடுத்து விட வேண்டும். ஆனால் நுனியிலிருந்து கீழே உள்ள இலைக்கோணங்களில் உள்ள இளம் குருத்துக்களை கிள்ளுதல் கூடாது. அவற்றை நன்றாக வளர அனுமதிக்க வேண்டும். இப்படி வளரவிடப்பட்ட இளம் குருத்துக்கள் பசுமையாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்து விடும்.
இப்படி பசுமையாக அதிக இலைகள் வளரும் போது கிடைக்கும் நீராவிப்போக்கு காரணமாக செடிக்கு நன்றாக குளிர்ந்த நுண் கால நிலை கிடைக்கும். இதனால் செடியில் பெரிய அளவும், நல்ல நிறமுள்ள ரோஜா மலர்களும் உருவாகும். இப்படி ரோஜா செடியில் அதிக மலர்களை பெற உதவும் முக்கிய தண்டை கிள்ளி விடும் முறைக்கு நுனி கிள்ளுதல் முறை என்று பெயர். இந்த முறையில் ரோஜா செடிகளின் நுனிகளில் காணப்படும் ஆக்சின்கள் என்று வளர்ச்சி ஹார்மோன்களை நுனியுடன் கிள்ளி அப்புறப்படுத்துவதன் மூலம் பக்க மொட்டுக்கள் அதிக அளவில் பெருகி அதன் மூலம் அதிக மலர்களை பெற முடிகிறது. எனவே ரோஜா செடியில் அதிக மலர்களை பெற நுனிகிள்ளுதல் முறையை கடைபிடியுங்கள்
Like

Permissions in this forum:
You cannot reply to topics in this forum