ஓர் இஸ்லாமியே தேசமே கிறிஸ்தவ தேசமாக மாறிய அதிசயம்
Sat Jun 14, 2014 8:16 am
ஜோர்ஜியா நாட்டின் சுயாட்சி உரிமை பெற்ற (Autonomous Republic of Adjara) அட்ஜரா என்ற ஓர் நாட்டின் ஏற்பட்ட சத்தமில்லாத புரட்சியை பற்றி தான் இந்த பதிவில் கூறியிருக்கிறோம். ஜோர்ஜியா நாடு கிறிஸ்தவ நாடாக இருந்தாலும் அட்ஜரா என்ற இந்த பகுதி முகமதியர்களால் நிறைந்திருந்தது. சுமார் 80% முதல் 90% பேர் முகமதியர்களாக இருந்து வந்துள்ளனர்.
16ம் நூற்றாண்டு வரை இப்பகுதிகள் கிறிஸ்தவ நாடாய் தான் இருந்துள்ளன. ஆனால் (The Ottomans conquered the area in 1614. The people of Adjara converted to Islam in this period. ) ஒட்டோமான்ஸ் என்பவர்
அட்ஜரா மீது 1614ல் படை எடுத்து முழு பகுதியையும் ஆக்கிரமித்தார். மட்டும் அல்லாது மக்கள் அனைவரும் மதம் மாற்ற பட்டனர். 1614க்கு பிறகு அட்ஜரா பகுதி இஸ்லாமிய நாடாய் மாறியது.
இதன் பின்னர் பல போர்களை சந்தித்து பின் 1918–1920 களில் ஜோர்ஜியாவிடம் தன்னை இணைத்துகொண்டது.ஜோர்ஜியா கிறிஸ்தவ நாடாய் இருப்பதால் அட்ஜரா இஸ்லாமியா நாடாய் தான் இருக்கும் எனவும், முகமதியர்களே ஆட்சி புரிய வேண்டும் எனவும் இணைப்பாளர்கள் முடிவு செய்தனர். அதற்கு சோவியத் யூனியனும் இசைந்தது. பின்னர் 1921ம் ஆண்டு முதல் தன்னாட்சி பெற்ற இஸ்லாமிய நாடாக தன்னை பிரகண்டனப்படுத்தி கொண்டது.
1991ம் ஆண்டு சோவியத் யூனியன் சரிந்த பிறகு அட்ஜரா நாட்டில் உள்நாட்டு கலவரம் வெடித்தது. தற்போது சிரியா, எகிப்து, போன்ற நாடுகளில் உள்ளது போல Aslan Abashidze என்ற நீண்ட இஸ்லாமிய ஆட்சியாளரை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் புதிய ஆட்சி பொருப்பெடுத்தது.
சரி.. இந்த இஸ்லாமிய நாடு எப்படி கிறிஸ்தவ நாடாய் மாறியது.. ??? இதோ அதற்குரிய பதில் அட்ஜரா ஓர் இஸ்லாமிய நாடு என்று அறிவித்த சோவியத் யூனியன் சரித்திரத்தில் இருந்து 1991ம் ஆண்டு அழிக்கப்பட்டது. அதன் பின்னர் பெரும் புரட்சி வெடித்து அடிமைத்தனத்தில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். அட்ஜரா பகுதி இஸ்லாமியர்கள் 3-3.5 மில்லியன் ஆக இருந்தார்கள்.
1994க்கு பிறகு இயேசுவை பற்றி அதிக ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தனர். முக்கியமாக வாலிபர்கள் இயேசுவை ஏற்றுகொள்ள ஆரம்பித்தனர். வாலிபர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிசய மாற்றம் அட்ஜரா பகுதியையே உலுக்கி விட்டது.
1991ம் ஆனது 80% ஆக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 2006ல் 30% ஆக குறைந்து விட்டது. சபைகளும் பெருக ஆரம்பித்தன. மிசனரிகள் எழும்பி வேகமாக செயல்ப்பட ஆரம்பித்தனர். சுவிசேஷ தாகம் கொந்த அட்ஜரா இளைஞர்கள் வேதாகமத்தை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தனர். மசூதிகள் ஆலயங்களாக மாறின. இன்று 2014ம் ஆண்டு நிலவரப்படி சுமார் 75% முதல் 80% பேர் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். பலர் மறைமுகமாக இயேசுவை வழிபட்டு கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து இந்த எண்ணிக்கை கூடி கொண்டே வருகிறது.
தொடர்ந்து இப்படிப்பட்ட தேசங்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். பல இஸ்லாமிய தேசங்கள் தேவனுக்குள் சந்திக்கப்பட ஜெபியுங்கள். இஸ்லாமிய தேசங்களில் வேதாகமத்தை கொண்டு செல்ல தடை, சுவிசேஷத்தை சொல்ல தடை, கிறிஸ்தவர்களாய் மாறினால் கொலை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சாத்தானுக்கு நன்றாய் தெரியும், நம் பரிசுத்த வேதாகமம் நிச்சயமாய் இப்படிப்பட்ட தேசங்களை உடைத்துவிடும். சுவிசேஷம் வேகமாய் பரவினால் பல தேசங்கள் கிறிஸ்தவ நாடாய் என்றோ மாறி இருக்கும்.
நம் முழங்கால்களை முடக்குவோம். நிச்சயம் தேவன் தேசங்களை அசைப்பார். சுவிசேஷம் எல்லா நாடுகளுக்கும், தேசங்களுக்கும் பரவும். பரிசுத்தர் இயேசுவின் காலடி மண்ணாய் இருக்க அழைக்கவில்லை. கால் செருப்பாய் இருக்க அழைக்கிறார்.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum