பேஸ்புக் பிரபலத்துடன் ஒரு இண்டர்வியூ
Thu May 29, 2014 8:53 am
நான்: வணக்கம் ஐயா, மிகப்பெரிய பேஸ்புக் பிரபலமான உங்களை இண்டர்வியூ பன்றதுல எனக்கு சந்தோஷம்யா..
பிரபலம்: வணக்கம் தம்பி, சௌக்கியமா இருக்கீங்களா?? என்னை பிரபலம்னுல்லாம் சொல்லாதீங்க, கூச்சமா இருக்கு.. இண்டர்வியூவ படிக்கிற எல்லாருக்கும் வணக்கம்
நான்: ஐயா, பேஸ்புக் எப்படி வந்தீங்க??
பிரபலம்: நான் ஒரு சாதாரண ஆஃபீஸர்தான் தம்பி, வேலை பன்ற ஆபீஸ்ல அப்படி ஒண்ணும் பெரிசா வேலையிருக்காது, இண்டர்னெட்டுல சும்மா இருக்காம நோண்ட ஆரம்பிச்சேன், இன்னைக்கு உன் முன்னாடி பிரபலமா உக்கார்ந்திருக்கேன்!!
நான்: சந்தோஷம்யா, உங்க ஊருக்குள்ள உங்களை யாருக்கும் தெரியுமாங்கய்யா??
பிரபலம்: எங்க தம்பி?? எங்க ஊரு ஃபேஸ்புக்குல இருக்குறவனை தவிர என்னை யாருக்கும் தெரியாது!! சீக்கிரம் நீயாநானால பேசப்போகனும், அப்பத்தான் ஊருலயும் ஃபேமஸ் ஆகனும்.. கோட்டு கோபி என் ஃப்ரெண்டுதான் தெரியுமா??
நான்: வாழ்த்துகள் ஐயா, ஃபேஸ்புக் வந்த புதுசுல எத்தனை லைக் வாங்குனீங்க? என்ன பண்ணீங்க ஐயா??
பிரபலம்: நல்லா ஞாபகமிருக்கு தம்பி, என் ஸ்டேட்டஸுக்கு நான் ஒருத்தனே லைக் போட்டுக்குவேன், எந்தப்பொண்னு ஐடியை பார்த்தாலும் ஏட் ரிக்வெஸ்ட் கொடுத்தேன், மார்க் ப்ளாக்லாம் பண்னான் தெரியுமா???
நான்: ஒரு லைக் வாங்குன நீங்க, இன்னைக்கு குறைஞ்சது 300 லைக் வாங்குறீங்க, சாதாரண ஆட்களுக்கு இது சாத்தியப்படல, இது எப்படி ஐயா சாத்தியம்??
பிரபலம்: தம்பி, இப்படி அபாண்டமால்லாம் சொல்லக்கூடாது, எல்லாரும்தான் வாங்குறாங்க, எனக்கு ஃப்ரெண்ட்ஸ், ஃபாலோவர்ஸ்லாம் அதிகம், அதனால அதிகமா விழுகுது..
நான்: நீங்க உங்களுக்கு போட்ட லைக் கணக்கெல்லாம் சொல்றீங்களே, யார் யார் லைக் போட்டாங்கன்னு பார்த்து அவங்க வால்ல போய் ஒரு லைக்காச்சும் போட்டிருக்கீங்களா??
பிரபலம்: மறுபடியும் சொல்றேன், குத்தம் யாரு வேணாலும் சொல்லலாம், லைக் போட்டுப்பாருங்க தெரியும்..
நான்: ஐயா, இது மட்டுமில்லாம, உங்க மேல ஏகப்பட்ட குற்றச்சாட்டு இருக்கே, இன்பாக்ஸ்ல எல்லாப் பொண்ணுங்க கிட்டயும் வழியுறீங்க, உங்கள எதிர்த்து கேள்வி கேட்கிற எல்லாரையும் ப்ளாக் பன்றீங்க, உங்களைத் திட்டுற போஸ்ட்ல ஃபேக் ஐடில போய் கலாட்டா பன்றீங்க, உங்க போஸ்ட்ல கமெண்ட் பண்ணா கண்டுக்க மாட்டேங்குறீங்க இப்படி நிறைய குற்றச்சாட்டுகள்?? ஏன்??
பிரபலம்: தீக்குள்ள விரலை விட்டா சுடும்றேன்.. உனக்கு புரியல.. ஒரு நாள் பிரபலமா இருந்து பாரு, எத்தனை ஏட் ரிக்வெஸ்ட், எத்தனை இன்பாக்ஸ் மெசேஜ், எத்தனை குரூப்ஸ், எத்தனை மீட்டிங்கு, எத்தனை பஞ்சாயத்து, எத்தனை திட்டு, ஆணாதிக்கம், பெண்ணியம், அரசியல்வாதிங்கள திட்டனும், சினிமாக்காரங்கள கழுவி ஊத்தனும், இதெல்லாம் சொன்னா புரியாது, ஒருநாள் பிரபலமா இருந்து பார்.. தெரியும்..
நான்: இதுக்கு அது பதில் இல்லையே? அதுமட்டுமில்லாம அது சாத்தியமா என்ன??
பிரபலம்: உடனே ஜகா வாங்குற பார்த்தியா?? அதெல்லாம் சாத்தியம்தான், தொடர்ச்சியா ஒரு 10,20 ஸ்டேட்டஸ்ல மென்ஷன் பண்ணி பிரபலமா ஆக்கி விட்டுரலாம்.. பிரபலமா இருந்து பார்க்கிறியா??... சொல்லுங்க தம்பி, மக்கள் வெயிட் பன்றாங்க...
நான்: இல்லைங்கய்யா, எனக்கு அந்த மானங்கெட்ட பொழப்பு வேணாம், எனக்கு என் பொழப்பைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு!!! நன்றி...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum