வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?
Fri May 16, 2014 8:13 am
இந்த வருட நிதி ஆண்டு மார்ச் 31ல் முடிகிறது. வருமான வரி பதிவு செய்வதற்கான தருணம் நெருங்கி வருகிறது.
அதனால் இந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். அடுத்த கட்டுரையில் வருமான வரி விலக்கு பெறுவதற்கான வழிமுறைகளையும் பார்க்கலாம்.
ஆரம்பத்தில் வருமான வரி கணக்கிடுவது என்பது கடினமாக இருக்கும். இதனால் வருமான வரி பதிவு செய்வதற்கு சில ஏஜெண்ட் மூலம் பதிவு செய்வது வழக்கம்.
ஆனால் கொஞ்சம் முயன்றால் வருமான வரி தொடர்பான விவரங்கள எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதனால் ஏஜெண்ட் செலவுகளையும் தவிர்க்கலாம். தகுதியான இடங்களில் முதலீடு செய்யவும் முடியும்.
இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் தனி நபர்களுக்கும், பிரிக்கப்படாத இந்து குடும்பங்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது.
இதில் அலுவலகத்தில் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி சம்பளத்தின் போதே TDS (Tax Deducted at Source) என்ற முறையில் பிடிக்கப்படுகிறது.
இதற்கு கணக்கீட ஏதுவாக வருட ஆரம்பத்திலே IT declaration என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும். அதன் படி மாத சம்பளத்தில் பிடித்து வருவார்கள்.
உலகில் பல நாடுகளில் வரி விதிப்பு ப்ளாட்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது வருகிற வருமானத்தில் 10% அல்லது 15% என்று பிடித்து விடுவார்கள்.
ஆனால் இந்தியாவில் slab system என்பது நடைமுறையில் உள்ளது. இது ஒரு நல்ல அணுகுமுறை. அதாவது அதிக வருமானம் வருபவர்களுக்கு அதிக சதவீத வரியும் அதற்கடுத்த நிலைகளில் குறைந்த சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் கீழே உள்ள வரம்பு நிலைகள் வருமான வரிக்காக கடைபிடிக்கப்படுகிறது.
~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி ஏதும் கிடையாது
~ இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை 10% வரி செலுத்த வேண்டும்.
~ ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை 20% வரி செலுத்த வேண்டும்
~ பத்து லட்சத்துக்கு மேல் 30% வரி செலுத்த வேண்டும்
இந்த வரி வரம்பானது வீட்டு வாடகை, அனுமதிக்கப்பட்ட முதலீடுகள், வீட்டுக் கடன்கள் மற்றும் சில விலக்குகளைத் தவிர்த்துக் கணக்கிட வேண்டும்.
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
கணேசன் என்பவர் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுகிறார். அதில் அவரது வீடு வாடகை மாதம் 8000 ரூபாய், அவர் 80C விதியில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்கிறார். அப்படி என்றால் அவரது வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?
வருட வருமானம் - 12,00,000
வரி விலக்குகள்:
வீடு வாடகை - 96,000 (12*8000)
80c முதலீடு - 1,00,000
மொத்தம் - 1,96,000
நிகர வரி வருமானம் = வருட வருமானம் - வரி விலக்கு
நிகர வரி வருமானம் = 12,00,000 - 1,96,000 = 10,04,000
இந்த நிகர வரி வருமானம் 10,04,000 என்பதை 2,00,000 + 3,00,000 + 5,00,000 + 4,000 என்று பிரித்துக் கொள்ளுங்கள்
இதனை வரி வரம்பின் படி கணக்கிட்டால்,
~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி கிடையாது ..அப்படி என்றால் 2,00,000 தொகைக்கு 0 ரூபாய்
~ 2 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி...அப்படி என்றால் 3,00,000 தொகைக்கு 30,000 ரூபாய்
~ 5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி...அப்படி என்றால் 5,00,000 தொகைக்கு 1,00,00 ரூபாய்
~ 10 லட்சத்துக்கு மேல் 30% வரி...அப்படி என்றால் 4,000 தொகைக்கு 1200 ரூபாய்
ஆக மொத்த வருமான வரி = 0 + 30,000 + 1,00,000 + 1200 = 1,32,000
அதாவது கணேசன் இந்த வருடம் மொத்தம் 1,32,000 ரூபாய் வருமான வரியாக செலுத்த வேண்டும்.
மேலே உள்ள வருமான வரி வரம்பானது பெண்கள், வயதானவர்களுக்கு சிறிது சலுகைகளுடன் மாறுபடும்.
வரியே இல்லாவிட்டாலும் வருமான வரி சான்றிதழ் பெறுவது நல்லது. ஏனென்றால் வங்கிக்கடன் மற்றும் வெளிநாடு செல்லும் போது அதிகம் தேவைப்படும்.
இந்த இணைப்பில் உங்கள் வருமான வரியை எளிதாக கணக்கிடலாம்.
http://www.taxmann.com/tax-calculator.aspx
நன்றி: http://www.revmuthal.com/

Re: வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?
Fri May 16, 2014 8:17 am
வருமானவரி விலக்கு பெற ...
பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வங்கிகளின் காப்பீடு, முதலீடு முகவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவசர கோலத்தில் ஏதாவது ஒரு முதலீடு செய்து வரியை சேமிக்கலாம் என்று நிறைய பேர் இந்த திட்டங்களில் சேருவார்கள். அப்புறம் தான் அதில் உள்ள எதிர்மறைகள் தெரிய வரும்.
எமக்கும் சில அனுபவங்கள் உண்டு. ஆரம்ப காலங்களில் சில முகவர்களிடம் வரி சேமிக்க சில முதலீடுகள் செய்து ஏமாற்றம் அடைந்தது உண்டு. அதில் ஒன்று ULIP Insurance என்ற திட்டம். அதன் பிறகு தான் தெரிந்தது. இதனை விட FDல் அதிக பலன் உள்ளது. இதனைப் பற்றி தனியாக கட்டுரை எழுதுகிறோம்.
இந்த பதிவில் வரியைக் குறைப்பதற்காக உள்ள வழிமுறைகளை விரிவாக பார்ப்போம்.
சம்பளத்திலிருந்து
முடிந்த வரை உணவு, தொலைபேசி, பயணம் போன்றவற்றை அலோவன்ஸ் என்ற பெயரில் உங்கள் நிறுவனத்திடம் வாங்கிக் கொள்ளுங்கள்.
80C முதலீடுகள்
இந்த விதியின் கீழ் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் வரை அனுமதிக்கப்பட முதலீடுகள் செய்து கொள்ளலாம்.
இதில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகள் கீழே உள்ளது.
மற்றபடி ULIP Insurance, ICICI Prudential என்று பல திட்டங்கள் உள்ளன. ஆனால் அதனை நாம் பரிந்துரை செய்ய விரும்பவில்லை.
இந்த ஒரு லட்சம் என்ற வரம்பானது தங்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் PF தொகையும் சேர்த்து தான். அதனால் அதற்கு தகுந்தவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
மற்றவை
இது போக இன்னும் சில வழிமுறைகள் உள்ளன. அதில் பொதுவானதையும் எளிதானதையும் மட்டும் மேலே எடுத்து உள்ளோம்.
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டு எவ்வளவு வரி சேமிக்க முடியும் என்று பார்ப்போம்.
கணேசன் என்பவர் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுகிறார். அவரது PF பிடித்தம் வருடத்திற்கு 40000 ரூபாய். இது போக ELSS Mutual Fundல் முப்பதாயிரம் முதலீடு செய்கிறார். இதன் பின் இந்த வருட வீட்டுக் கடனுக்காக 40000 ரூபாய் அசலாக கட்டி இருக்கிறார். வட்டி இரண்டு லட்சம் கட்டி இருக்கிறார். அப்படி என்றால் எவ்வளவு வரி சேமித்து இருப்பார்?
மொத்த வருமானம்: 12,00,000
எந்த வித வரி விலக்கும் இன்றி மேலே உள்ள வருமானத்துக்கு உள்ள வரி: 12,00,000 = 60,000 + 1,00,000 + 30,000 = 1,90,000
அலோவன்ஸ்:
உணவு: 30,000 (12*2,500)
பயணம்: 960 (12*800)
தொலைபேசி: 18,000 (12*1,500)
மொத்தம்: 48,960 ரூபாய்
80C முதலீடுகள்:
PF: 40,000
ELSS Mutual Fund: 30,000
வீட்டுக் கடன் அசல்: 40000
Total: 1,10,000
ஆனால் அனுமதிப்பட்ட உச்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாய் மட்டும். அதனால் பத்தாயிரத்தை நீக்கி ஒரு லட்சத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
தற்போது மொத்தம்: 1,00,000
மருத்துவ செலவு: 15,000
வீட்டுக் கடன் வட்டி - 2,00,000
ஆனால் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு 1,50,000 மட்டும். அதனால் 1,50,000 என்று எடுத்துக் கொள்வோம்.
வரி விலக்கு பெறும் வீட்டுக் கடன் வட்டி - 1,50,000
மொத்த வரி விலக்கு தொகை: அலோவன்ஸ் + 80C முதலீடுகள்: + மருத்துவ செலவு + வங்கி வட்டி
மொத்த வரி விலக்கு தொகை: 48,960 + 1,00,000 + 15,000 + 1,50,000 = 3,13,960
வரி விலக்கு கழித்த பிறகு வருமானம்: 12,00,000 - 3,13,960 = 8,86,040
தற்போது வருமான வரி: 30,000 + 77,208 = 1,07,208
அப்படி என்றால் வரி சேமிப்பு = 1,90,000 - 1,07,208 = 82,792
அதாவது வரி விலக்குகளை ஒழுங்காக பயன்படுத்தினால் கணேசன் தன்னுடைய தோராயமாக ஒரு மாத சம்பளத்தை சேமிக்கலாம். (82,792). இதுவும் ஒரு பெரிய சேமிப்பு தானே.
ஒரு தடவை மட்டும் வரி கணக்குகளை நீங்கள் போட்டு பாருங்கள். அப்புறம் வாழ்க்கை முழுவதும் உங்கள் வரியை நீங்களே மேலாண்மை செய்து கொள்ளலாம்.

- பயணத்திற்கு என்று மாதம் 800 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ரசீது கொடுக்க வேண்டிய தேவை இல்லை. (Conveyance Allowance)
- உணவிற்கு என்று மாதம் 2500 வரை sodexo கூப்பன் பெற்றுக் கொள்ளலாம்.(Food Allowance)
- தொலைபேசி ரசீதைக் காட்டி வரி விலக்கும் பெறலாம். (Telephone Allowance)
80C முதலீடுகள்
இந்த விதியின் கீழ் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் வரை அனுமதிக்கப்பட முதலீடுகள் செய்து கொள்ளலாம்.
இதில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகள் கீழே உள்ளது.
- PPF : இது 15 வருட கால முதலீடு. 8.5% வட்டி அளிக்கப்படுகிறது.
- Insurance: இதில் LIC நிறுவனத்தின் முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ஏனென்றால் மிக நீண்ட கால முதலீடு என்பதால் கொஞ்சம் நம்பகத் தன்மை தேவைப்படுகிறது.
- 5 Year Fixed Depostis: அண்மையில் இது 80Cன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ELSS Mutual Fund: கொஞ்சம் அதிக ரிடர்ன் எதிர் பார்ப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம். இதனுடைய முதலீட்டுக் காலம் 3 ஆண்டுகள்.
- National Saving Certificate: இது மத்திய அரசின் பத்திரம். 8% வட்டி அளிக்கிறது.
மற்றபடி ULIP Insurance, ICICI Prudential என்று பல திட்டங்கள் உள்ளன. ஆனால் அதனை நாம் பரிந்துரை செய்ய விரும்பவில்லை.
இந்த ஒரு லட்சம் என்ற வரம்பானது தங்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் PF தொகையும் சேர்த்து தான். அதனால் அதற்கு தகுந்தவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
மற்றவை
- மருத்துவம்: இது போக 15000 ரூபாய்க்கு வரம்பிற்கு உட்பட்டு மருத்துவ செலவுகளையும் காட்டிக் கொள்ளலாம்.
- HRA: நீங்கள் வீட்டு வாடகை செலுத்துபவராக இருந்தால் உங்கள் HRA பொறுத்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். இது அதிக வரியினை சேமிக்க உதவும்.
- வீட்டுக் கடன்: வீட்டு வங்கிக் கடன் எடுத்து இருந்தால் செலுத்தி இருந்த அசலை 80Cன் கீழ் உள்ள ஒரு லட்ச விலக்கில் சேர்த்துக் கொள்ளலாம். வட்டியை எதிர்மறை வருமானம் என்ற பிரிவின் கீழ் விலக்கு பெறலாம். வரி விலக்கு பெறுவதற்கு வட்டிற்கான உச்ச வரம்பு 150000 ரூபாய் ஆகும். இந்த முறையில் வரி விலக்கு பெற்றால் HRA வரி விலக்கு பெறசில நிபந்தனைகள் உள்ளன.
இது போக இன்னும் சில வழிமுறைகள் உள்ளன. அதில் பொதுவானதையும் எளிதானதையும் மட்டும் மேலே எடுத்து உள்ளோம்.
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டு எவ்வளவு வரி சேமிக்க முடியும் என்று பார்ப்போம்.
கணேசன் என்பவர் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுகிறார். அவரது PF பிடித்தம் வருடத்திற்கு 40000 ரூபாய். இது போக ELSS Mutual Fundல் முப்பதாயிரம் முதலீடு செய்கிறார். இதன் பின் இந்த வருட வீட்டுக் கடனுக்காக 40000 ரூபாய் அசலாக கட்டி இருக்கிறார். வட்டி இரண்டு லட்சம் கட்டி இருக்கிறார். அப்படி என்றால் எவ்வளவு வரி சேமித்து இருப்பார்?
மொத்த வருமானம்: 12,00,000
எந்த வித வரி விலக்கும் இன்றி மேலே உள்ள வருமானத்துக்கு உள்ள வரி: 12,00,000 = 60,000 + 1,00,000 + 30,000 = 1,90,000
அலோவன்ஸ்:
உணவு: 30,000 (12*2,500)
பயணம்: 960 (12*800)
தொலைபேசி: 18,000 (12*1,500)
மொத்தம்: 48,960 ரூபாய்
80C முதலீடுகள்:
PF: 40,000
ELSS Mutual Fund: 30,000
வீட்டுக் கடன் அசல்: 40000
Total: 1,10,000
ஆனால் அனுமதிப்பட்ட உச்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாய் மட்டும். அதனால் பத்தாயிரத்தை நீக்கி ஒரு லட்சத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
தற்போது மொத்தம்: 1,00,000
மருத்துவ செலவு: 15,000
வீட்டுக் கடன் வட்டி - 2,00,000
ஆனால் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு 1,50,000 மட்டும். அதனால் 1,50,000 என்று எடுத்துக் கொள்வோம்.
வரி விலக்கு பெறும் வீட்டுக் கடன் வட்டி - 1,50,000
மொத்த வரி விலக்கு தொகை: அலோவன்ஸ் + 80C முதலீடுகள்: + மருத்துவ செலவு + வங்கி வட்டி
மொத்த வரி விலக்கு தொகை: 48,960 + 1,00,000 + 15,000 + 1,50,000 = 3,13,960
வரி விலக்கு கழித்த பிறகு வருமானம்: 12,00,000 - 3,13,960 = 8,86,040
தற்போது வருமான வரி: 30,000 + 77,208 = 1,07,208
அப்படி என்றால் வரி சேமிப்பு = 1,90,000 - 1,07,208 = 82,792
அதாவது வரி விலக்குகளை ஒழுங்காக பயன்படுத்தினால் கணேசன் தன்னுடைய தோராயமாக ஒரு மாத சம்பளத்தை சேமிக்கலாம். (82,792). இதுவும் ஒரு பெரிய சேமிப்பு தானே.
ஒரு தடவை மட்டும் வரி கணக்குகளை நீங்கள் போட்டு பாருங்கள். அப்புறம் வாழ்க்கை முழுவதும் உங்கள் வரியை நீங்களே மேலாண்மை செய்து கொள்ளலாம்.
Re: வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?
Fri May 16, 2014 8:24 am
வாருமான வரி சேமிக்க உதவும்
ELSS fund
வருமான வரியில் 80C என்ற பிரிவின் கீழ் சில முதலீட்டுப் பிரிவுகளுக்கு ஒரு லட்சம் வரை அதிக பட்சமாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதில் ELSS என்று சொல்லப்படும் Tax Saving Mutual Fund என்பதும் உள்ளடக்கம்.
ELSS என்பதன் விரிவாக்கம் Equity Linked Savings Scheme. இதுவும் ம்யூச்சல் பண்ட்டின் ஒரு பிரிவே.
ம்யூச்சல் பண்ட் பற்றி அறிமுகமில்லாதவர்கள் இதற்கு முன் நாம் எழுதிய ம்யூச்சல் பண்ட் தொடரினைப் பார்க்கவும்.
இதற்கான இணைப்பு இங்கே.
[url=http://www.revmuthal.com/search/label/Mutual Fund]ம்யூச்சல் பண்ட் தொடர்[/url]
ELSSன் ஒரு பகுதி பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் இந்த முதலீடு பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு உட்பட்டது.
அதே நேரத்தில் மற்ற முதலீடுகளைக் காட்டிலும் அதிக வருமானம் கொடுக்க வல்லது.
இந்த நிதியின் கட்டாய முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகள். இதில் கிடைக்கப்படும் ஈவுத் தொகையும் (Dividend) வருமான வரி விலக்கு பலனைப் பெறுகிறது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக பெரிதான தொகை எதிர் பார்ப்பவர்கள் DIVIDENDக்குப் பதிலாக GROWTH என்ற முறையைத் தேர்ந்தெடுங்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ELSS நிதிகள் சராசரியாக ஏழு சதவீத ரிடர்ன் அளித்து உள்ளன.
அதே நேரத்தில் நன்கு திறனாக செயல்பட்ட நிதிகள் 13.5% அளவும் பலன் தந்துள்ளன. இதனால் நிதியை தேர்ந்தெடுக்கும் போது நிதானமாக ஆராய்ந்து தேர்ந்தெடுக்கவும்.
மூன்று வருடங்களுக்கு இந்த நிதிகள் லாக் செய்யப்படுவதால் நிதி மேலாளர்களுக்கு போதுமான கால அவகாசம் கிடைக்கிறது. அதனால் அவர்களால் RISK மற்றும் RETURN என்ற இரண்டு Rகளையும் எளிதில் சமநிலைப்படுத்த முடிகிறது.
சிறிது RISK பயம் இல்லாதவர்கள் இந்த முதலீட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.
மற்ற ம்யூச்சல் பண்ட்களைப் போலவே வங்கிகளிலும், டிமேட் கணக்குகள் மூலமும் ELSS நிதிகளை வாங்கலாம்.

Fri May 16, 2014 8:25 am
வாரிசு வரியும், மறைமுக சமத்துவமும்..
இது இந்தியர்களுக்கு புதிய தகவலாக இருக்கலாம். சில நாடுகளில் 'Inheritance Tax' என்று நமக்குத் தெரியாத புது வித வரி உண்டு. தமிழில் சொன்னால் 'வாரிசு வரி'..இதனைப் பற்றி விவரமாகப் பார்ப்போம்,
ஒருவர் தன்னுடைய சொத்தினை தனது வாரிசுகளுக்கு கொடுக்க நினைக்கிறார். கொடுப்பதற்கு முன் அரசாங்கத்திற்கு இவ்வளவு சதவீதம் என்று வரி கட்ட வேண்டும். இந்த சதவீத அளவு ஒவ்வொரு நாடுகளிக்கிடையும் வேறுபடுகிறது.
பெரும்பாலான மேலைநாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் இந்த வரி முறை கடைபிடிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு,
கொரியாவில் இரண்டரை கோடி அளவிற்கு மேல் சொத்தினை தமது வாரிசுக்கு கொடுப்பதாக இருந்தால் 40% அரசிற்கு வரி கட்ட வேண்டும்.
இதனால் கொரியாவில் உள்ள பெரிய கம்பனிகளான சாம்சங், LG, ஹயுண்டாய் போன்ற நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் அரசினை ஏமாற்றி வருகின்றன.
அதாவது, தங்களது வாரிசின் பெயரில் துணை நிறுவனங்களை ஆரம்பிக்கின்றன. அதன் பிறகு தாய் நிறுவனத்தில் இருந்து பெரும்பாலான வியாபாரங்களை 'Outsourcing' என்ற பெயரில் துணை நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இதனால் லாபமும் வெளியே செல்வதில்லை. அரசாங்கத்துக்கும் வரி கட்ட வேண்டிய தேவை இல்லை. இப்படி மிக விவரமாக அரசினை ஏமாற்றி வருகின்றன.
இந்த நேர்முக வரி நமது நாட்டில் இல்லை என்று நாம் பரவசம் அடையலாம்.
ஆனால் இதில் மறைமுகமாக சமத்துவம் என்ற கம்யுனிச கொள்கை ஒளிந்து இருப்பதை அழகாகப் பார்க்கலாம்.
[color][font]
தற்போதைய தனி நபர் வருமான வரியில் கூட அரசிற்கு கிடைக்கும் வருமானம் மற்ற வரி வசூல்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே.
ஏன், நமது நாட்டில் தனி நபர் வருமான வரி இல்லாமலே அரசை நடத்த முடியும். அந்த அளவிற்கு மறைமுக வரி வசூல்கள் அதிகமாக உள்ளது.
ஆனால் தனி நபர் வருமான வரியின் முக்கிய நோக்கமே ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசத்தைக் குறைப்பதே.
உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு வருட வருமானம் 10 லட்சம் என்பது தாராளமாக போதுமானது. அதன் மேல் வருமானம் அதிகப்படியான வருமானமே.
இந்த அதிகப்படியான வருமானம். கண்டிப்பாக அன்றாடத் தேவைகளுக்கு பயன்படாது. பிற்காலத்தில் ஓய்விற்கோ, ஏழு தலைமுறைகளுக்கோ சேர்த்து வைக்கும் தொகை. அல்லது கேளிக்கை, பொழுதுபோக்கு போன்ற விடயங்களுக்கே அதிகமாக பயன்படும்.
ஆனால் மறுபக்கம் உணவு, உடை, உறைவிடம் போன்ற மூன்று அத்தியாவச தேவைகள் இல்லாமல் நிகழ்காலத்திலே அல்லல்படுபவர்கள் அதிகம்.
[/font][/color]
[color][font]
இந்த அதிகப்படியான வருமானத்தின் ஒரு பகுதியை எடுத்து மற்றொரு பிரிவினரை உயர்த்த பயன்படுத்துவதன் மூலம் இடைவெளியைக் கண்டிப்பாக குறைக்க முடியும். இதனால் தான் தனி நபர் வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுகிறது.
இதே போல் தான் வாரிசு சொத்துகளும்..
ஒரு மனிதன் பிறக்கும் போதே தேவைக்கு மிஞ்சிய பணத்துடன் பிறந்து விட்டால் அப்புறம் உழைப்பு தேவையில்லை. பணம் முதலீடாக இருந்தாலே மீண்டும் மீண்டும் பணத்தை ஈட்டிக் கொடுக்கும்.
அதனால் 'ஒருபக்கம், உழைக்காமலே வருமானம், மற்றொரு பக்கம் உழைத்தும் போதிய கூலி இல்லாமை'. என்று சமநிலை இன்மை ஏற்படுகிறது.
அப்புறம் ஏழை, ஏழையாகவே இருப்பான். அம்பானி மும்பையில் தேவையே இல்லாமல் பில்லியன் டாலர்களில் வீட்டினைக் கட்டிக் கொண்டு இருப்பார்.
இதனைத் தான் வளர்ந்த நாடுகள் வாரிசு வரி என்ற பெயரில் எளிதாக சமாளிக்கின்றன.
[/font][/color]
[color][font]
அமெரிக்காவில் பப்பெட் மகன் விவசாயத்தில் ஈடுபடுகிறார்.
அதே நேரத்தில் பொறுப்பில்லாமல் முகேஷ் அம்பானி மகன் குடித்து விட்டு கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தி தப்பிக்கிறார்... சித்தார்த் மல்லையா அடிக்கும் கூத்துகளை சொல்லவே வேண்டாம்.
இவர்களுக்கும் கஷ்டத்தின் பலனை கொஞ்சம் அனுபவிக்க வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும்.
இந்தியாவைப் போன்ற பொருளாதார இடைவெளி அதிகமாக உள்ள நாடுகளுக்கும் இந்த அணுகுமுறை கட்டாயம் தேவை.
ஆனால் அரசியல்வாதிகளும், அம்பானிகளும் இருக்கும் வரை வராது என்று நம்புவோமாக![/font][/color]

அம்பானியின் பில்லியன் டாலர் வீடு |

பொதுவிடத்தில் சித்து விளையாட்டுகள் |
இந்த அதிகப்படியான வருமானத்தின் ஒரு பகுதியை எடுத்து மற்றொரு பிரிவினரை உயர்த்த பயன்படுத்துவதன் மூலம் இடைவெளியைக் கண்டிப்பாக குறைக்க முடியும். இதனால் தான் தனி நபர் வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுகிறது.
இதே போல் தான் வாரிசு சொத்துகளும்..
ஒரு மனிதன் பிறக்கும் போதே தேவைக்கு மிஞ்சிய பணத்துடன் பிறந்து விட்டால் அப்புறம் உழைப்பு தேவையில்லை. பணம் முதலீடாக இருந்தாலே மீண்டும் மீண்டும் பணத்தை ஈட்டிக் கொடுக்கும்.
அதனால் 'ஒருபக்கம், உழைக்காமலே வருமானம், மற்றொரு பக்கம் உழைத்தும் போதிய கூலி இல்லாமை'. என்று சமநிலை இன்மை ஏற்படுகிறது.
அப்புறம் ஏழை, ஏழையாகவே இருப்பான். அம்பானி மும்பையில் தேவையே இல்லாமல் பில்லியன் டாலர்களில் வீட்டினைக் கட்டிக் கொண்டு இருப்பார்.
இதனைத் தான் வளர்ந்த நாடுகள் வாரிசு வரி என்ற பெயரில் எளிதாக சமாளிக்கின்றன.
[/font][/color]
விவசாயத்தில் ஈடுபடும் பப்பெட் மகன் |
அமெரிக்காவில் பப்பெட் மகன் விவசாயத்தில் ஈடுபடுகிறார்.
அதே நேரத்தில் பொறுப்பில்லாமல் முகேஷ் அம்பானி மகன் குடித்து விட்டு கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தி தப்பிக்கிறார்... சித்தார்த் மல்லையா அடிக்கும் கூத்துகளை சொல்லவே வேண்டாம்.
இவர்களுக்கும் கஷ்டத்தின் பலனை கொஞ்சம் அனுபவிக்க வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும்.
இந்தியாவைப் போன்ற பொருளாதார இடைவெளி அதிகமாக உள்ள நாடுகளுக்கும் இந்த அணுகுமுறை கட்டாயம் தேவை.
ஆனால் அரசியல்வாதிகளும், அம்பானிகளும் இருக்கும் வரை வராது என்று நம்புவோமாக![/font][/color]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum