தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வருமான வரி கணக்கு தாக்கல்: இ - ஃபைலிங் எப்படி செய்வது? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வருமான வரி கணக்கு தாக்கல்: இ - ஃபைலிங் எப்படி செய்வது? Empty வருமான வரி கணக்கு தாக்கல்: இ - ஃபைலிங் எப்படி செய்வது?

Mon Sep 16, 2013 7:46 pm
தற்போது, தனிநபர்களை பொறுத்த வரையில் அவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருந்தால் மதிப்பீடு ஆண்டு (அசெஸ்மென்ட் இயர்) 2013-14 இல் இ - ஃபைலிங் (எலெக்ட்ரானிக் ஃபைலிங்) முறையில்தான் வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இ - ஃபைலிங் செய்ய பான் கார்டு எண், ஃபார்ம் 16 (உங்கள் நிறுவனம் வழங்கியது), ஃபார்ம் 16 ஏ (சம்பளம், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்காக டி.டி.எஸ். பிடித்து கட்டப்பட்ட விவரம்), வங்கிக் கணக்குகளின் மொத்த பரிமாற்ற விவரம், மூலதன ஆதாயம் விவரம், வீட்டு வாடகை வருமானம், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்கள் போன்றவை தேவைப்படும். 
இந்த இ-ஃபைலிங் செய்ய 30 நிமிடங்கள் ஆகும். தவிர, இ - ஃபைலிங் முறையில் வரி கணக்கு தாக்கல் செய்தால் ரிஃப்ண்ட் விரைவில் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

இ - ஃபைலிங் செய்ய, இந்திய வருமான வரித் துறையின் இணையதளமான https://incometaxindiaefiling.gov.in/ க்கு சென்று பான் எண் மூலம் பதிவு செய்துகொள்ளவும்.

ஏற்கெனவே பதிவு செய்தவர்கள், பாஸ்வேர்ட், யூசர் ஐ.டி. கொடுத்து லாகின் செய்து உள்ளே சென்றுவிடலாம். உங்களுக்குப் பொருத்தமான படிவத்தைத் தேர்வு செய்து, வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான சாஃப்ட்வேரை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ள வேண்டும்.

பதிவிறக்கம் செய்த படிவத்தில் விவரங்களை மிகச் சரியாக பூர்த்தி செய்து பதிவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டும். உங்களின் டிஜிட்டல் கையெழுத்தை இ - ஃபைலிங் செய்ததற்கு ஆதாரமாக ஐ.டி.ஆர்.- V படிவம் தோன்றும். டிஜிட்டல் கையெழுத்து இல்லை என்றால் ஐ.டி.ஆர். V படிவத்தை பிரின்ட் எடுத்து கையெழுத்து போட்டு பெங்களுருக்கு சாதாரண தபால் அல்லது விரைவு தபால் (ஸ்பீட் போஸ்ட்) இணைத்து அனுப்ப வேண்டும்.

முகவரி
Income Tax Department - CPC
Post Bag No.1, Electronic City Post Office,
Bengaluru, Karnataka - 560 100
கட்டணம் இல்லா தொலைபேசி: 1800 - 425 - 2229
கட்டண தொலைபேசி: 080 - 2254 6500

மேலும், ஆடிட்டர்கள் மூலமும் இ - ஃபைலிங் செய்ய முடியும்.
இதை செய்து கொடுப்பதற்கு என பல இணையத் தளங்கள் இருக்கின்றன. அவை கட்டணமாக சுமார் 250 ரூபாய் தொடங்கி வாங்குகின்றன.

இவர்களிடம் உங்களின் படிவம் 16 கொடுத்தால் போதும். அவர்கள் உங்கள் சார்பாக இ - பைலிங் செய்துவிடுவார்கள்.
பெங்களூரு-ல் உள்ள மத்திய பரிசீலனை மையத்துக்கு (சி.பி.சி) ஐ.டி.ஆர். V கூட, இந்த நிறுவனங்களே அனுப்பி வைத்துவிடும்.



நன்றி: ரசிகன்...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வருமான வரி கணக்கு தாக்கல்: இ - ஃபைலிங் எப்படி செய்வது? Empty Re: வருமான வரி கணக்கு தாக்கல்: இ - ஃபைலிங் எப்படி செய்வது?

Mon Sep 16, 2013 8:01 pm
டாக்ஸ் ஃபைலிங்... மாற்றங்களைக் கவனியுங்கள் !
அலுவலகப் பணியாளர்கள் வருமான வரிக் கணக்கு விவரத்தை தாக்கல் செய்ய ஜூலை 31, கடைசி தேதி. கடைசி சில நாளில் அவசரஅவசரமாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்க அந்த வேலையை இப்போதே செய்து முடித்துவிடுவது நல்லது.

சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப்., லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி, பிள்ளைகளின் கல்விச் செலவு உள்ளிட்ட வரிச் சலுகைகளை கழித்ததுபோக மீதி உள்ள வருமானத்துக்கு மட்டும் வரி கட்டவேண்டும். இந்த முதலீடு, செலவு, வரிச் சலுகை பெற்ற விவரத்தை வருமான வரித் துறைக்கு தெரிவிப் பதுதான் வரி கணக்குத் தாக்கல்.

ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் அவர் வரிக் கணக்கு எதுவும் தாக்கல் செய்ய வேண்டிய தில்லை. இவர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் வழங்கப்படும் படிவம் 16, வருமான வரிக் கணக்கு படிவமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இதிலும் சில நிபந்தனைகள் உள்ளன. உதாரணத்துக்கு, ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்து நிதி ஆண்டில் அவருக்கு வங்கிச் சேமிப்புக் கணக்கு மூலம் 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி வருமானம் கிடைத்திருந்தால் அவர் வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம். நிதி ஆண்டில் இரண்டு கம்பெனிகளில் பணிபுரிந்தவர்கள், சம்பளம் தவிர இதர வருமானம் உள்ளவர்கள், ரீஃபண்ட் வரவேண்டும் என்றாலும் வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.



சமீபத்திய மாற்றங்கள்!

2012-13-ம் ஆண்டுக்கான வரிக் கணக்கு தாக்கல் முறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு வரையில் மொத்த வருமானம் (பிரிவு 80 சலுகை களைக் கழித்தபின்) 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் கட்டாயமாக இ - ஃபைலிங் என்கிற எலெக்ட்ரானிக் முறையில்தான் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இது இப்போது, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களும் வரிக் கணக்கை கட்டாயமாக இ-ஃபைலிங் முறையில் தாக்கல் செய்யவேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது. 

இதற்குமுன் வரிக் கணக்கு படிவத்தில் வங்கியின் எம்.ஐ.சி.ஆர். கோடு எண்ணை குறிப்பிடுவது அவசியம். தற்போது அதற்கு பதிலாக ஐ.எஃப்.எஸ்.சி. கோடு குறிப்பிட வேண்டும். இது உங்களின் வங்கி காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அல்லது வங்கியின் வலைதளத்திலிருந்தும் எடுக்கலாம்.

மேலும், உங்கள் வங்கிக் கணக்கின் 11 இலக்க எண்ணையும் கொடுப்பது அவசியம்.
நிதி ஆண்டில் உங்களுக்குக் கிடைக்கும் வரி விலக்கு பெற்ற வருமானம், 5,000 ரூபாயைத் தாண்டும்போது, வரிக் கணக்கு படிவம் ஐ.ஆர்.டி. 2 பயன்படுத்தவேண்டும். வரி விலக்கு பெற்ற வருமானம் என்பதில் டிவிடெண்ட், விவசாய வருமானம், லைஃப் இன்ஷூரன்ஸ் முதிர்வுத் தொகை, பி.பி.எஃப். வட்டி போன்றவை அடங்கும். வெளிநாட்டு வருமானம் இருந்தால் இ-ஃபைலிங் முறையில்தான் வரிக் கணக்கு தாக்கல் செய்யவேண்டும்.

யாருக்கு என்ன படிவம்..!
ஐ.டி.ஆர். 1 (சஹாஜ்)
* சம்பளம் / ஓய்வூதியம்.
* ஒரு வீட்டிலிருந்து வாடகை வருமானம் வருதல்.
* வட்டி வருமானம்.
* வெளிநாட்டில் சொத்து இருக்கக் கூடாது.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதி ஆண்டில் 5,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது
மேலேகண்ட விதிமுறைகள் பொருந்தும் பட்சத்தில் ஐ.ஆர்.டி. 1 பயன்படுத்தவேண்டும்.

ஐ.டி.ஆர். 2
சம்பளம் / ஓய்வூதியம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன ஆதாயம்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்கு கொண்டு செல்லுதல்.
வட்டி வருமானம்.
வெளிநாட்டில் சொத்து இருந்தால்..!

ஐ.டி.ஆர். 3
நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருப்பவர்கள்.
வட்டி வருமானம், சம்பளம், போனஸ், கமிஷன் போன்ற வருமானத்தைக்கொண்டவர்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளிலிருந்து வாடகை வருதல்.
மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளுக்கு கொண்டு செல்லுதல்.

ஐ.டி.ஆர். 4
வியாபாரம் அல்லது நிபுணத்துவம் மூலம் வருமானம் வருதல்.
இதர வருமானம் ஏதாவது.
வெளிநாட்டில் சொத்து.
ஐ.டி.ஆர். 4 எஸ் (சுகம்)
ஒப்பந்தக்காரர்கள், சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டிருப் பவர்கள் குறிப்பாக, கணக்கு வழக்கு பராமரிக்காமல் லாபத்தில் 8% வரி கட்டி வருபவர்கள்.
வரி விலக்கு பெற்ற வருமானம் நிதி ஆண்டில் 5,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.
ஊக வணிகம் மூலம் வருமானம் பெற்றிருக்கக் கூடாது.
ஐ.டி.ஆர். க்ஷி V (ITR- V Form)
இது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான ஆதாரப் படிவம்.

வருமான வரி அலுவலகத்தில் நேரில் சென்று வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்துதரவேண்டும். அதில் அலுவலக முத்திரை பதித்து தருவார்கள்.

ஆன்லைனில் இ-ஃபைலிங் முறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, டிஜிட்டல் கையெழுத்து பயன்படுத்தவில்லை என்றால் இந்தப் படிவத்தை பெங்களூருவில் உள்ள சி.இ.சி. அலுவலகத்துக்கு 120 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இது பெங்களூரு அலுவலகத்துக்குச் சென்று சேராதவரையில் நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்தது கணக்கில் வராது.

________________________________________

தற்போது தனிநபர்களைப் பொறுத்தவரையில், ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மதிப்பீடு ஆண்டு (அசெஸ்மென்ட் இயர்) 2013-14-ல் இ-ஃபைலிங் முறையில்தான் வரிக் கணக்கு தாக்கல் செய்யவேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இ-ஃபைலிங் செய்ய களம் இறங்கும்முன், பான் கார்டு, ஃபார்ம் 16 (நிறுவனம் வழங்கியது), ஃபார்ம் 16 ஏ (சம்பளம், ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்காக டி.டி.எஸ். பிடித்து கட்டப்பட்ட விவரம்), வங்கிக் கணக்குகளின் மொத்த பரிமாற்ற விவரம், மூலதன ஆதாய விவரம், வீட்டு வாடகை வருமானம், வரிச் சலுகைக்கான முதலீடு மற்றும் செலவு விவரங்கள் போன்றவற்றை தயார்படுத்திக்கொள்வது அவசியம்..!


இந்த இ-ஃபைலிங் செய்ய சுமார் 25 நிமிடங்களே ஆகும். தவிர, இ-ஃபைலிங் முறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்தால் ரீஃபண்ட் விரைவில் கிடைக்கும்.
இ-ஃபைலிங் செய்ய, இந்திய வருமான வரித் துறையின் இணையதளமானhttps://incometaxindiaefiling.gov.in/- க்கு சென்று பான் எண் மூலம் பதிவு செய்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் லாகின் செய்து உள்ளே சென்றுவிடலாம். உங்களுக்குப் பொருத்தமான படிவத்தைத் தேர்வு செய்து, வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.



டவுன்லோடு செய்த படிவத்தில் விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்து அப்லோடு செய்யவேண்டும். உங்களின் டிஜிட்டல் கையெழுத்தை இ-ஃபைலிங் செய்ததற்கு ஆதாரமாக ஐ.டி.ஆர். V படிவம் தோன்றும். டிஜிட்டல் கையெழுத்து இல்லை என்றால், ஐ.டி.ஆர். V படிவத்தை பிரின்ட் எடுத்து கையெழுத்துப்போட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு சாதாரண தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் அக்னாலெஜ்மென்ட் இல்லாமல் இணைத்து அனுப்பவேண்டும்.

Income Tax Department - CPC 
Post Bag No.1, Electronic City Post Office, 
Bengaluru, Karnataka - 560 100
கட்டணமில்லா தொலைபேசி: 18004252229
கட்டணத் தொலைபேசி: 08022546500

டிஜிட்டல் கையெழுத்து பயன் படுத்தவில்லை என்கிறபட்சத்தில், இதை பெங்களுரூவில் உள்ள சி.இ.சி. அலுவலகத்துக்கு 120 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இது பெங்களூரு அலுவலகத்துக்குச் சென்று சேராத வரையில் நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்தது கணக்கில் வராது.

மேலும், ஆடிட்டர்கள் மூலமும் இ-ஃபைலிங் செய்ய முடியும். இந்த வேலையை செய்துகொடுப்பதற்கு என பல இணையதளங்கள் இருக்கின்றன. அவை கட்டணமாக சுமார் 250 ரூபாயிலிருந்து வாங்குகின்றன.

இவர்களிடம் உங்களின் படிவம் 16 கொடுத்தால் போதும். அவர்கள் உங்கள் சார்பாக இ-ஃபைலிங் செய்து விடுவார்கள். பெங்களூருவில் உள்ள மத்திய பரிசீலனை மையத்துக்கு (சி.பி.சி.) ஐ.டி.ஆர். V கூட அவர்களே அனுப்பி வைத்துவிடுவார்கள்.

thanks 
மழைக்காகிதம்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வருமான வரி கணக்கு தாக்கல்: இ - ஃபைலிங் எப்படி செய்வது? Empty Re: வருமான வரி கணக்கு தாக்கல்: இ - ஃபைலிங் எப்படி செய்வது?

Sat Feb 15, 2014 12:46 pm
வருமானவரியை கணக்கிடுவது எப்படி?

இந்த வருட நிதி ஆண்டு மார்ச் 31ல் முடிகிறது. வருமான வரி பதிவு செய்வதற்கான தருணம் நெருங்கி வருகிறது.
அதனால் இந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். 


ஆரம்பத்தில் வருமான வரி கணக்கிடுவது என்பது கடினமாக இருக்கும். இதனால் வருமான வரி பதிவு செய்வதற்கு சில ஏஜெண்ட் மூலம் பதிவு செய்வது வழக்கம். ஆனால் கொஞ்சம் முயன்றால் வருமான வரி தொடர்பான விவரங்கள எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதனால் ஏஜெண்ட் செலவுகளையும் தவிர்க்கலாம். தகுதியான இடங்களில் முதலீடு செய்யவும் முடியும்.

இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் தனி நபர்களுக்கும், பிரிக்கப்படாத இந்து குடும்பங்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது. 

இதில் அலுவலகத்தில் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி சம்பளத்தின் போதே TDS (Tax Deducted at Source) என்ற முறையில் பிடிக்கப்படுகிறது. இதற்கு கணக்கீட ஏதுவாக வருட ஆரம்பத்திலே IT declaration என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும். அதன் படி மாத சம்பளத்தில் பிடித்து வருவார்கள்.


உலகில் பல நாடுகளில் வரி விதிப்பு ப்ளாட்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது வருகிற வருமானத்தில் 10% அல்லது 15% என்று பிடித்து விடுவார்கள். ஆனால் இந்தியாவில் slab system என்பது நடைமுறையில் உள்ளது. இது ஒரு நல்ல அணுகுமுறை. அதாவது அதிக வருமானம் வருபவர்களுக்கு அதிக சதவீத வரியும் அதற்கடுத்த நிலைகளில் குறைந்த சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும்.

தற்போதைய நிலையில் கீழே உள்ள வரம்பு நிலைகள் வருமான வரிக்காக கடைபிடிக்கப்படுகிறது.

~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி ஏதும் கிடையாது

~ இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை 10% வரி செலுத்த வேண்டும்.

~ ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை 20% வரி செலுத்த வேண்டும்

~ பத்து லட்சத்துக்கு மேல் 30% வரி செலுத்த வேண்டும்
இந்த வரி வரம்பானது வீட்டு வாடகை, அனுமதிக்கப்பட்ட முதலீடுகள், வீட்டுக் கடன்கள் மற்றும் சில விலக்குகளைத் தவிர்த்துக் கணக்கிட வேண்டும்.

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

கணேசன் என்பவர் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுகிறார். அதில் அவரது வீடு வாடகை மாதம் 8000 ரூபாய், அவர் 80C விதியில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்கிறார். அப்படி என்றால் அவரது வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

வருட வருமானம் - 12,00,000

வரி விலக்குகள்:
வீடு வாடகை - 96,000 (12*8000)
80c முதலீடு - 1,00,000

மொத்தம் - 1,96,000

நிகர வரி வருமானம் = வருட வருமானம் - வரி விலக்கு
நிகர வரி வருமானம் = 12,00,000 - 1,96,000 = 10,04,000

இந்த நிகர வரி வருமானம் 10,04,000 என்பதை 2,00,000 + 3,00,000 + 5,00,000 + 4,000 என்று பிரித்துக் கொள்ளுங்கள்
இதனை வரி வரம்பின் படி கணக்கிட்டால்,

~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி கிடையாது ..அப்படி என்றால் 2,00,000 தொகைக்கு 0 ரூபாய்

~ 2 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி...அப்படி என்றால் 3,00,000 தொகைக்கு 30,000 ரூபாய்

~ 5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி...அப்படி என்றால் 5,00,000 தொகைக்கு 1,00,00 ரூபாய்

~ 10 லட்சத்துக்கு மேல் 30% வரி...அப்படி என்றால் 4,000 தொகைக்கு 1200 ரூபாய்
ஆக மொத்த வருமான வரி = 0 + 30,000 + 1,00,000 + 1200 = 1,32,000

அதாவது கணேசன் இந்த வருடம் மொத்தம் 1,32,000 ரூபாய் வருமான வரியாக செலுத்த வேண்டும்.
மேலே உள்ள வருமான வரி வரம்பானது பெண்கள், வயதானவர்களுக்கு சிறிது சலுகைகளுடன் மாறுபடும்.
வரியே இல்லாவிட்டாலும் வருமான வரி சான்றிதழ் பெறுவது நல்லது. ஏனென்றால் வங்கிக்கடன் மற்றும் வெளிநாடு செல்லும் போது அதிகம் தேவைப்படும்.



இந்த இணைப்பில் உங்கள் வருமான வரியை எளிதாக கணக்கிடலாம். 
Click here


நன்றி: அமர்களம்
Sponsored content

வருமான வரி கணக்கு தாக்கல்: இ - ஃபைலிங் எப்படி செய்வது? Empty Re: வருமான வரி கணக்கு தாக்கல்: இ - ஃபைலிங் எப்படி செய்வது?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum