பணத்தை எட்டிப் பிடிக்க ஆசைப்பட்டு
Wed Apr 30, 2014 6:12 pm
வேட்டைக்குப் போன அரசன் ஒரு காட்டிற்குள் தனியாக வந்து சிக்கிக் கொண்டான்...அரசனை பல்லக்கில் வைத்துக்கொண்டு அவனது நாட்டிற்கு கொண்டு போய் சேர்க்க அங்கே இருந்த காட்டுவாசிகள் நான்கு பேர் ஒப்புக் கொண்டார்கள்... அவர்களிடம் பேசிய போது நாட்டிற்கு போய் சேர ஆறு நாட்களாகும் என்று அறிந்து கொண்டான்...!!
அரசனுக்கோ வெகு விரைவாக நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற விருப்பம்.. எனவே அரசன் அவர்களிடம் "என்னை மூன்று நாட்களில் கொண்டு போய் சேர்த்தால் மூன்றாயிரம் தருகிறேன்...!! இரண்டே நாட்களில் கொண்டு போய் சேர்த்தால் 5000 பொற்காசுகள் தருகிறேன்.." என்றான்..
பல்லக்கு சுமந்த காட்டு வாசிகள் பொன்னுக்கு ஆசைப்பட்டு வேகத்தை கூட்டிக் கொண்டே போனார்கள்.. ஆனால் நடந்ததோ வேறு..
ஆறு நாட்கள் கழிந்தும் காட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டு இருந்தார்கள். ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் பல்லக்கை கீழே இறக்கி வைத்து விட்டார்கள்...
அரசனுக்கு கோபம்... ஆனால் அவர்கள்... "மன்னிக்க வேண்டும் மன்னா... வேகத்திலேயே கவனம் வைத்த காரணத்தால் வழியை தவற விட்டு விட்டோம்...." என்று வேதனையுடன் கூறினார்கள்...
டிஸ்கி @ இப்படித் தான் .. நம்மில் பலரும் வாழ்க்கையில் பணத்தை எட்டிப் பிடிக்க ஆசைப்பட்டு நல்ல வழியை தவற விட்டு விடுகிறோம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum