டாக்டர்.கார்ல் பெக்கர்
Thu Mar 13, 2014 12:52 am
டாக்டர்.கார்ல் பெக்கர்
டாக்டர்.கார்ல் பெக்கர், ஒருமருத்துவ மிஷனரி. ஒரு நாள் தனது மண் குடிசை வீட்டின் முன் ஒரு மூங்கில் கட்டை இருப்பதை கண்டார்.அதன் மேல் முட்டையின் மஞ்சள் கரு தடவப்பட்டு, சிறுத்தையின் தோல் தொங்க விடப்பட்டும் இருந்தது. இந்த விபரீத காட்சியைக் கண்டு அருகில் சென்று பார்த்தார். அதை முகர்ந்து பார்த்து,'விளக்கெண்ணை போல் உள்ளது !' என்று எண்ணி குடிசையினுள் சென்று அவரோடு தங்கி இருந்த பால் ஹுல்பர்ட் என்ற இன்னொரு மிஷனரியிடம் தான் கண்ட மூங்கில் கட்டை பற்றிக் கூறினார்.
'இதை அந்த மந்திரவாத மருத்துவர் தான் செய்திருப்பார். உங்களை அவர்களுடைய பழக்கத்தின் படி சபித்து இருக்கிறார். நீங்கள் அவர்களுக்கு துரதிஷ்டம் கொண்டு வருகிறதாக எண்ணுகிறார்.' என விளக்கம் அளித்தார்.
ஆனால் ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று குழம்பினார் டாக்டர். பெக்கர் .
அவர்கள் உம்மை விட்டு விலக வேண்டும் என நினைகிறார்கள். இப்பொழுது உங்களை கவனித்து பார்ப்பார்கள். நீங்கள் தும்மினால், உங்கள் மேல் சாபம் இருப்பதாக முடிவு செய்வர். உங்களுக்கு உடல் நலம் பாதித்தல் அல்லது உங்களுடைய நோயாளிகள் யாரேனும் இறந்து விட்டால் உங்களை சபிப்பார்கள்.அதினால் நீங்கள் அவர்களுக்கு பயந்து ஓடி விடுவீர்கள் என்று நினைக்கிறார்கள்.
அப்பொழுது தூரத்தில் அடர்ந்த புல படர்ந்துக் காணப்படும் நூற்றுக்கணக்கான குடிசைகளைப் பார்த்தார். அது ஏறக்குறைய 100 கிராமங்கள் கொண்ட ஆப்பிரிக்க நாட்டின் பகுதி.அவர்கள் யாரும் இந்த மிஷனரி டாக்டரை நம்பவில்லை.இவர்கள் என்னை நம்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று எண்ணியவாறு , இவர்கள் எந்த வியாதியினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்? எனக் கேட்டார்.
ஹுல்பர்ட் ,'இவர்களுக்கு ஜுரம், சளி, மார்பக கபம், தோல்வியாதி, மலேரியா , தொற்று நோய் போன்றவைகள் உண்டு.' ஆனால் அவர்கள் உங்களிடம் வருவார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்களுடைய மந்திரவாத மருத்துவரிடம்செல்வதையே விரும்புவர்கள். நோய்கள் சாபத்தினால் , கெட்ட அதிர்ஷ்டத்தினால் வருவதாக எண்ணுகிறவர்கள். அந்த மந்திரவாத மருத்துவர் மந்திரங்கள் கூறி, அவர்களிடம் மிருகங்களை பெற்று கொண்டு, அதனை பலியாக்கி, ஆடி , பாடுவார். அதன் மூலம் அவர்களுடைய வியாதி நீங்குவதாக நம்புகிறார்கள்." என்றார்.
பின்னும் அவர் சிரித்துக் கொண்டே , 'உங்களிடம் வரும் முதல் நோயாளி பூரண குணம் அடைவதைக் கண்டால், ஒரு வேளை நம்பலாம்' என்றார்.
அதற்கு, பெக்கர் முதல் நோயாளி மட்டும் அல்ல அனைவரும் சுகம் அடைவது முக்கியம் என்று சொல்லிகொண்டே குடிசைக்குள் சென்றார்.
1929ம்ஆண்டு டாக்டர். பெக்கர் தனது மனைவி மேரி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அமெரிக்காவின் பென்சில்வானியா மாகாணத்திலிருந்து 12000 மைல் கடந்து ஆப்பரிக்காவின் மைய பகுதிக்கு மிஷனரியாக வந்தார். அவர்கள் முதலாவது 'கிட்சொம்ப்ரியோ' என்ற இடத்தில் ஈரமான மண்ணிலேயே குடிசை போட்டு இரண்டு அறைகளாக பிரித்து அங்கு வசித்து வந்தனர்.கிழக்கு காங்கோ மலைபகுதி கடல் மட்டத்தில் இருந்து 8000 அடிக்கு மேல் உள்ளது. அங்கே பல மைல்களுக்கு இவர் ஒரே மருத்துவராக இருந்தார்.
ஒரு நாள் குடல் இறக்கத்தினால் பாதிக்கப்பட்ட பெண் அவர்கள் குடிசை முன் குனிந்து அவஸ்தை படுவதைக் கண்டார். அந்த பெண்மணி ஏற்கனவே மூன்று மந்திரவாத மருத்துவர்களிடம் சென்றுள்ளார். அவர்கள் மந்திரங்களை கூறியும், ஆடி பாடியும் பயன் ஏதும் இல்லை. வலி மிகவும் மோசமானது.
டாக்டர் ஹுல்பர்ட் மற்றும் மனைவியின் உதவியுடன் அந்த பெண்மணியை குடிசைக்குள் சாப்பாட்டு மேசையின் மேல் கிடத்தி அறுவை சிகிச்சை செய்யச் சென்றார். ஆனால் 12 எதிர்ப்பாளர்கள் குடிசைக்கு வெளியே நின்று கோஷம் போட்டனர். இந்த பெண் பிழைத்தால், அவர்கள் என்னை நம்புவார்கள். ஒரு வேளை மரித்தாலோ...மூங்கில் கட்டை ஞாபகம் வந்தது' ஆண்டவரிடம் கண்களை மூடி ஜெபித்து விட்டு அறுவை சிகிச்சை செய்து முடித்தார்.
தேவன் ஜெபத்திற்கு பதில் தந்தார். அந்த பெண் பிழைத்துக் கொண்டார். குடிசையை சுற்றி இருந்த மக்கள் இவரை நம்பினார்கள். உடனே ஊருக்குள் சென்று, மேளதாளம் கொட்டி, "வாருங்கள் கிட்சொம்ப்ரியோவிற்கு, அங்கே ஒரு 'முங்கன்கா' உள்ளார். நம் சாபங்களை நீக்கி விடுவார் "என்று பறை சாற்றினர். இது அந்த உள்ளூர் மந்திரவாத மருத்துவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது.
டாக்டர் . பெக்கர் கிவு மாகாணத்தின் ஓய்ச்சா என்ற இடத்தில் தங்கி தனது மிஷனரி வேலையை தொடர முடிவு செய்தார். அந்த பகுதியின் இட்டுரி காடுகளில் தன் 'பிக்மீஸ்' என்ற குள்ள மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களை சந்தித்து ஆண்டவரை பற்றி கூற வேண்டும் என்ற ஆவல் டாக்டர் பெக்கருக்கு இருந்தது. ஆனால் பிக்மீஸ் இன மக்கள் மற்ற ஆப்பரிக்க இன மக்கள் அவர்களை கொடுமை படுத்துவதாலும், மனிதர்களாக கருதாமல் துன்புறுத்துவதாலும் அவர்கள் அந்த அடர்ந்த காட்டை விட்டு வெளியே வர பயந்திருந்தனர்.
ஓய்ச்சா என்ற இடத்தில் கிசொபே என்ற தலைவன் இருந்தான். அவன் யாருக்கும் பயப்படமாட்டான். ஒருவரையும் மதிக்கமாட்டான். அவனுடைய மகனை மட்டும் நேசிப்பான். அவன் பெயர் 'பெஞ்சமினா '.
1929 க்கு முன்னர் டாக்டர். பெக்கர் ஓய்ச்சாவிற்கு வரும் முன் ஜிம் பெல் என்ற மிஷனரி அங்கு வந்து கிசொபை சந்தித்து உள்ளார். அவர் அங்கு ஒரு சபை கட்ட அனுமதி கேட்டார். ஆனால் கிசொபே அதற்கு சம்மதிக்கவில்லை. எங்களுடைய கடவுள் போதும் ..வேறு கடவுள் வேண்டாம் என மறுத்துவிட்டான்.
அதைத் தொடர்ந்து மருத்துவமனையும் கட்டி தருவதாக கூறினார். அதற்கும் செவி சாய்க்கவில்லை கிசொபே. எங்களுடைய மந்திரவாதங்கள் போதும் ..என்று கூறினான். பின்னர், பள்ளிகள் கட்டி தருவதாகவும், அவர்களுடைய குழந்தைகள் படிக்க உதவி செய்வதாகவும் கூறியவுடன், கிசொபே ஒத்துக்கொண்டான். தன் மகன் பெஞ்சமினாவை அங்கு சேர்த்து படிக்க வைக்க விருப்பம் தெரிவித்தான். அதற்கு சம்மதித்து சபை, பள்ளி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை கட்டி அந்த கிராம மக்களுக்கு சேவை செய்து வந்தார். பெஞ்சமினா பள்ளிக்குச் சென்று படிப்பறிவு பெற்று, ஆண்டவரை பற்றியும் அறிந்துக் கொண்டான். கிசொபேவிடம் ஆண்டவர் பற்றி கூறுவான். கடவுளின் புத்தகம் இது. இதில் கொலை செய்யக்கூடாது, திருடக் கூடாது, ஒழுக்கம் இல்லாமல் வாழக்கூடாது, குடிக்கக்கூடாது என்று கூறியுள்ளார் எனக் கூறுவான்.ஆனால் அவனுடைய மோசமான வாழ்க்கை அவனை இந்த சத்தியங்களை ஏற்றுக்கொள்ள தடை செய்தது. இரவு முழுவதும் குடித்து வெறிதிருப்பதே அவனுடைய வழக்கம்.
கிசொபே மந்திரவாதியிடம் சென்று என் மகன் அந்த வெளிநாட்டு மருத்துவரின் கடவுள் பற்றி கூறினான். இயேசு தான் கடவுள் .அவருடைய இரத்தம் நம்முடைய சாபங்களை நீக்கும் என்கிறான். நோய்களை சுகப்படுத்த அந்த மருத்துவர் ஒன்றும் வாங்குவதில்லை .
மந்திரவாதி யோசித்தவாறு, "சாபங்களை நீக்க கோழியின் இரத்தமே போதும். நான்...நான்... சில பொருட்களை உங்களிடம் இருந்து வாங்குவது பரிகாரம் செய்வதற்கே... "என்றுக் கூறி சமாளித்தான்.
நாட்கள் சென்றது. அநேக மக்கள் கென்யா, உகாண்டா போன்ற காங்கோவின் சுற்றுப்புறத்திலிருந்து டாக்டர் பெக்கரிடம் மருத்தவ உதவி பெற வந்தனர். பெஞ்சமினாவாலிபனாக வளர்ந்து மருத்துவராக விருப்பம் தெரிவித்தான்.
ஓய்ச்சாவின் மக்கள் பெக்கரை நேசித்தனர். தினமும் காலையில் நீண்ட வரிசையில் வீட்டின் முன் நின்று மருத்துவ உதவி கேட்பர். ஒரு வாரத்திற்கு குறைந்தது 20 அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் டாக்டர் பெக்கர் இருந்தார். உதவி மருத்துவர்களும் அங்கு இருந்தார்கள்.அவர் சுவாகிலி, லிங்கலா போன்ற மொழிகளையும் கற்றார்
டாக்டர் பெக்கர் தனது ஓயாத வேலையின் மத்தியில், ஆண்டவரின் அன்பை கூறுவதும், ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதிலும் விருப்பமுடையவராய் காணப்பட்டார். தினமும் காலை ஐந்து மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம் ஆண்டவர் பாதத்தில் அமர்ந்து ஜெபிப்பார் . பின்னர் காலை உணவுக்குப் பின் குடும்பமாக ஜெபம் செய்வார்கள்
அங்கு உள்ள மக்கள் சரியான புரிதல் இல்லாமல் நடந்து கொள்வர். உதாரணமாக, மருந்தை உட்கொள்ளாமல், அதனை வீட்டின் கூரையில் தொங்கவிட்டால், பேய், பிசாசு, மந்திரம் அண்டாது . நோய் குணமாகிவிடும் என்றும், தங்கள் மேல் மாதிரிகளை தொங்கவிட்டும் பேதமையில் வாழ்ந்து வந்தனர். டாக்டர் பெக்கர் அவர்களிடம் அன்பாக பழகி புரிய வைத்து சேவை செய்தார்.
கிசொபே ஒரு நாள் குடல் இறக்கதினால் பாதிக்கப்பட்டு வலியால் மிகவும் துடித்தான். அப்பொழுது பெஞ்சமினா தன் தகப்பனை டாக்டர் பெக்கெரிடம் கொண்டு வந்தான்.
"ஒ..எனக்கு வலிக்கிறது...என் மந்திரவாதியிடம் கொழுத்த கோழியை கொடுத்ததும் புண்ணியம் இல்லை. அவர் பல மணி நேரம் ஆடி, ஏதோ ஒரு நாற்றம் எடுக்கும் பொருளை என் மேல் போட்டு வலியை மோசமாக்கி விட்டார்.... என்னால் வலி தங்க முடியவில்லை ... ஏதாவது செய்யுங்கள்..." என்று வலியில் கதறினான் கிசொபே.
டாக்டர் வேகமாக உதவியாளர்களின் துணைக்கொண்டு கிசொபேவை மேசையில் கிடத்தினான். அறுவை சிகிச்சை செய்யும் முன் 'ஆண்டவரே இந்த காரியத்தை செய்ய என் கைகளை பெலப்படுத்தும் ' என்று ஜெபித்தார்.
"கிசொபே,ஒரு வேலை இந்த அறுவை சிகிச்சை பலன் அளிக்காமல் நீர் மரித்துவிட்டால் எங்கே செல்வீர்? நீர் ஆண்டவரை புறக்கணித்துவிட்டீர் . இப்போதாவது ஆண்டவர் உம்மை நேசிப்பதை புரிந்து கொண்டீரா? அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறீரா? "எனக் கேட்டார். வலியில் துடித்துக்கொண்டு இருந்த கிசொபே ஒரு தலையாக சரி என்றான்.
சிறிது நேரம் கழித்து அதிக கஷ்டத்திற்குப் பின்னர் கிசொபே உயிர் பிழைத்தான். ஆனாலும் அவன் மனக் கடினத்தோடே வாழ்ந்தான். பெஞ்சமினா கிறிஸ்தவனாக மாறியது அறிந்து ஊரை விட்டு வெளியேற்றினான் டாக்டர் பெக்கரிடம் யாரும் போகக் கூடாது , மந்திரவாதியிடம் செல்லுங்கள் என்று ஊர் மக்களை கட்டாயப்படுத்தினான். அவனுடைய வாழ்கை மேலும் மேலும் மோசம் ஆனது.
ஒரு முறை யாரும் அறியாத வண்ணம் இரவின் இருண்ட நேரத்தில் ஒரு மந்திரவாதி மருத்துவர் டாக்டர் பெக்கரை சந்திக்க வந்தார். 'வணக்கம் ..முங்கன்கா, நீங்கள் என்னுடைய மக்களை உங்கள் பக்கமாக இல்லுது கொண்டீர்கள். எதினால் இப்படி செய்கிறீர்? எனக்கும் தீராத வலி இருக்கிறது. எப்படி நீக்குவது என்று தெரியவில்லை.' என்றான்.
அந்த மந்திரவாதி குடலிறக்கத்தினால் அவதிப்பட்டார். மருத்துவ முறைப்படி அறுவை சிகிச்சை செய்தால் குணமாகும் என்று கூறினார். ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்த வலி துஷ்ட ஆவிகளினால் வருகிறது என்று சாதித்தார். எவ்வளவு எடுத்து கூறினாலும் மந்திரவாதி புரிந்து கொள்ள வில்லை. ஆனால் டாக்டர் பெக்கரும் விடா முயற்சியோடு ஆண்டவரை பற்றியும் கூறினார். இரட்சிக்கப்படும்படி அறிவுரை வழங்கினார்.
ஆனால் மந்திரவாதியோ தன் குடிசைக்கு நம்பாமல் சென்று விட்டார். ஆண்டவரை விட்டுவிட்டு பாம்பின் தோல், பறவையின் இறகுகள், சிறுத்தையின் பல், நகம், கடற்சிப்பிகள், மழை போல தொங்க விடப்பட்ட வண்ணக் கற்கள் போன்றவற்றை நம்பி துஷ்ட ஆவிகளின் பிடியில் இருந்தும் அவைகளுக்கு பயந்தும் வாழ்ந்து வந்தார்.
நாட்கள் செல்லச் செல்ல மந்திரவாதி டாக்டர் கூறியதை சிந்தித்தார். மக்களை மந்திரக் காரியங்களை கொண்டு பயமுறுத்துவதை நிறுத்தினார். டாக்டர் . பெக்கரை என் நண்பர் 'வெள்ளை மந்திரவாத மருத்துவர்' என அழைத்தார்.மேலும் , சத்தியங்களை கேட்டார். ஆண்டவர் அவர் உள்ளத்தில் பேசினார். அநேக மந்திரவாதிகள் தங்கள் பொய்யான மாந்த்ரீக பொருட்களை தீயில் இட்டனர். மந்திரவாதத்தை நிறுத்தினர். கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓய்ச்சா கிராம மக்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டனர். இவை எல்லாவற்றையும் கிசொபே அமைதியாக கவனித்துக் கொண்டு வந்தான்.
கிசொபே மிகவும் தளர்ந்து, கண்பார்வை மங்கி வயதானவனாக இருந்தான். ஒரு நாள் மாலையில் தன் குடிசை முன்அமர்ந்து தன்னுடைய வாழ்க்கை பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தான். நான் எவ்வளவு மோசமாக வாழ்ந்திருக்கிறேன் . போதாதற்கு, டாக்டர் பெக்கரின் கடவுளிடம் மனம் திரும்பிவிட்டதாக பொய் கூறியுள்ளேன். என்னை தண்டித்து சாகடித்தால் என்ன செய்வது ? என்ற அச்சத்தோடு இருந்தான். வேதாகமம் கூறுகிறது , 'துன்மார்க்கருக்கு சமாதானம் இல்லை என்று என் தேவன் சொல்லுகிறார் -ஏசாயா 57:21"
அப்பொழுது ஊர் மக்கள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக எங்கோ சென்று கொண்டு இருந்தனர். கிசொபெயின் பழைய நண்பர் ஜிம் பெல் அப்பொழுது காரில் அங்கு வந்தார். கிசொபெவிடம், பக்கத்தில் ஒரு அமெரிக்க தேவ ஊழியர் வந்துள்ளார். நீங்கள் வருகிறீர்களா? என்று அன்போடுக் கேட்டார். ஒரு வேலை இது என் கடைசி வாய்ப்பாக இருக்கலாம் , நான் சீக்கிரத்தில் மரித்து விடுவேன் என்று எண்ணியவனாய் நீங்கள் என்னை காரில் அழைத்து சென்றால் வருவேன் என்றார் கிசொபே.அதற்கென்ன , தாராளமாக வாருங்கள் என அழைத்துச் சென்றார்.
அந்த கூட்டம் ஒரு சபை கட்டடத்தின் முகப்பிலே நடந்தது. கிசொபே ஊர் மக்களுக்கு பயந்து காரில் அமர்ந்தவாரே தேவ ஊழியர் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தான் . ஆண்டவர் கிசொபேயோடு இடைப்பட்டார். முடிவில், உங்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு தேவனுக்கு தங்கள் இருதயத்தை ஒப்புகொடுகிறவர்கள் முன்வாருங்கள். உங்களுக்காக நான் ஜெபிக்கேறேன் என்று அந்த ஊழியர் அழைப்புக் கொடுத்தார். அப்பொழுது , கிசொபே காரை விட்டு இறங்கி , அந்த கூடத்துக்குள் சென்று, ஆண்டவரை ஏற்றுக்கொண்டான். அதனை கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்தனர்.
வயதான கிசொபே உடல் நலக் குறைவினால் ஞாயிறு தோறும் சபைக்கு செல்ல முடியவில்லை. தான் கிறிஸ்தவனாக மாறியதை அநேகருக்கு சொல்ல வேண்டும் என விருப்பம் கொண்டான். ஆகையால், டாக்டர் . பெக்கரிடம், நீங்கள் மருத்துவமனையை கட்டுங்கள், நான் இங்கு சிறிய ஆலயம் கட்டுகிறேன் என்று கூறினான். அதன்படி , ஆலயம் கட்டி அங்கு அநேக மக்கள், மனம் மாறிய மந்திரவாதிகள் வந்து ஆண்டவரை ஆராதித்தனர்.
கிசொபே மேல் இருந்த அந்நிய ஆவிகள் விலகி போனது. இப்பொழுது அந்த ஆப்ரிக்க பகுதி மக்கள் ஜீவனுள்ள ஒரு உண்மையான தேவனை கண்டு கொண்டார்கள்.டாக்டர் .பெக்கர் இவ்வாறு தனது மிஷனரி பணிகளை ஆண்டவரின் துணைக் கொண்டு அந்த பகுதியில் செய்து வந்தார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum