டாக்டர். கிரகாம் ஸ்டுவர்ட் ஸ்டைன்ஸ்
Thu Jan 24, 2013 9:22 am
~ கிறிஸ்துவுக்குள் விதைக்கப்பட்டவர்கள் ~
இன்று டாக்டர். கிரகாம் ஸ்டுவர்ட் ஸ்டைன்ஸ் அவர்களின் நினைவு நாள். அன்னார் 1999 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் நாள் மகன் பிலிப்(9)
மற்றும் தீமொத்தியுடன்(7) உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். இவரது மனைவி
சகோ.க்ளாடி ஸ்டான்லியின் கண் முன்பதாக இந்த கோர சம்பவம் அரங்கற்றப்பட்டது.
ஆனாலும் கிறிஸ்துவின் அடியவர்களான அவர்கள், “அந்த கொடூர கொலைகாரர்களை நான்
மன்னித்து விட்டேன்” என்று வெளியிட்ட அறிக்கை உலக நாடுகள் அனைத்தின்
கவனத்தையும் ஈர்த்தது.
டாக்டர். கிரகாம் ஸ்டுவர்ட் ஸ்டைன்ஸ்,
ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு மிஷனரியாக வந்தவர். இவர்
பழங்குடியின மக்கள் இடையே சேவை ஆற்றியவர். தொழு நோயால் பாதிக்கப்பட்டு
கை-விடப்படவர்களை பராமரிக்கும் சேவையில் முழு மூச்சாய் ஈடுபட்டிருந்தார்.
யாவரும், இரு மகன்களும் ஒரிசா மாநிலத்தில் உள்ள மனோகர்பூர் என்னும் ஊரில்
உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். ‘தாரா சிங்’ எனும் மனிதனின் தலைமையில்
அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது.
கணவன் விட்டு சென்ற பணியினை நானே
தொடருவேன் என்றுரைத்த சகோதரி.கிளாடி பல ஆபத்துகளுக்கு நடுவில்
இந்தியாவிலேயே வாழ்ந்து தொழு-நோயாளிகளுக்கு சேவை புரிந்து வருகிறார். அவரது
சேவையை பாராட்டி இந்திய அரசு 2005 ஆம் ஆண்டு உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’
விருது கொடுத்து கவுரவித்தது.
சகோதரி. கிளாடிக்காகவும் மகள்.ஈஸ்தர்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.
மத்தேயு 5: 11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித
தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால்
பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum