குதிகால் வலியை விரட்ட
Tue Feb 25, 2014 11:16 pm
இன்றைய பரபரப்பான சூழலில் உடல் எடையை கட்டுக்குள் வைத்து பேணிகாப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பினும் அதற்கு தகுந்தாற்போல் உயரத்திற்கு தகுந்த அளவில் எடையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிப்பதன் மூலம் மூட்டுவலி மற்றும் குதிகால் வலி ஆகியவற்றை தவிர்க்கலாம். உடலின் மொத்த எடையையும் தாங்குவது குதிகால் என்பதால் அதற்காக அதிக கவனம் அவசியம்.
பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தை தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகம் உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்கவோ, நிற்கவோ முடியாது. இதையடுத்து குதிகால் மற்றும் இடுப்பு வலி அதிகரிக்கும். முதலில் வலி அதிகரிக்கும்போது எலும்புகளில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவரை அணுகி எக்ஸ்ரே மூலம் கண்டறியலாம். குதிகால் வலி வராமல் தடுக்க இயற்கையான முறையில் பல வைத்தியங்கள் உள்ளன.
[size][color][font]
காலை முதல் இரவு வரை ஓயாமல் நடப்பவர்களுக்கும், வீட்டு வேலைகளை செய்வோருக்கும் இரவில் குதிகால் வலி ஏற்படுவது சகஜமாகிவிட்டது. இதனை தடுக்க இரவில் படுக்கும் முன்பும், காலையில் குளிப்பதற்கு முன்பும் உள்ளங்கால்களுக்கு சுத்தமான எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்யவேண்டியது அவசியம். இதுதவிர மேலும் பல வழிகளும் உள்ளன. சஹசராதி தைலம் 100 மில்லியும், கர்ப்பூராதி தைலம் 100 மில்லியும் கலந்து ஒரு இரும்புக்கரண்டியில் சிறிது எண்ணெயை (10 மில்லி) சூடு செய்ய வேண்டும்.
இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்ய (20 நிமிடங்கள் வரை) வேண்டும். வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் கால் மூழ்குமளவு 5 அல்லது 10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலை துடைக்க வேண்டும். அதன்பிறகு படுக்கச்செல்லவும். காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோல செய்யலாம். கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபயோகிக்கவும். கால்களை தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதை தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்.
திராட்சைப் பழத்தில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. வலி ஏற்படும்போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும். சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும். குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டுவலி குணமாகும். பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.[/font][/color][/size]
உடல் எடையை குறைக்க...
அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வர காரணமாகிறது. இது ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம் ஏற்படுத்தி, கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது. இதை தடுக்க உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். இவை 200 மி.லி அளவில் கிடைக்கும். 3 டீஸ்பூன் மருந்துடன் 12 ஸ்பூன் கொதித்து ஆறிய தண்ணீர் மற்றும் கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
காலையில் மருந்து சாப்பிட்டதும் அரைமணி நேரம் இடதுபக்கமாக சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாக தண்ணீரை குடிக்கவும். உடல் பருமனை குறைக்க இது நல்ல கஷாயம். தயிரை தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். கால் டீஸ்பூன் தேனை சிறிது தண்ணீரில் கலந்து அல்லது திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 டீஸ்பூன் (5 கிராம்) ஆகியவற்றை 80 மி.லி தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறியபிறகு, கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்கு பிறகு உடனே அருந்த வேண்டும். அதன்பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி மிகவும் அவசியம் குதிகால் வலியை போக்க உடல் எடை குறைப்பு அவசியமாகிறது. எனவே காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும். சர்வாங்காசனம், ஹலாசனம் மற்றும் சிரசாசனமும் வலி குறைக்கும். கோடைகால சூடு தணிந்த பிறகு, கொள்ளு தானியத்தை நன்கு கழுவி உலர்த்தி மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
புளித்த மோரை சிறிது சூடாக்கி 70 முதல் 100 கிராம் வரை கொள்ளு மாவை அதில் குழைத்து உடலில் கூடுதல் சதை உள்ள இடங்களில் கீழிருந்து மேலாக சூடு பறக்கத்தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பிறகு சுடு தண்ணீரில் குளிக்கவும். கொள்ளு சதையை உருக்கிவிடும். சோப்புக்கு பதிலாக ‘ஏலாதி சூர்ணம் கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையை குறைக்கவும் முடியும்.
நன்றி: தமிழ் ராக்கர்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum