வெள்ளை போளம்
Sat Sep 14, 2013 7:41 am
வேதநூலில் வெள்ளைப்போளம்பற்றிய அபூர்வமான சில தகவல்களைக் காண்கிறோம்.
இஸ்ரவேல் தம் பிள்ளைகளிடம் எகிப்த்து நாட்டு அதிபதியின் கோபத்தைத் தணிக்க மகா விலையுயர்ந்த பிசின் தைலம். தேன்போன்ற பொருள்களோடு வெள்ளைப் போளமும் கொண்டு செல்லும்படி கூறுகிறான். [ஆதி.43:11]
இதிலிருந்து வெள்ளைபோளம் என்னும் பிசின் தைலத்தை ‘கனிவு’ என்னும் மிருதுவான பண்பிற்கு ஒப்பிடலாம். ஏனெனில் தம் சகோதரர்கள் கொண்டுவந்த வெள்ளைப் போளத்தின் மூலம் யோசேபிற்கு அன்பின் கனிவு கசிந்தது உண்மை.
பாறைரோஜா என்று அழைக்கப்படும் குட்டையான புதர் செடியிலிருந்து எடுக்கப்படும் விலை உயர்ந்த பிசின் தைலமே வெள்ளைபோளம் எனப்படும். இதன் பூக்கள் ரோஜா மலர்களை ஒத்திருக்கும். பாலஸ்தீனத்தின் வறட்சியான பகுதிகளில் காணப்படுகின்றன. வறட்சியிலும் வளமாக வளரும் விநோதச் செடியாகும்.
வளத்தில் மட்டுமல்ல வறுமையிலும் நாம் களிப்புடன், கனிவுடன், வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அரேபியா, கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற வளம் குறைந்த இடங்களிலிருந்து வெள்ளைப்போளம் கிடைக்கிறது.
வறட்சி எங்கேயோ அங்கே வெள்ளைபோளம் கிடைக்கும். அன்பற்ற நிலை எங்கேயோ அங்கு கனிந்த உள்ளத்திலிருந்து அன்பு சுரக்கட்டும்.
வெள்ளைபோளம் அபிஷேக தைலமகவும், துதி தோத்திரங்களுக்கு தூபவர்கப் பொருளாகவும் பயன்படுகின்றன. நாமும் புனிதமான காரியங்களுக்கு மானுட மேம்பாட்டு புரட்சிக்கு நம் தாலந்துகளை பயன்படுத்துவோம்.
கொல்கதா என்னும் இடத்துக்கு இயேசு பெருமானைப் கொண்டுபோய் வெள்ளைப் போளம் கலந்த திராட்சை ரசத்தை குடிக்கக் கொடுத்தார்கள்.
வேதனைகளிலிருந்து விடுபட விருப்பாததால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. [மாற்15:23]
வேதனைகளை குறைக்கவும் வெள்ளைப்போளம் பயன்பட்டிருக்கிறது.
இயேசுவை ஓர் இரவிலே சந்தித்து ஏற்றுக்கொண்ட நிக்கோதேமு என்பார். இயேசுவின் சரீரத்தை பாதுகாக்க வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டு சென்றதாக நற்ச்செய்தி நூலில் படிக்கிறோம். [யோவா19:39]
அனைத்திற்கும் மேலாக வெள்ளைப்போளம் உயிர்நீத்த உடல்களைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் அருமருந்தாகவும் உபயோகமாகிறது. நாறிப்போன பொருள்களிலிருந்து நாற்றம் வராமல் நறுமணம் கமழச் செய்கிறது.
நாமும் நாட்டிற்கும், வீட்டிற்கும், திருச்சபைக்கும், தெருச்சபைக்கும் நறுமணமூட்டும் நற்ப்பொருள்களாக அருமருந்தாக பயன்படுவோம்.
வெள்ளைபோளம்போன்று நாமும் கள்ளமற்று கனிவுடன் வாழ்ந்து காட்டுவோம்.
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum