அரசியல் காமெடிகள் - 3
Thu Sep 05, 2013 10:46 pm
நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களை தங்கம் வாங்க வேண்டாம் என்று சிதம்பரம் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து இரவில் பெட்ரோல் பங்குகளை மூட வீரப்ப மொய்லி ஆலோசனை கூறினார். இதே மாதிரி ஒவ்வொரு இலாக்கா மந்திரிகளும் “யோசனை” கூறினால் எப்படி இருக்கும் என்று கலக்கம் வந்தது.
இதைத் தொடர்ந்து என்னென்ன அறிவிப்புகள் மத்திய “காங்கிரஸ்” அரசால் பிற்காலத்தில் வரலாம் என்று யோசித்த போது, பின்வரும் அறிவிப்புகள் வர பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாக தோன்றுகிறது.
1. மூன்று நாளைக்கு ஒரு முறை குளிப்பதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்கலாம். சோப் செலவுடன், மக்கள் குளிக்கும் நேரமும் மிச்சப்படுத்தப்படும். பல் விளக்குவதற்கு மட்டும் எதிரில் பேசுபவர்கள் நிலை கருதி விலக்கு அளிக்கப்படுகிறது.
2. பாகிஸ்தான், இலங்கை, சீனா, மியான்மர் போன்ற நாடுகள் எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்கின்றன என்று செய்திகளில் வருகிறது. மத்திய அரசின் ராஜ தந்திரம் புரியாமல் அவசரப்பட்டு ஊடகங்கள் எழுதும் செய்தி இது. உண்மையில் இந்த நாடுகளுக்கு நம் இடத்தை கொஞ்ச நாள் குத்தகைக்கு [Lease] விட்டு இருக்கிறோம். இதன் மூலம் கிடைக்கும் பணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவின் எல்லை கோட்டருகே தம் நாடு இல்லையே! என்று வருத்தம் தெரிவித்து இருக்கின்றன.
3. போக்குவரத்து நெரிசல் நேரமான காலை காலை 8-10 மற்றும் மாலை 5-7 போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம் பெருமளவு பெட்ரோல் மிச்சப்படுத்தப்பட்டு தட்டுப்பாடு குறையும்.
4. ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் சாப்பிடும் நேரத்தை, காலை 11 மணி மாலை 6 மணி என்று மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மூன்று வேளை சாப்பிட வேண்டிய அவசியமில்லாமல் மக்களின் செலவு குறைக்கப்படும். இந்த யோசனையை தெரிவித்ததற்காக நோபல் பரிசு கிடைக்கும் என்று உளவுத் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
5. பொதுமக்களுக்கு குறைவான தண்ணீர் தருவதன் மூலம் தண்ணீரின் தேவையை குறைக்கலாம். தண்ணீர் வருவதற்கு பதிலாக குழாயில் காற்று வந்தால், தூங்கப் பயன்படுத்தி மின்சாரத்தை சிக்கனப்படுத்த வேண்டும்.
6. இது வரை பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு 5 ரூபாயில் சாப்பாடு, 2 ரூபாய்க்கு தோசை 50 பைசாக்கு காபி என்று இருப்பதை, சாப்பாடு 2 ருபாய், தோசை 50 காசு, காபி இலவசம் என்று கொடுக்கப்படும். இதன் மூலம் அரசியல்வாதிகள் சாப்பாட்டிற்கு அதிகம் செலவாவதில்லை என்று அறிக்கை விடுவார்கள். இதை கேட்டு கேட்டு மக்கள், “ஓ! நாம் தான் அதிகம் செலவு செய்கிறோம்” என்று உணர்ந்து சாப்பிடாமலே இருந்து விடுவார்கள்.
7. பேருந்தில் செல்லாமல், கட்டுச்சோறு எடுத்துக்கொண்டு நடைப் பயணமாகவே அனைவரும் பயணம் செய்தால், பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டு டீசல் தேவை குறைந்து மத்திய அரசுக்கு ஏற்படும் சிக்கல் தவிர்க்கப்படும். இது மக்களின் உடல்நலத்திற்கும் நல்லது. எனவே மக்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுமானவரை தீபாவளிக்கு ஊருக்கு செல்ல ரயில் பயணச்சீட்டு கிடைக்காதவர்கள் இதையே முயற்சிக்க வேண்டும்.
8. குறைவாக!! விலை இருப்பதால் தானே அனைவரும் பெட்ரோல் போடுகிறார்கள் இதனால், அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்பட்டு விற்பனை குறைக்கப்பட்டு தனியார் எண்ணெய் நிறுவனங்களின் சுமை குறைக்கப்படும்.
9.விலைவாசி உயர்வுக்கு “சிரியா” தான் காரணம் என்பதால், இனி விலை உயர்ந்த காய்கறியான வெங்காயத்தை பயன்படுத்தாமலே மக்கள் சமைக்க வேண்டும். இனி வெங்காயம் வேண்டும் என்றால் வெங்காயம் படத்தை வரைந்து அதை பார்த்துக் கொண்டே சாப்பிட வேண்டும்.
10. கடுமையான நிதிச் சுமை ஏற்பட கடந்த நிதி அமைச்சரே காரணம் என்று “எங்கள்” காங் அமைச்சரே கூறியதால், இதற்காக 1000 கோடியில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, எதனால் இந்த நிதிச் சுமை ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்து, மக்களின் சிரமம் குறைக்கப்படும். இதன் மூலம் மக்கள் எல்லா வளமும் நலனும் பெற்று சந்தோசமாக இருக்க முடியும்.
11. கடந்த 9 ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல அதிகளவில் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் அனுமதித்ததே காரணம் என்பதை இந்நேரம் அனைவரும் உணர்ந்து இருப்பீர்கள். எனவே இந்தியாவையே தனியாரிடம் கொடுத்து விட்டு, அதற்கு உலக மக்கள் மீது கருணை கொண்டுள்ள அமெரிக்காவை பொறுப்பாளராக நியமித்து விட்டால் என்ன? என்று காங் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
12. கடைசியாக, வெயிலில் அலைந்து மக்கள் ஜீஸ், தண்ணீர், தர்பூசணி, AC, மின் விசிறி என்று ஏகப்பட்ட செலவு செய்வதை தவிர்க்கும் பொருட்டு அனைவருக்கும் இலவசமாக ஒரு துண்டு வழங்கப்படும். அனைவரும் தலையில் துண்டை போட்டுக்கொண்டு வெளியே நடமாடும் படி மத்திய அரசு கேட்டுக்கொள்கிறது.
நன்றி: --கிரி Blog

Re: அரசியல் காமெடிகள் - 3
Fri Sep 13, 2013 2:16 pm
கடலில் மீன் பிடித்தால் மீன்கள் தான் குறையும்,
ஆனால் நம் தமிழகத்தில் மட்டுமே மீனவர்கள் குறைவார்கள்..
- கார்டூனிஸ்ட் பாலா
Re: அரசியல் காமெடிகள் - 3
Fri Sep 13, 2013 3:03 pm
சோனியா மன்மோகன்சிங் சிதம்பரம் மூவரும் விமானத்தில் செல்லும்போது
சோனியா ஒரு நூறு ரூபாயை கிழே போட்டு நான் ஒரு ஏழைஇந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்
அடுத்து மன்மோகன் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கிழே போட்டு நான் இரண்டுஏழைஇந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்
அடுத்து நம்ப சித்து நூறு ஒரு ருபாய் காசுகளை கிழே போட்டு நான் நூறு
ஏழைஇந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்
அபோது விமான ஒட்டி சொன்னார் இப்போ உங்க மூவரையும் கிழே போட்டு 125 கோடி இந்தியர்களுக்கு நன்மை செய்கிறேன் பாருங்கள் என்றார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum