Vegetable Burger உங்கள் வீட்டிலேயே செய்ய...ஈசியான வழி!
Sat Aug 31, 2013 9:05 am
வெஜிடபள் பர்கர் ,ஹம்பர்கர் போன்றதாகும்.இதில் அசைவம் எதுவும் கலந்திருக்காது.இது லண்டன் நகரை பிறப்பிடமாக கொண்டது. டிக்கா செய்ய: 1. உருளைக்கிழங்கு - 4 2. கேரட் துருவல் - 1/2 கப் 3. பட்டாணி - 1 கப் 4. ப்ரொக்கலி / காலிஃப்ளவர் - சிறிது 5. உப்பு 6. பச்சை மிளகாய் - சிறிது 7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி 8. அம்சூர் பொடி - சிறிது 9. ப்ரெட் க்ரம்ப்ஸ் - 2 மேஜைக்கரண்டி + தேவைக்கு 10. கார்ன் மாவு - 2 மேஜைக்கரண்டி 11. கொத்தமல்லி இலை - சிறிது 12. எண்ணெய் - தேவைக்கு பர்கர் செய்ய: 13. பர்கர் பன் - 4 14. மயோனைஸ் / க்ரீம் சீஸ் / சீஸ் ஷீட் - தேவைக்கு 15. சாலட் லீஃப் - தேவைக்கு 16. தக்காளி ஸ்லைஸ் - தேவைக்கு 17. வெள்ளரி ஸ்லைஸ் - தேவைக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசிக்கவும். இத்துடன் வேக வைத்த பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், வேக வைத்த ப்ரொக்கலி எல்லாம் கலந்து பிரட்டவும். பின் தேவையான உப்பு, தூள் வகை எல்லாம் சேர்த்து மாவை டிக்கா செய்யும் பதத்துக்கு தயார் செய்யவும். வாயகன்ற தவாவில் 1/2 கப் எண்ணெய் விட்டு காய விடவும். மாவை உருண்டைகளாக எடுத்து சற்று தடியாக தட்டி ப்ரெட் க்ரம்ஸில் ஒரு முறை பிரட்டி அழுத்தி விட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.Deepfry செய்ய தேவை இல்லை இவற்றை தயார் செய்து கொண்டு பின் பர்கர் பன்னை இரண்டாக வெட்டவும். முதலில் மயோனைஸ் தடவிக்கொண்டு அதன் மேல் சாலட் லீஃப் மற்றும் சிறிது தக்காளி ஸ்லைஸ் வைக்கவும். அதன் மேல் டிக்காவை வைத்து அதன் மேல் மீண்டும் வெள்ளரி ஸ்லைஸ் வைக்கவும். விரும்பினால் மீண்டும் ஒரு லேயர் சீஸ் / மயொனைஸ் / சீஸ் ஷீட் / ஹும்மூஸ் வைக்கலாம். சுவையான வெஜிடபிள் பர்கர் தயார். Note: விரும்பினால் உருளை கலவை தயார் செய்து விட்டு முட்டையை அடித்து அதில் முக்கி எடுத்து பின் ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டலாம். சுத்த சைவம் வேண்டுமெனில் மைதாவை நீரில் கலந்து வைத்து அதில் முக்கி எடுத்து ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டலாம். கீரை வகைகளூம் சேர்த்து பிசைந்து செய்யலாம். அசைவ வகை பிடிக்குமானால் டின்னில் உள்ள டூனா மீன்களை கூட கலந்து டிக்கா செய்யலாம். அல்லது வேக வைத்து உதிர்த்த கறி வகைகள் பயன்படுத்தலாம். பர்கர் பன் அப்படியே பயன்படுத்தலாம். டோஸ்ட் செய்ய விரும்பினால் சிறிது வெண்ணெய் தடவி உள் பக்கம் மட்டும் தவாவில் வைத்து டோஸ்ட் செய்யவும். |
நன்றி: லைப் ஸ்டைல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum