உங்கள் கணினியில் 3D Animation செய்ய எளிமையான & இலவச மென்பொருள்
Thu Aug 28, 2014 11:34 pm
3D படங்கள் இன்று நேற்றுத் தோன்றியதல்ல.. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே 3D படங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
முப்பரிமாண படிமம் (3D) என்பது படிமத்தில் உயரம், அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் முடிகிற ஒரு ஒழுங்கமைந்த தொழில்நுட்பமாகும். அதாவது மூன்று பரிமாணங்களில் காட்சித் தகவல்களை பதிய முடியும்.
அன்றைய காலத்தில் 3D படங்கள் உருவாக்க பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஆனால் தற்பொழுது நவீனமயனமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி சாதாரணமானவர்கள் கூட முப்பரிமாணப் படங்களை உருவாக்க முடியும்.
அதற்காக பயன்படும் ஒரு அடிப்படை மென்பொருள் Blender. இது ஒரு இலவச சுதந்திர மென்பொருளாகும். அனைவரும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருள் Microsoft windows, Mac OS, Linux, Solaris, NetBSD, IRIX, OpenBSD, FreeBSD என்பன போன்ற அனைத்து வகையான இயங்குதளங்களிலும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வகையான கணினி என்றாலும் இம்மென்பொருளை எளிதாக பயன்படுத்த முடியும்.
கணினியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல்வேறு மென் பொருட்கள் உள்ளது. அம்மென்பொருட்கள் அனைத்தும் கட்டண மென்பொருள்கள். விலையும் அதிகம். ஆனால் Blender மென்பொருள் முற்றிலும் இலவச சுதந்திர மென்பொருளாகும்.
Blender மென்பொருளின் பயன்கள் (Uses of Blender 3D making Software):
Blender மென் பொருள் 3D படங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
Macromedia Flash, Adobe photoshop போன்ற Graphics மென்பொருட்களில் ஏற்படுத்தக்கூடிய Photo Effects மற்றும் Text Effects களை உருவாக்க பயன்படுகிறது.
கட்டிடக் கலைக்குப் பயன்படும் (Auto cad), 3டி மேக்ஸ் (3d max) ரைவட் (rivet) போன்ற மென்பொருளின் தோற்றத்தை பெற்றுள்ளது சிறப்பு. அதில் செய்யும் பணிமுறைகளைப் போன்ற இந்த மென்பொருளிலும் இருப்பதால் இம்மென்பொருள்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எளிதானதாக இருக்கும்.
இது விண்டோஸ் 32bit, 64bit , Ox , Linux போன்ற அனைத்து இயங்கு தளத்திலும் இயங்குமாகையால் எந்த வகை கணினியை பயன்படுத்தினாலும் அதில் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.
40 MB கொள்ளவே கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவுவதும் எளிதானதுதான்.3D படங்கள் இன்று நேற்றுத் தோன்றியதல்ல.. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே 3D படங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
முப்பரிமாண படிமம் (3D) என்பது படிமத்தில் உயரம், அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் முடிகிற ஒரு ஒழுங்கமைந்த தொழில்நுட்பமாகும். அதாவது மூன்று பரிமாணங்களில் காட்சித் தகவல்களை பதிய முடியும்.
இந்த மென்பொருளை download செய்ய இந்த link -ற்கு செல்லவும்
http://www.blender.org/download
Permissions in this forum:
You cannot reply to topics in this forum