சிக்கன் பற்றிய சீரீயஸ் ரிப்போர்ட்!
Wed Aug 28, 2013 8:11 am
காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல் வராம உன்னிக்கிருஷ்ணன் கொரலா வரும்? என்பது ரன் படத்தில் விவேக் நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி, அதே போன்ற ஆனால் உண்மையான அதிர்ச்சியான தகவல்கள் தான் இது, நீங்கள் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.
அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆன்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை,
அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங்- அடுத்த முறை ஒழுங்கா கட்டிடு என்று.
1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். “முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு”,
2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பண்ணைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப் பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம்’
ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன.
இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் செலவு என கூட்டிப் பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும்.
இந்நிலையில் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் ஊருக்கு போய் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மண் சட்டி சுமக்கவேண்டியதுதான், இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது, அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கொயம்பேட்டில் கழிவுகளுக்கும் பஞ்சமில்லை, அதைக் கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது)
அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித் துண்டங்களில் சொறுகப்படும்.
குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்னவாக இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)(சென்னையில் இது இருப்பது போல் இது வரை தெரியவில்லை)
அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழ கொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்து விடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக் கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள்.
இன்னும் பல எழுத முடியும்.இதை மட்டும் படிச்சிடுங்க!
ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.
இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது :
உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.
பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.
கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.
சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்
உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது.
கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.
எடுத்துக்காட்டாக சூடான் ‘டை’ யால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்” என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?
கேன்சர் ஆபத்து!
இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: “சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது’ என்று எச்சரிக்கிறார்.
நன்றி -செந்தமிழ் நாடெனும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum