இயேசுவிடம் கனம்பெற்ற பெண்!
Tue Aug 27, 2013 9:09 pm
என்னை கனம் பண்ணுகிறவர்களை கனம் பண்ணுவேன் என்று சொன்ன இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்உலகத்தில் அனை வருமே கனத்தைவிரும்புவார்கள். தேவனும் அவருடைய பிள்ளைகளாகிய நாம் இந்த உலகத்தில் கனமானவாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார். வேதத்தில் எஸ்தர் சரித்திரபுத்தகத்தில் ராஜா ஒரு மனிதனை கனம் பண்ண விரும் பினால் எப்படியெல்லாம் கனம்பண்ணுவார் என்று அழகாக கூறப்பட்டிருக்கிறது.
ராஜா உடுத்தி கொள்ளுகிற ராஜ வஸ்திரம், ராஜா ஏறுகிற குதிரை, சிரசிலே ராஜமுடிகொடுக்கப்பட வேண்டம். ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவன், ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்த பின், அவனை குதிரை யின் மேல் ஏற்றி,நகர வீதிகளில் உலாவும்படி செய்து, ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்குஇப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாக கூற வேண்டும் (எஸ்தர் 6:7--. உலகபிரகாரமான ராஜாவே ஒரு மனிதனை இவ் வாறெல்லாம்கனப்படுத்துவாறென்றால், உலகத்தையே சிருஷ்டித்து சிங்கா சனத்தில் வீற்றிருக்கும்இயேசு கிறிஸ்துவின் கனம் எவ்வளவு பெரிதாக இருக்கும். அந்த மகிமையான கனத்தைஎவ்வாறு பெற்றுக்கொள்வது என்று, வேதத்தி லிருந்து கனத்தை இயேசுவிடமிருந்துபெற்றுக் கொண்ட ஒரு ஸ்திரீயிடம் இருந்து பார்ப்போம்.
குஷ்டரோகியாயிருந்த சீமோன் சுகமடைந்த பின்பு தன் வீட்டில் விருந்து பண்ணினான்.இயேசுவும் சீஷர்களும் அதில் பங்கு பெற்றார்கள். அப்பொழுது பாவியாகிய ஒரு ஸ்திரிஇயேசுவின் அருகே வந்து நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைகல் பரணியைகொண்டுவந்து, அதை உடைத்து, அந்த தைலத்தை அவர் தலையின் மேல் ஊற்றினாள்.இதை இயேசு நற்கிரியை செய்தாள் என்று சொல்லி அவளை கனப்படுத்தினார்.இயேசுவை கனப்படுத்திய அந்த ஸ்திரீயின் நற்கிரியைகள் என்னென்ன? கீழே பார்ப்போம்.
நறுமணம் வீசிய நற்கிரியை:
நளதம் என்னும் உத்தமமான தைலம் (மாற்கு 14-:3). அந்த உத்தமமான தைலம்,உத்தமமான நற்கிரியையை வெளிப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டு காலத்தில்சுகந்தவாசனையாக தூபங்களை தேவனுக்கு முன்பாக செலுத்து வார்கள். ஆனால் புதியஏற்பாட்டு காலத்தில் தேவன் அதை சுகந்த வாசனையாக முகருவதில்லை. நம்முடையவாழ்க்கையில் இருந்து வீசும் நற்கிரியையாகிய நறு மணத்தையே விரும்புகிறார்.நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் தேவனுக்கு முன்பாக சுகந்த வாசனையாய்எழும்புகிறது. ஒருவர் மீது நறுமணம் எழும்புகிறதா? இல்லை நாற்றமெடுக்கிறதா? என்றுஅருகில் இருப்பவர்களுக்குதான் தெரியும். எனவே முதலாவது உங்கள் நற்கிரியையாகியநறுமணம் உங்கள் குடும்பத்தில் வீச வேண்டும். இரண்டாவதாக உங்கள் தெருக்களில் வீசவேண்டும். மூன்றாவதாக உங்கள் சபைகளில் வீச வேண்டும். சில பேர் சபையில்நறுமணமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் குடும்பத்திலும், தெருக்களிலும் அவர்களைபற்றிய சாட்சியோ தாங்கமுடியாத நாற்றமாக இருக்கும்.
கிறிஸ்துவுக்குள் எப்பொழும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி எல்லா இடங்களிலேயும்எங்களை கொண்டு அவரை அறிகிற வாசனையை வெளிப் படுத்துகிற தேவனுக்குஸ்தோத்திரம் (2கொரி. 2-:14) ஆம் சகோதரிகளே! நாம் எல்லா இடங்களிலேயும் அவரைஅறிந்திருக்கிற வாசனையை வெளிப்படுத்த வேண்டும்.
ஒரு நாள் ட்ரெயின் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.அப்போது ஒரு நகை அணியாத கிறிஸ்தவ சகோதரி, பொய் சொல்லி வரிசையில்நிற்காமல் குறுக்கு வழியில் டிக்கட்டை எடுத்து சென்றார்கள். என்னோடு வரிசையில்நின்ற அனைவரும் நீயெல்லாம் ஒரு கிறிஸ்தவளா? என்று திட்டினார்கள். ஏனென்றால்உலக மக்கள் கிறிஸ்தவர்கள் என்றாலே ஒரு உத்தம குணமான வாசனையைஎதிர்பார்க்கிறார்கள். எனவே தேவன் அருவருக்கிற பாவமான வாழ்க்கை மாறவேண்டும்.சண்டை, பொறாமை, புறங்கூறுதல் போன்ற பழைய வாழ்க்கையை மறக்க வேண்டும்.தேவன் சேற்றிலிருந்து தூக்கி நாற்ற மெல்லாம் போக்கிவிட்டார் என்ற உறுதியோடுநற்கிரியையாகிய தூபங்களை அவருக்கு முன்பாக எப்போதும் செலுத்தி கொண்டிருக்கவேண்டும்.
எதிர்ப்பை மேற்கொண்ட நற்கிரியை:
அந்த பாவியான ஸ்திரி விலையேறப் பெற்ற தைலத்தை இயேசுவின் பாதத்தில்ஊற்றுவதை கண்ட சöஷர்கள், இவள் பாவியான பெண் என்றும், வீணான செலவுசெய்கிறாள் என்றும் முறுமுறுத்து எதிர்ப்பை தெரிவித்தார்கள் (மாற்கு 14:-4). ஆனால்அவளோ நற்கிரியையை நிறுத்தவில்லை. இப்படித்தான் சகோதரிகளே, நம்வாழ்க்கையிலும் கிறிஸ்துவுக்காக நற்கிரியைகளை செய்ய உறுதியாய் நிற்கும் போது,நம்மை உலகத்தார் பைத்தியக்காரர் போல நினைப் பார்கள். நகைப்பார்கள். நாம்கிறிஸ்துவுக்காக செய்யும் சில காரியம் உலக மக்களிம் பார்வைக்கு பைத்தியமாக தான்தெரியும். நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள். (1கொரி. 4-:10) அன்னாள்சாமுவேலை ஆலயத்தில் கொண்டு போய் விடும் போது அவளின் உறவினர்க்கும் அக்கம்பக்கம் இருந்தவர்களுக் கும் அது பைத்தியமாகத்தான் இருந்திருக்கும். ஆபிரகாம்பிள்ளையை பலி கொடுக்கும் போது, அவ்வாறகத்தான் இருந்திருக்கும். ஆனால் அதன்பின் வரும் கனமான ஆசீர்வாதம் மற்றவர்களை வியக்க வைக்கும். அந்த ஸ்திரியைபார்த்து வீணாய் ஊற்றுகிறாள், வீணாய் ஊற்றுகிறாள் என்று கத்தினார்கள். ஆனால் அதைஅவள் சிறிதளவும் காதில் வாங்கவில்லை. தொடர்ந்து செய்தாள். அந்த நற்கிரியைஇயேசுவை கவர்ந்தது. இயேசு அவளை கனப்படுத்தினார். எனவே தொடர்ந்து எதிர்ப்பைமீறி நற்கிரியைகளை செய்யுங்கள்; தேவன் உங்களை கனப்படுத்துவார்.
முழுபெலத்தோடு செய்த நற்கிரியை
இயேசுவின் தலையில் ஊற்றிய அந்த தைலத்தின் விலை மதிப்பு 300 பணமாக ஆகஇருக்கலாம் என்று வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். அக்காலத் தில் ஒரு நாளின் கூலி 1பணமாக இருந்ததாம். எனவே அவளின் 1 வருட சம் பாத்தியத்தின் மதிப்பு தான் அந்ததைலத்தின் மதிப்பாக இருந்திருக்கும் என்று ஆராய்ந்திருக்கிறார்கள். ஆம் சகோதரிகளே!அவள் சிறந்ததை முழுவதுமாக இயேசப்பாவின் சிரசில் ஊற்றினாள். இந்த நற்கிரியைதேவனை கவர்ந்தது, இப்படித்தான் நாமும் இயேசப்பாக்காக எதை கொடுத்தாலும் அதைசிறந்த தாகவும், முழுவதுமாகவும் கொடுக்க வேண்டும்.
ஒரு புதிய நாளில் அதிகாலை நேரம் தான் சிறந்தது. அந்த சிறந்த நேரத்தை தான் நாம்தேவனுக்கு கொடுக்க வேண்டும். மற்ற நேரங்களில் ஜெபிப் பது தவறு அல்ல. ஆனால்சிறப்பான அந்த நேரத்தை கொடுப்பீர்களென்றால் சிறந்ததை தேவனிடத்திலிருந்துபெற்றுக் கொள்வீர்கள். சபையில் தேவனை முழுபெலத்தோடு ஆராதனை செய்யவேண்டும். எப்பொழுதும் ஆராதித்து முடித்தவுடன் உங்கள் கை, கால், வயிறு, தொண்டைபோன்ற இடங்களில் வலி இருக்க வேண்டும். முழுபெலத்தோடு ஆராதித்தீர்களென்றால்நிச்சயமாக வலியை உணருவீர்கள்.
எலியா சென்ற அந்த ஏழை விதவையினிடத்தில் கொஞ்சம் மாவும் கொஞ்சம்எண்ணெயும் தான் இருந்தது. அவளோ முழுவதையும் கொடுத்தாள். தேவன்குறைவில்லாமல் ஆசீர்வதித்தார். தேவனுக்கு கொடுப்பதை மனதார, முழுமையாககொடுக்க வேண்டும். எனவே சகோதரிகளே! அந்த ஸ்திரியை போல தேவனுக்குஉங்களிடம் இருக்கும் சிறந்ததை முழுவதுமாக மனதாரக் கொடுத்து உங்கள்நற்கிரியையினால் அவரை கனப்படுத்துங்கள்.
அன்பை வெளிப்படுத்திய நற்கிரியை:
லூக்கா சுவிசேஷத்தில் (7:38) அவள் கண்ணீரினால் இயேசுவின் பாதத் தை நனைத்து,விலையுயர்ந்த தைலத்தை ஊற்றினாள் என்று எழுதப்பட்டுள்ளது. இதைப் பார்த்து தான்தேவன் சொல்லுகிறார். இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே என்று. அந்த ஸ்திரி தன்பாவங்களுக்கு பிராயச்சித்தமாக, இவ்வளவு விலை யுயர்ந்த தைலத்தை ஊற்றினால்இயேசப்பா மன்னித்து வடுவார் என்று நினைத்து இதை செய்யவில்லை. மாறாக, தேவன்மீதுள்ள அன்பின் நிமித்தம் இதை செய்தாள். தேவன் ஒருவரே உள்ளந்திரியங்களைஆராய்ந்து அறிகிறவர். அந்த ஸ்திரியின் அன்பான இருதயத்தை தேவன் அறிந்திருந்தார்.எனவே சகோதரி களே! நாம் நம் தேவைகளுக்காக மட்டும் தேவ சமூகத்தில் கண்ணீர்வடிக்க கூடாது. அவர் நமக்காக மரித்தார். நம்மை இரட்சித்திருக்கிறார், இன்னும் நம்வாழ்க்கையில் அவர் செய்த ஏராளமான நன்மைகளை நினைத்து, நினைத்து அவர்பாதத்தை கண்ணீரினால் நனைக்க வேண்டும்.
நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு காரியமும் தேவன் மீதுள்ளஅன்பின் அடிப்படையில் தான் செய்ய வேண்டும். பாஸ்டருக்காகவோ, பாவ மன்னõப்பைபெற்றுக்கொள்ளவோ, ஆசீர்வாதத்திற்காகவோ, சுகத்திற் காகவோ,சமாதானத்திற்காகவோ மட்டும் செய்யக் கூடாது. நீங்கள் எதை செய்தாலும் அதைமனுஷர் பார்வைக்கு செய்யாமல் தேவனுக்கென்றே செய் யுங்கள். நீங்கள் ஆவிக்குரியவாழ்க்கையிலும், உலக வாழ்க்கையிலும் தேவ னுக்காக செய்யும் ஒவ்வொருகாரியத்தை பார்த்தும் தேவன் சொல்ல வேண்டும்; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளேஎன்று.
முடிவுரை
இந்த சுவிஷேம் உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுமோ அங்கெல்லாம் இவளைநினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும். (மாற்கு 14-:9)
ஆரம்பத்தில் பாவியாகிய ஸ்திரி என்று சொல்லப்பட்ட இவள், முடிவில் எவ்வளவாய்கனப்படுத்தபடுகிறாள். எப்படி நடந்தது? இயேசப்பாவை கனப் படுத்திய அவளின்நற்கிரியையே இதற்கு காரணம். தேவன் உங்கள் ஒவ் வொருவரையும் கனப்படுத்தவேண்டும் என்று விரும்பி தான் இந்த செய்தியை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.எனவே இந்த செய்திக்கு உங்களை ஒப்புகொடுத்து மாற்ற வேண்டிய சில காரியங்களைஆவியானவர் உதவியுடன் மாற்றி உங்கள் நற்கிரியைகளினால் தேவனைகனப்படுத்துங்கள். எந்த மனி தனையும் மேன்மைபடுத்த அவரால் முடியும். அவராலேமட்டும் தான் முடியும். கர்த்தர் தாமே உங்களையும், உங்கள் குடும்பத்தையும் கனப்படுத்திஆசீர்வதிப்பாராக. ஆமென்.
நன்றி: ஜீசஸ் லவ்ஸ் இண்டியா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum