மோசேயின் கட்டளைகளை மீறியவர் முஹம்மது
Thu Aug 15, 2013 9:36 am
ரமளான் நாள் 22 - மோசேயின் கட்டளைகளை மோசமாக மீறியவர் முஹம்மது
அன்புள்ள தம்பிக்கு,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
நீ நாள் தோறும் மனமாற்றமடைந்து வருவதை நீ எனக்கு அனுப்பிவருகிற மெயில்களிலிருந்து கண்டுவருகிறேன். உன் உள்ளத்திலிருந்து வரும் உண்மையான வார்த்தைகளை காணும்போது நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். நீ தற்பொழுது இருக்கும் நாட்டில் நியாயப்பிரமாண சட்டங்கள் ஷரியா எனும் பேரில் கடைப்பிடிக்க படுவதாக கூறியிருந்தாய். ஆம் நானும் அந்த செய்தியை கேள்விபட்டிருக்கிறேன். நீ பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணம் பற்றி கேட்டபடியினால், பத்து கட்டளைகளில் ஒரு கட்டளையைப் பற்றி உன்னோடு நான் பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ளயாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (உபாகமம் 5:21)
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக, தம்பி இந்த கட்டளையோடு முஹம்மதுவின் வாழ்க்கையை ஒப்பிட்டுபார். தனது வளர்ப்பு மகன் ஜையத்தின் மனைவியை இச்சித்த சம்பவத்தை நீ அறிந்திருக்கிறாய். இச்சித்தது மாத்திரமா மனைவியாக கொண்டதும் உனக்குத் தெரியும். இதனை உனது இஸ்லாமிய நண்பர்கள் "விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த நபிகளார்" என்று மிகவும் பெருமையாக பேசுவார்கள். இது நியாயப்பிரமானத்தை மீறிய செயலாகும் என்று சொன்னால், அவர்கள் திருப்பி கேற்பார்கள் "உங்கள் பைபிளில் சில சம்பவங்கள் இதே போல இருக்கின்றதே காணவில்லையா" என்று. உனது நண்பர்களுக்கு ஒரு விசயம் புரிவதேயில்லை.
பைபிளில் நோவா, யாக்கோபு, தாவீது போன்றோர் செய்த பாவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இறைவன் அவற்றை நியாயப்படுத்தவில்லை. நியாயப்பிரமானம் கொடுக்கப்பட முன் செய்தவர்களின் தவறுகள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்ட பின் செய்தவர்களின் தவறுகளுக்காக பெற்ற தண்டனைகளும் பைபிளில் காணலாம்.
ஆனால் முஹம்மது செய்த பாவங்களை நியாயப்படுத்தி வஹி இறங்குவது தான் வேடிக்கையாகவுள்ளது.
. . . .நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணந்து கொள்ள விரும்பினால் (அனுமதித்துள்ளோம்). உமக்கு சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும் . . . . (குர்ஆன் 33:50)
இந்த வசனத்தை நீ அரபியில் பல முறை ஓதியிருப்பாய். ஒரு முறையாகிலும் சிந்தித்திருப்பாயா? குர்ஆனில் ஒரு சொல்லுக்கு 10 நன்மையெனும் அடிப்படையில் பொருள் புரியாமல் மந்திரம் ஓதுவது போன்று ஓதுவதையே பாமர மக்களுக்கு இஸ்லாமிய அறிஞர்களால் போதிக்கப்பட்டு வருவதை நான் காண்கிறேன். உனக்கும் அப்படித் தான் போதித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் குர்ஆனில் அடிக்கடி சிந்திக்குமாறு சொல்கிறது. அதனாலோ என்னவோ இஸ்லாமியர் சிந்திப்பதேயில்லை. இஸ்லாமியர்கள் குர்-ஆன் வசனங்களை சிந்திக்கவேண்டுமென்றால், முதலாவது அவர்களுக்கு வசனம் புரியவேண்டுமே, அவர்கள் அரபியில் படித்தால் எப்படி புரியும்?
இந்த வசனத்தை சிந்தித்துபார். இது முஹம்மதுவுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு சிறப்புச் சலுகை! அதாவது எந்த ஒரு முஸ்லிம் பெண்ணையும் முஹமது விரும்பினால் அவளை திருமணம் செய்ய முஹம்மதுவுக்கு அல்லாஹ் சிறப்புச் சலுகை கொடுக்கிறான்.
நியாயப்பிரமானம் போதிக்கிறது பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக என்று. ஆனால் குர்ஆன் முஹம்மதுவுக்கு தனது மகனுடைய மனைவியையும் இச்சித்ததால் சொந்தமாக்கிகொள்ள வரம் கொடுக்கிறது. எது இறைவேதமாக இருக்க தகுதியுள்ளது என்று சிந்தித்தால் உண்மை புரியும்.
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். ( குர்-ஆன் 33:37)
தம்பி, எமது ஊரில் அநேக இஸ்லாமியர் பிள்ளைகளை தத்தெடுக்திருக்கின்றனர். அவர்களில் யாராவது இது எனது பிள்ளையில்லையென்று சொல்வதை நீ செவிமடுத்திருக்கிறாயா? கடும் கோபத்தில் சொந்த பிள்ளைகளை கூட "நீ என் பிள்ளையில்லையென்று" சொல்வார்கள். ஆனால் பொதுவாக முழு உலகிலும் வளர்ப்பு மகனையும் மகன் என்று தான் சொல்வார்கள். அந்த காட்டுமிறாண்டி அரபியரும் அப்படிதான் அழைத்தார்கள். ஆனால் முஹம்மது ஜைது மனைவியின் அழகை கண்ட நேரத்திலிருந்துதான் வளர்ப்பு மகன் "மகன் அல்ல" என்ற கட்டளையை அல்லாஹ் இறக்குகிறான். சிந்திப்பவர்களுக்கு இதில் படிப்பினையுண்டு.
ஜைதின் மனைவியை முஹம்மது திருமணம் செய்ததை "விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு வாழ்வுகொடுத்த மாநபி" என்று வர்ணிப்பார்கள். ஆனால் முஹம்மதுவின் மரணத்தின் பிற்பாடு அவருடைய அனைத்து மனைவிகளும் விதவைகள் ஆகிவிட்டார்கள். தனது மரணத்தின் பின்னும் அவர்களை யாரும் திருமணம் செய்ய கூடாது என்பதற்காக அவர்களை முஃமீன்களின் தாய்மார்களாக ஆக்கிவிட்டார் முஹம்மது. அப்படியானால் முஃமீன்களின் தகப்பன் யாராக இருக்கவேண்டும்? முஹம்மது தான் தகப்பனாக இருக்கவேண்டும் என்று நீ நினைப்பாய். ஆனால் குர்ஆன் சொல்கிறது.
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (33:40)
பார்த்தாயா இஸ்லாமிய நியாயத்தை? தான் மனைவிகளை தனக்கு பின்பு யாரும் திருமணம் செய்து விட கூடாது என்பதற்காக தனது மனைவிமாரை எல்லா முஸ்லீம்களுக்கும் தாய் ஆக்குகிறார். தனது மகனின் மனைவியை திருமணம் செய்துக் கொள்ளவேண்டுமென்பதற்காக தான் யாருக்கும் தகப்பன் இல்லையென்று வஹி வருகிறது. இங்குள்ள முரண்களும் தில்லுமுல்லுகளும் உனக்கு நன்றாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
வெளியில் இருக்கிற கவர்ச்சியை கண்டு நீ இஸ்லாத்துக்குள் நுழைந்துவிட்டாய். இப்பொழுதுதான் நரக வாயிலிலிருந்துகொண்டு, மிகவும் அலங்காரங்கள் நிறைந்த கதவுகளை வைத்து வருகிறவர்களை கவரும் வகையில் காரியங்களை காண்பித்து, அந்த கதவுகளுக்குள் நுழைந்த பிறகுதான் தெரியும் எரி நரகத்துக்குள் வந்துள்ளோம் என்று. இப்பொழுது இதுதான் உனது நிலையாகவுள்ளது எனதருமை தம்பியே!
உன்னை இந்த நரகத்திலிருந்து மீட்டுகொள்ளதான் எனது இந்த பிரயாசம். பரலோகக் கதவு உனக்காக இன்னும் திறந்துதான் இருக்கிறது. எனது கர்த்தராகிய இயேசு சொன்ன இந்த வார்த்தைகளோடு இந்த கடிதத்தை முடிவு செய்கிறேன். நாளை சந்திப்போம்.
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்குஉரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச்சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன்இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28)
இப்படிக்கு,
உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum