திருமணத்திற்கு முன் காதலிப்பது சரியா?தவறா?
Thu Aug 15, 2013 9:15 am
திருமணத்திற்கு முன் காதலிப்பது சரியா?தவறா? வேதம் என்ன கூறுகிறது???
Jam 3:15 இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும்,பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.
1Jo 2:16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
Mat 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
இச்சையோடு பார்த்தான் தானே தவறு,நாங்கள் இச்சையோடு பார்க்கவில்லை,உயிருக்கு உயிராக காதலிக்கிறோம், கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வோம் என்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மட்டுமல்ல இப்போதுள்ள பாஸ்டர்கள் கூட இப்படித் தான் கூறுகிறார்கள், ஆனால் திருமணம் முடிவதற்கு முன்பு வரை அது இச்சையே... திருமணம் முடியும் முன் ஆண்டவருடைய வருகை இருந்தால் அவர்கள் போவது நிச்சயம் நரகமே என்பதில் சந்தேகமில்லை. எப்படி என்கிறீர்களா? நாம் எல்லாருக்கும் தெரிந்த பத்து கட்டளைகளில் ஒன்று
Exo 20:17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
இதில் பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக என்று தானே போடப்பட்டுள்ளது, நாங்கள் கல்யாணம் ஆன பெண்ணை காதலிக்கவில்லையே என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் கர்த்தர் சொல்லுகிறார்,
Jer 1:5 நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்;
Mat 6:8 உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
ஆதலால் உங்களுக்கு என்ன தேவை என்பதையும், எது வேண்டும் எது வேண்டாம் என்பதையும், யார் உங்களுக்கு மனைவியாக வேண்டும், புருஷனாக வேண்டும் என்பதையும் அவர் அறிவார், இவனுக்கு இவள் என்றும், இவளுக்கு இவன் என்றும் ஆண்டவர் முன்னமே குறித்து வைத்து விட்டார். ஆதலால் நீங்கள் காதலிப்பது பிறனுடைய மனைவியாகவோ, அல்லது கணவராகவோ கூட இருக்கலாம், இதையெல்லாம் அஞ்ஞானிகள் தேடித்திரிகிறார்கள் அதாவது உலகத்தார். ஆனால் கர்த்தர் உங்களைப் பார்த்து சொல்கிறார்,
Joh 17:16 நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும்(நீங்களும்) உலகத்தாரல்ல.
இதனால் தான் காதல் என்னும் மாய வலையைக் கொண்டு வரும் சாத்தானை ஜெயிக்கவும், நான் உலகத்தான் அல்ல என்பதையும் நினைவு கொண்டவனாய் யோபு உடன்படிக்கை செய்தான்,
Job 31:1 என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
எத்தனை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இப்போதுள்ள பாஸ்டர்கள் இப்படி உடன்படிக்கை செய்ய முடியும்,
காதல் என்னும் மாய வலையில் அனைவரையும் சிக்க வைப்பதற்காகவே சத்துருவானவன் பெண்ணை எப்படி உபயோகப்படுத்துகிறான்?
Ecc 7:26 கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
இதனால் தான் பவுல் அன்று தன் நிருபங்களில் கூறினார்,
1Co 7:27 நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால், மனைவியைத்(காதலியைத்) தேடாதே.
நாம் அனைவ்ரும் இந்த இறுதிக் கட்டத்தில் நினைவில் வைக்க வேண்டியது,
Rev 12:12 ...பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்...
இதற்கு அவன் எடுத்திருக்கும் ஆயுதங்களில் ஒன்றுதான் காதல் என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும், இதனை எச்சரிக்கும் விதமாகத் தான் யாக்கோபு தன் நிருபங்களில் கூறினார்,
.Jam 1:14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
Jam 1:15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!எச்சரிக்கை!!!
Pro 16:25 மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Rev 10:6 இனி காலம் செல்லாது;...
காதலிக்க நேரமில்லை...
Mat 9:37 ...அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
ஆயத்தப்படு!ஆயத்தப்படுத்து!
நன்றி: இயேசு சீக்கிரம் வருகிறார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum