அழுகையின் சுவர்
Wed Aug 14, 2013 6:14 pm
கிமு-1012ம் ஆண்டளவில் சாலமோன் அரசன் மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஓர்னானின் களம் என்னுமிடத்தில் கர்த்தருக்கென்று தேவாலயத்தை கட்டினான்.
இத்தேவாலயம் கிமு-586 இல் நேபுகாத்நேச்சர் என்னும் பாபிலோனிய மன்னனால் இடித்துப் போடப்பட்டது.
மீண்டும் இத்தேவாலயம் கிமு-536 இல் செருபாபேலின் தலைமையில் கட்டத்துவங்கப்பட்டு கிமு-519 இல் கட்டி முடிக்கப்பட்டது.
அவ் இரண்டாம் தேவாலயம் ஏரோது மன்னனால் கி.பி-19 அல்லது கி.பி-20ல் அழகு படுத்தப்பட துவக்கப்பட்டு 45 வருடங்களில் முற்றங்கள், சுற்றுக்கூடங்கள், அறைகள் முதலியன கட்டப்பட்டன. இயேசுக் கிறிஸ்துவின் காலத்திலிருந்த தேவாலயம் அதுதான்.
என்றாலும் இயேசுக் கிறிஸ்துவின் முன்னறிவிப்பின்படி (மத். 24.2) அந்த இரண்டாம் தேவாலயம் கி.பி-135ல் ரோமரால் இடிக்கப்பட்டது. ஆகிலும் சுற்றுச் சுவரில் (Retaining Wall) ஒரு சிறு பகுதி இடிக்கப்படாமல் தப்பியது.
இச்சுவர் யூதரால் ஒரு புனித சின்னமாக கருதப்பட்டு, யூதர்கள் அச்சுவர் அருகே போய் அழுது ஜெபம் செய்வர். தங்கள் ஜெபவிண்ணப்பங்களையும் தாள்களில் எழுதி அச்சுவரிலுள்ள சந்துகளில் சொருகி வைத்துவிடுவர்.
தங்களுடைய தேவாலயம் இடிக்கப்பட்டு இப்பொழுது ஆராதனை செய்யவும், பலி செலுத்த முடியாமலிருப்பதையும் நினைத்து ஜனங்கள் இந்த மதிலில் தங்கள் தலைகளை முட்டி அழுது ஜெபம் செய்கிற படியால் இம் மதிலுக்கு அழுகையின் மதில் (Wailing Wall) என்று பெயர் வந்தது.
1948 வருடம் இஸ்ரேல் சுதந்திரம் அடைந்தபொழுது இப்பகுதி யோர்தான் நாட்டிற்கு போய்விட்டது. ஆகையால் யூதர் இப்பகுதிக்கு போகாதபடி தடுக்கப்பட்டனர்.
மீண்டும் 1967 ஜீன் மாதம் 6 நாள் யுத்தத்தில் முழு எருசலேமும் யூதர் கைக்கு வந்தது. அது முதல் யூதர் அங்கு போய் சுதந்திரமாக ஜெபம் செய்கின்றனர்.
அழுகையின சுவரும், பிற்காலத்தில் கட்கப்பட்ட மதில்களும்,வாசல்களும்
மேலே இருக்கும் படத்தில் மனிதர்கள் நின்று ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கும் சுவர்தான் ஏரோது ராஜா கட்டிய ஆலயத்தில் இடிக்கப்படாமல் மீந்திருக்கும் வெளிப்புற சுவர் பகுதி.
முன்னால் தெரியும் மதிலும் அரைவட்டமாய் காணப்படும் வாசலும் பிற்காலத்தில் கட்டப்பட்டவை
ஜெபம் பண்ணுகிற ஆட்களின் தலைக்கு மேல் வளர்ந்து காணப்படுவது சுவரில் முளைத்து சுத்திகரிப்புக்கு உபயோகப்படுத்தும் ஈசோப்புச் செடி (1இராஜாக்கள் 4.33) (சங்கீதம் 51.7) (Source: Prophetic Roundup- july-sept. 88)
இந்த அழுகையின் மதில் ஏரோது மன்னன் புதுப்பித்து கட்டிய தேவாலயத்தின் மதில்கள் பலமாயிருப்பதற்கு கட்டப்பட்ட ஒட்டுச் சுவரின் (Retaining Wall) ஒரு பாகமாகும். இதில் சில கற்கள் 14மீட்டர் நீளம்(453/4அடி), 3மீட்டர் உயரம்(93/4அடி), 2மீட்டர் அகலமுள்ளவைகளும்(61/2அடி), 300டன் நிறையுள்ளவைகளாயும் இருக்கின்றன.
அக்காலத்தில் இவ்வளவு பெரிய கனமான பாறைகளை எப்படி கொண்டு வந்து கட்டினார்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்று தற்கால கட்டக்கலை நிபுணர்கள் கருதுகின்றனர்.
தொகுப்பு Robert Dinesh
(source இஸ்ரவேல் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்) (Source: News from lsrael, June 1988)
நன்றி: ஹை கிறிஸ்டியன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum