MS-WORD ல் Watermark னை உருவாக்குவது எப்படி?
Tue Aug 13, 2013 10:48 pm
மைக்ரோசாப்ட் வேர்ட்டில் Watermark னை உருவாக்க பலருக்கும் தெரிந்திருக்கலாம், எனினும் புதியவர்களுக்காக இந்த பதிவு, இந்த வாட்டர்மார்க் மூலம் என்ன பயன் என்றால், இதன் மூலம் எந்த ஒரு திருட்டுதனமான ஒரு தனிமனிதனின் எழுத்து உரிமையினை காக்க முடியும். அலுவலக் சம்பந்தமான டாக்குமென்ட்களில் வாட்டர்மார்க் உருவாக்குவதன் மூலம், பிறர் அதனை எடுத்து உரிமை கொண்டாடுவதை தடுக்க முடியும். வட்டர்மார்க்கினை நாம் எழுத்து (TEXT), படம் ஆகியவற்றை கொண்டு உருவாக்க முடியும்.
வாட்டர்மார்க்கினை உருவாக்க முதலில் Word னை ஒப்பன் செய்ய வேண்டும். பின் Page Layout னை தேர்வு செய்யவும்.
Watermark என்பதை தேர்வு செய்யவும். அதில் Custom Watermark என்பதை தேர்வு செய்யவும்.
அதில் உங்கள் விருப்பம் போல் படம் அல்லது எழுத்து வாட்டர்மார்கினை உருவாக்க முடியும். இனி உங்களின் டாக்குமென்ட்களை யாராலும் எடுத்து பயன்படுத்த முடியாது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum