பருந்து மனிதனுக்கு தரும் பாடம்
Sat Aug 03, 2013 2:59 pm
பருந்து மனிதனுக்கு தரும் பாடம் - வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வலிகள் பல நிறைந்ததுதான் வாழ்க்கை.
ஒரு பருந்துக்கு ஆயட்காலம் எழுபது வருடங்கள். ஆனால் நற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன. அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர்வடைந்து போவதில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக மலைக்குப் பறந்து செல்லுமாம். அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து விடுமாம். சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்துவிடும். பின்பு அந்த அலகால் தனது கால் நகங்களையும் இறக்கைகளையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம். அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம்.
நன்றி: தமிழால்...
Re: பருந்து மனிதனுக்கு தரும் பாடம்
Mon Jan 13, 2014 9:21 am
நானும் என் சிறுவயதில் சில பிரசங்கிமார்கள் இவ்வாறு சொல்லுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு இதுசம்பந்தமான நேரடியான ஆதார விளக்கம் தர வேண்டும்.
Re: பருந்து மனிதனுக்கு தரும் பாடம்
Tue Jan 14, 2014 12:12 am
சகோதரரர் அரியலூர் சாம் அவர்களுக்கு ... ஸ்தோத்திரம்.
தாங்கள் நமது தளத்தை தொடர்ந்து உபயோகித்து வருவது மகிழ்ச்சி.
தாங்கள் தொடர்ந்து இணைந்திருக்க விரும்புகிறேன்.
தங்களைப்போல நானும் இச்செய்தியை செவி வழியாகக் கேட்டதுதான்.
மேலே கொடுக்கப்பட்ட தகவல் - தமிழால் இணைவோம் - என்ற முகநூலில் வந்த கட்டுரையை அப்படியே பதிவிட்டேன்.
பறவைகளைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் (டிஸ்கவரி அல்லது ஜியாகிராஃபிக்) கழுகை பற்றி ஒரு தொகுப்பை வெளியிட்டிருந்ததை கண்டேன்.
அதில் ஒரு கழுகு வயதானபோது, மலை உச்சிக்குபோய் தன் சிறகுகளை உதிர்த்து, சிறகற்ற பறவையாக தனித்து இருக்கிறது. மலையின் உச்சியில் உள்ள சிறுசிறு பு+ச்சிகளை பிடித்து, ஓணான்களை பிடித்து சாப்பிட்டு சில மாதங்கள் உயிர் வாழ்கிறது. பின்பு, அதன் உடலில் மீண்டும் புதிய சிறகுகள் முளைத்து புத்துயிர் பெற்று பறந்து செல்லும் காட்சியை ஒரு பறவை ஆராய்ச்சியாளர் படம் பிடித்து ஒளிபரப்பியதை கண்டேன்.
வேறு ஆதாரம் என்னிடம் இல்லை. வாய்ப்பு கிடைத்தால், மறுஒளிபரப்பு செய்தால், அதை நான் மீண்டும் காண நேர்ந்தால் எனது கேமராவில் படம் பிடித்து வெளியிட முயற்சிக்கிறேன்.
நன்றி

Tue Jan 14, 2014 7:25 am
நன்றி. நானும் இணையதளங்களில் முயற்சிக்கிறேன்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum