வாழ்க்கைப் பாடம் - 1
Thu Sep 05, 2013 10:57 pm
பிணம் தின்னி கழுகுகளுக்கு பார்வை மிக கூர்மையானது . அதனால்தான் அவ்வளவு உயரத்தில் பறக்கும் போதும் தன் உணவை கண்டு கொள்ள முடிகிறது என்று பலரும் நினைக்கிறார்கள் !
உண்மை என்னவென்றால் ...
கழுகுகள் பல அடுக்குகளில் பறக்கும் . கீழ் மட்டத்தில் அதிக எண்ணிக்கையிலும் அதற்கு அடுத்த மட்டத்தில் அதைவிட குறைவான எண்ணிக்கையிலும் அதற்கு மேல் இன்னும் குறைவாகவும் இப்படியே அடுத்தடுத்து வட்டமிட்டுக் கொண்டு இருக்கும் .கீழ் மட்டத்தில் பறக்கும் கழுகுகள் தரையில் தேடுவதுடன் தனக்கு அருகிலும் மேலேயும் பறக்கும் கழுகுகள் மீது கண் வைத்துக் கொண்டு இருக்கும் . மேலே பறக்கும் கழுகுகள் தனக்கு கீழே பறக்கும் கழுகுகள் மீது கண் வைத்து இருக்கும் . எங்கேயாவது ஒரு கழுகு கீழே இறங்கினால் உடனே அதை நோட்டமிட்டுக் கொண்டு இருந்த கழுகுகள் அங்கே விரையும் . இப்படியே அனைத்து கழுகுகளும் அங்கு குவிந்து விடும் !!
வாழ்க்கையிலும் இப்படித்தான் !!
சிலர் மற்றவர்களை கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் தங்களின் இலக்கை அடைகிறார்கள்!!!
நன்றி: தமிழால்...
Re: வாழ்க்கைப் பாடம் - 1
Fri Sep 06, 2013 6:07 pm
ஒரு அறிவாளி தன்னைச் சூழ
அமர்ந்திருந்தவர்களுக்கு ஒரு நகைச்சுவை கூறினான்.
அனைவரும் நீண்டநேரம் கைதட்டிச் சிரித்தனர்.
பின்னர் மீண்டும் அவன் அதே நகைச்சுவையை கூறினான். அப்போதும் பலர் கைதட்டிச்சிரித்தனர்.
மீண்டும் அதே நகைச்சுவையை அவன் சொன்னான். அப்போது சிலர் மட்டும் சிரித்தனர்.
மீண்டும் அவன் அதே நகைச்சுவையைச் சொன்னபோது எவரும் சிரிக்கவில்லை.
அப்போது அந்த அறிவாளி சொன்னான் ஒரு நகைச்சுவையை மீண்டும் மீண்டும் சொல்லும்போது தொடர்ந்து உங்களால் சிரித்து மகிழமுடியவில்லை
அல்லவா? ஆனால் எதற்காக நாம் எல்லோரும்
வாழ்வில் நடந்த ஒரு சில துன்பங்களை மட்டும் மீண்டும் மீண்டும் நினைத்து கவலைப்படுகிறோம்?
இதேபோல ஒரு துன்பதிற்காக வாழ்நாள் முழுவதும் எதற்காக கவலைகொள்ளவேண்டும் ??

Permissions in this forum:
You cannot reply to topics in this forum