புலிக்கு சிறகு இருந்தால் ...?
Thu Aug 01, 2013 11:49 pm
****** புலிக்கு சிறகு இருந்தால் ? ******
புலியை படைத்ததற்காக கடவுளை திட்டாதீர்கள். அதற்கு இறக்கை கொடுக்கவில்லையே என சந்தோஷப்படுங்கள்.
ஒரு மனிதன் காடு வழியே பயணம்
மேற்கொண்டிருந்தான் நெடுந்தூரம் பயணித்த களைப்பில் ஓய்வு தேவைப்பட்டது. உடனே ஒரு ஆலமரத்தின் கீழ் துண்டை விரித்துப்படுத்தான்.
அந்த மரத்துக்கு பக்கத்திலேயே ஒரு பரங்கி செடி படர்ந்து விரிந்து பசுமையாக காட்சியளித்தது. மிகப்பெரிய பரங்கி பழம் ஒன்றும் அதில் காய்த்து தரையைத் தொட்டபடி கிடந்தது.
அந்த மனிதனுக்கு மனதுக்குள் ஒரு எண்ணம் தோண்டியது "இவ்ளோ பெரிய ஆலமரம் வளர்ந்து கிடக்கு. ஆனா இதோட பழம் எவ்ளோ சின்னது. ஆனால் இந்த சின்ன பரங்கி செடியில் எவ்ளோ பெரிய பழம் பழுத்து கிடக்கு. இது கடவுளுடைய வஞ்சகம் என்று யோசித்த படியே தூங்கி விட்டான்.
சற்று நேரத்தில் வீசிய காற்றில் ஆல மரத்திலிருந்து உதிர்ந்த ஒரு சின்ன பழம் அம்மனிதன் மீது "சொத்'தென்று விழுந்தது. பதறி எழுந்த அவனுக்கு திடீரென தன் அறியாமை பற்றி ஞானம் வந்தது. "அடடா கடவுளைகுறைசொல்லிவிட்டேனே.... இந்த சின்ன பழம் விழுந்ததுக்கே இப்படி வலிக்கிறதே அவ்வளோ பெரிய பரங்கிப் பழம் விழுந்திருந்தால் நான் செத்தேப் போயிருப்பேனே... கடவுளே மன்னிச்சுக்கப்பா..." என்றபடியே கடவுளுக்கு நன்றி சொல்லி பயணத்தை தொடர்ந்தான்
ஆம் நண்பர்களே, கடவுள் படைப்பில் எதுவுமே குறையில்லை. காரணமின்றி எதையும் கடவுள் படைப்பதில்லை.
புலியை படைத்ததற்காக கடவுளை திட்டாதீர்கள். அதற்கு இறக்கை கொடுக்க வில்லையே
என சந்தோசப்படுங்கள்.
...... தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது..." ஆதியாகமம் 1:31
"தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல." I தீமோத்தேயு 4:4

நன்றி: சி.ஜே.ஷீபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum