அவ்வளவு சக்தி இருந்தால்...
Sun Mar 03, 2013 9:33 pm
ஒரு சாமியாரின் செருப்பு அறுந்து விட்டது.செருப்புத் தைப்பவனிடம் சென்று அதைத் தைத்துக் கொடுக்கச் சொன்னார்.
''இப்போது இருட்டி விட்டது.நாளை காலை வந்தால் தைத்துத் தருகிறேன்.''என்றான் அவன்.
''இப்போதே தைத்துக் கொடுக்க வேண்டும்.இல்லாவிடில் உன் வாய் அடைத்துப் போகும்படி சாபம் கொடுப்பேன்.''என்று பயமுறுத்தினார் சாமியார்.
''உமக்கு அவ்வளவு சக்தி இருந்தால் அறுந்து போன செருப்பை சாபம் போட்டு
ஒட்டி வைத்துக் கொள்வது தானே?''என்று சொல்லி விட்டுப் போனான், செருப்புத்
தைப்பவன்.
"உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்கும் நல்லதையே
செய்யுங்கள். அவர்களுக்கு நல்லதைக் கூறுங்கள். அவர்களை சபிக்காதீர்கள்."
ரோமர் 12:14
"...... காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது." நீதிமொழிகள் 26 : 2
நன்றி,: முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum