பத்திரமாக கரை சேர்ப்பார்
Thu Aug 01, 2013 11:27 pm
****** பத்திரமாக கரை சேர்ப்பார் ******
ஒருநாள் ஒரு மனிதர் பேருந்து ஒன்றில் பயணம் செய்தார்.அப்பேருந்து காட்டு வழியில் சென்று கொண்டிருந்தது.பயணம் மிக அருமையாக இருக்கவே அவர் மகிழ்ச்சி அடைந்தவராய் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார்.
சில மணிநேரங்களுக்குப் பின் பேருந்து கரடு முரடான பாதைகளில் செல்ல ஆரம்பித்தது.அவர் இதயம் வேகமாக அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. சற்று நேரத்தில் பேருந்து முன் பாதையே இல்லை, மாறாக பெரிய பள்ளம் இருந்தது.
பாதையை மழை அடித்துச் சென்றிக்க வேண்டும். கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து அப்பள்ளத்தில் இறங்கியது. அவர் மனம்அவரிடம் இன்றோடு உன் கதை முடிந்தது என்று கூறியது. ஏனென்றால் அவர் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
பயத்தின் மிகுதியால் அவர் கண்களை இறுக மூடிக்கொண்டார். பின்பு அவர் கண்களைத் திறந்த போது அப்பேருந்து பத்திரமாக இருந்தது.எந்த சேதமும் இல்லாமல் அப்பேருந்தை ஓட்டுனர் இறக்கியிருந்தார்.
எவ்வளவு ஆச்சரியம்! மகிழ்ச்சியுடன் அவர் வலப்பக்கத்தில் இருந்தவரை பார்த்தார்.அங்கே ஓட்டுனர் அமர்ந்திருந்தார்?புன்னகையுடன்!
ஆம்! எவ்வளவு ஆச்சரியம்!அவர் உள்ளம் அந்த ஓட்டுனரைப் பார்த்து ஆரவாரம் செய்தது.முடிவில் யார் அவர் என்ற வினா எழுந்தது .
யார் அவர்?
"மனித குமாரன்".
நன்றி: சி.ஜே.ஷீபா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum